மேலும் அறிய

Pongal Test: பொங்கல் டெஸ்ட் கிரிக்கெட் தெரியுமா? 62 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் தொடங்கிய பாரம்பரிய போட்டி!

62 ஆண்டுகளுக்கு முன்பாக இதேநாளில் சென்னை சேப்பாக்கத்தில் முதல் பொங்கல் டெஸ்ட் நடைபெற்றது.

பண்டிகை நாட்கள் அல்லது அதற்கு அருகிலுள்ள நாட்களில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றால் அதனை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பார்கள். அதுவும் கிரிக்கெட் போட்டிகள் என்றால் சொல்லவே வேண்டாம் பலர் பண்டிகை விடுமுறையில் நேரடியாக கிரிக்கெட் பார்க்க ஆசையுடன் செல்வார்கள். இவ்வாறு பண்டிகை விடுமுறைகளை குறிவைத்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் எப்போதும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த நாடுகளுக்கு முன்பாகவே இந்தியாவில் நியூ இயர் மற்றும் பொங்கல் டெஸ்ட் போட்டிகள் இருந்தது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? அதிலும் குறிப்பாக முதல் பொங்கல் டெஸ்ட் எப்போது எந்த அணிக்கு எதிராக நடைபெற்றது தெரியுமா? 

முதல் பொங்கல் டெஸ்ட்: 

1960ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் தேதி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக முதல் பொங்கல் டெஸ்ட் நடைபெற்றது. இதில் இந்திய கேப்டனாக ராம்சந்த் இருந்தார். ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ரிச்சி பெனாட் இருந்தார். இந்த முதல் பொங்கல் டெஸ்ட்டில் இந்திய அணி படு தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தது. ஒவ்வொரு பொங்கல் டெஸ்ட் போட்டியும் தொடங்குவதற்கு முன்பாக டாஸ் போடும் போது ஸ்டெம்ப் பக்கத்தில் இரண்டு கரும்புகள் நிற்க வைக்கப்பட்டிருக்கும். இவை பொங்கல் டெஸ்ட் என்பதற்கான அடையாளமாக கருதப்படும்.

Pongal Test: பொங்கல் டெஸ்ட் கிரிக்கெட் தெரியுமா? 62 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் தொடங்கிய பாரம்பரிய போட்டி!
1960ஆம் ஆண்டு சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் பொங்கல் டெஸ்ட்

1988ஆம் ஆண்டு நடைபெற்ற கடைசி பொங்கல் டெஸ்ட் இந்தியாவிற்கு மிகவும் சிறப்பானதாக அமைந்தது. அந்தப் போட்டியில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் அறிமுக வீரராக களமிறங்கிய நரேந்திர ஹிர்வானி இரு இன்னிங்ஸிலும் தலா 8 விக்கெட் கைப்பற்றி சுழல் மாயஜாலம் நிகழ்த்தினார். தற்போது வரை அறிமுக வீரராக இந்தியாவிற்காக களமிறங்கிய டெஸ்ட் போட்டியில் ஒரு வீரர் எடுத்த அதிக விக்கெட் இதுவேயாகும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த பொங்கல் டெஸ்ட் போட்டி 1988ஆம் ஆண்டிற்கு பிறகு நடைபெறவில்லை. மொத்தமாக 1960 முதல் 1988 வரை 12 பொங்கல் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றன. இதன்பின்னர் பிசிசிஐ தனது டெஸ்ட் மைதானங்களை சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்க ஆரம்பித்தது. இதனால் ஜனவரி மாதத்தில் சென்னையில் டெஸ்ட் போட்டிகள் நடைபெறவில்லை.

Pongal Test: பொங்கல் டெஸ்ட் கிரிக்கெட் தெரியுமா? 62 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் தொடங்கிய பாரம்பரிய போட்டி!
கடைசி பொங்கல் டெஸ்டில் அறிமுக வீரராக களமிறங்கிய நரேந்திர ஹிர்வானி

ஆனால் பொங்கல் டெஸ்டிற்கு பிறகு ஆஸ்திரேலியாவில் பிரபலம் அடைந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி தற்போது வரை நடைபெற்று வருகிறது. 1975ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாள் முதல் பாக்சிங் டே டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அதன்பின்னர் 1981ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் அட்டவணையில் இந்தப் போட்டி ஒவ்வொரு ஆண்டும் இடம்பெற்று வருகிறது. இதேபோல மீண்டும் பொங்கல் டெஸ்ட் போட்டியை நடத்த வேண்டும் என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் எண்ணமாக உள்ளது. 62ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அடுத்த ஆண்டு முதல் பொங்கல் டெஸ்ட் நடைபெறும் என்று நாம் நம்புவோம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin TNSWA: ஆணையத்திற்கு வயது 6, ஆனால் செய்த வேலை 0 - அறிவிப்பை வெளியிடுவாரா முதலமைச்சர் ஸ்டாலின்?
CM Stalin TNSWA: ஆணையத்திற்கு வயது 6, ஆனால் செய்த வேலை 0 - அறிவிப்பை வெளியிடுவாரா முதலமைச்சர் ஸ்டாலின்?
Vijayalakshmi on Seeman: வந்தது கோபம்...பிடி சாபம்... சீமானுக்கு விஜயலட்சுமி விட்ட சாபம் என்ன தெரியுமா.?
வந்தது கோபம்...பிடி சாபம்... சீமானுக்கு விஜயலட்சுமி விட்ட சாபம் என்ன தெரியுமா.?
WPL 2025 Schedule: என்னப்பா ரெடியா..! மகளிர் பிரீமியர் லீக் - 5 அணிகள், 22 போட்டி விவரங்கள் - எங்கு, எப்போது? டிக்கெட், நேரலை
WPL 2025 Schedule: என்னப்பா ரெடியா..! மகளிர் பிரீமியர் லீக் - 5 அணிகள், 22 போட்டி விவரங்கள் - எங்கு, எப்போது? டிக்கெட், நேரலை
BJP-ADMK Alliance On: அண்ணாமலைதான் தலைவர்.. அதிமுக கூட்டணியும் உண்டு.. பாஜகவின் மாஸ்டர் பிளான்
அண்ணாமலைதான் தலைவர்.. அதிமுக கூட்டணியும் உண்டு.. பாஜகவின் மாஸ்டர் பிளான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamil Man American Woman Marriage : காஞ்சி பட்டில் அமெரிக்க பெண்கரம்பிடித்த தமிழ்நாட்டு இளைஞர்..களைகட்டிய கல்யாணம்VCK vs Police : போராட்டம் செய்த விசிக..குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ் கடும் தள்ளுமுள்ளுADGP Kalpana Nayak issue | ADGP கல்பனா அலுவலக தீ விபத்துபேச விடாத எதிர்க்கட்சியினர்! கடுப்பாகி எழுந்த அமைச்சர்! கண்டித்த சபாநாயகர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin TNSWA: ஆணையத்திற்கு வயது 6, ஆனால் செய்த வேலை 0 - அறிவிப்பை வெளியிடுவாரா முதலமைச்சர் ஸ்டாலின்?
CM Stalin TNSWA: ஆணையத்திற்கு வயது 6, ஆனால் செய்த வேலை 0 - அறிவிப்பை வெளியிடுவாரா முதலமைச்சர் ஸ்டாலின்?
Vijayalakshmi on Seeman: வந்தது கோபம்...பிடி சாபம்... சீமானுக்கு விஜயலட்சுமி விட்ட சாபம் என்ன தெரியுமா.?
வந்தது கோபம்...பிடி சாபம்... சீமானுக்கு விஜயலட்சுமி விட்ட சாபம் என்ன தெரியுமா.?
WPL 2025 Schedule: என்னப்பா ரெடியா..! மகளிர் பிரீமியர் லீக் - 5 அணிகள், 22 போட்டி விவரங்கள் - எங்கு, எப்போது? டிக்கெட், நேரலை
WPL 2025 Schedule: என்னப்பா ரெடியா..! மகளிர் பிரீமியர் லீக் - 5 அணிகள், 22 போட்டி விவரங்கள் - எங்கு, எப்போது? டிக்கெட், நேரலை
BJP-ADMK Alliance On: அண்ணாமலைதான் தலைவர்.. அதிமுக கூட்டணியும் உண்டு.. பாஜகவின் மாஸ்டர் பிளான்
அண்ணாமலைதான் தலைவர்.. அதிமுக கூட்டணியும் உண்டு.. பாஜகவின் மாஸ்டர் பிளான்
TN Railway: ஜாக்பாட்..! தமிழ்நாட்டில் வந்தே மெட்ரோ திட்டம் - ரூ.6,626 கோடி பட்ஜெட், 22 புதிய ரயில் வழித்தடங்கள், எங்கெங்கு?
TN Railway: ஜாக்பாட்..! தமிழ்நாட்டில் வந்தே மெட்ரோ திட்டம் - ரூ.6,626 கோடி பட்ஜெட், 22 புதிய ரயில் வழித்தடங்கள், எங்கெங்கு?
அய்யய்யோ! தூக்கில் தொங்கிய கபாலி பட தயாரிப்பாளர் - என்னப்பா சொல்றீங்க?
அய்யய்யோ! தூக்கில் தொங்கிய கபாலி பட தயாரிப்பாளர் - என்னப்பா சொல்றீங்க?
CM Stalin: மறந்துட்டீங்களா முதல்வரே..! திமுக அரசின் அறிவிப்பால் கொதித்தெழும் மக்கள் - ஸ்டாலின் சொன்ன பொய்?
CM Stalin: மறந்துட்டீங்களா முதல்வரே..! திமுக அரசின் அறிவிப்பால் கொதித்தெழும் மக்கள் - ஸ்டாலின் சொன்ன பொய்?
சீமானுக்கு செருப்படி! சைதாப்பேட்டையில் நடந்த பகீர் சம்பவம் - என்ன நடந்தது?
சீமானுக்கு செருப்படி! சைதாப்பேட்டையில் நடந்த பகீர் சம்பவம் - என்ன நடந்தது?
Embed widget