Turmeric Soup | பொங்கலுக்கு மஞ்சள் வாங்கிட்டீங்களா? நோய் எதிர்ப்பு திறனை கூட்டும் பசுமஞ்சள் சூப் ரெசிப்பி இதுதான்..
Turmeric Soup Recipe: கொரோனா உடல்நலனில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என மீண்டும் மீண்டும் புரியவைத்திருக்கிறது.
கொரோனா தொற்றானது உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களையும் அச்சுறுத்தி வருகிறது. மூன்றாவது அலை வந்து ஒமிக்ரான் தொற்று மிக வேகமாக உயர்ந்து வருகிறது. கொரோனா தொற்று பரவலுக்கும் நமது உடலின் எதிர்ப்பு சக்திக்கும் இடையே பெரிய தொடர்புள்ளது. நமது உடல் இயற்கையாகவே பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு எதிராக உடலை பாதுக்காக்கும் திறனை கொண்டுள்ளது. எனினும், தொற்றை தடுப்பதிலும், தொற்று ஏற்பட்டால் அதை எதிர்கொள்வதிலும் நமது உணவுப் பழக்கமும், சரியான உணவுப் பொருட்களும் மிக முக்கியமாக பங்கை வகிக்கிறது.
பொங்கல் பண்டிகையைக் கொண்டாட எல்லார் வீட்டிலும் பசுமஞ்சள் வாங்கி வைத்திருப்பீர்கள். இனிமேல் இந்த பசுமஞ்சள் வாங்குவதை எப்படி நிரந்தர பழக்கமாக மாற்றலாம் என்பதைப் பார்க்கலாம்.
மருத்துவ மதிப்பு வாய்ந்த ஒரு பொருளாக கருதப்படும் மஞ்சள் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆண்டிசெப்டிக் பண்புகளை கொண்டுள்ளது. மேலும் நீங்கள் சமீபத்தில் தடுப்பூசி போட்டிருந்தால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை இன்னும் மேம்படுத்த இந்த சூப் உதவலாம். எனவே பசுமஞ்சள் சூப் செய்யும் முறையை தெரிந்துகொள்ளலாம்
தேவையான பொருட்கள்
நெய்- 01 தேக்கரண்டி
நறுக்கிய வெங்காயம்- 01
நறுக்கிய பூண்டு- 01 தேக்கரண்டி
அரைத்த மஞ்சள்- 02
அரைத்த இஞ்சி- 02
நறுக்கிய கேரட்- 03
நறுக்கிய காய்கறி- 04 கப்
எலுமிச்சை- 01
செய்முறை:
முதலில் ஒரு வானலியை எடுத்து அதில் நெய்யை விட்டு சூடாக்கவும். பின்னர் அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
பிறகு துண்டு பொடியாக நறுக்கிய பூண்டு, புதிதாக அரைத்த பசுமஞ்சள், இஞ்சி ஆகியவற்றை சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக வதக்கவும்.
பிறகு அதில் கேரட் சேர்த்து மீண்டும் வதக்கவும். அடுத்து காய்கறிகளை சேர்த்து அதோடு தண்ணீர் விட்டு 20 நிமிடங்கள் நன்றாக மென்தீயில் வேக வைக்கவும்.
ஒரு blender அல்லது மத்து போன்ற கரண்டியின் உதவியுடன் சூப்பை நன்கு கலக்கவும். கேரட் மற்றும் காய்கறிகள் நன்கு வெந்துவிட்டதா என சரிபார்த்து, இறுதியாக இறக்கும்போது எலுமிச்சையை பிழிந்தால் சூப் ரெடி.
இந்த சூப் உகந்ததாக குளிர்காலத்துக்கும் இருக்கும். இரவு உணவிற்கு முந்தைய உணவாக இதை எடுத்துக்கொள்ளலாம். இது ஜீரணத்துக்கும் துணைபுரியும்.
மேலும் படிக்க: பொங்கல் டெஸ்ட் கிரிக்கெட் தெரியுமா? 62 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் தொடங்கிய பாரம்பரிய போட்டி!
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )