Beautiful waterfalls: இந்தியாவில் உள்ள அழகான 10 நீர்வீழ்ச்சிகள்! இதோ பட்டியல்!
இந்தியாவில் உள்ள அழகான 10 நீர்வீழ்ச்சிகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
மக்கள் பலரும், அருவிகளுக்கு சுற்றுலா செல்லுவதை விரும்புவர். அவர்களுக்காக அழகான மற்றும் கண்கவர் 10 நீர்வீழ்ச்சிகள்.
1. துத்சாகர் நீர்வீழ்ச்சி:
துத்சாகர் நீர்வீழ்ச்சி கோவாவில் மண்டோவி ஆற்றில் உள்ளது. 1017 அடி உயரத்தில் உள்ள துத்சாகர் அருவி இந்தியாவின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும். குறிப்பாக மழைக்காலங்களில், நீர்வீழ்ச்சி நிரம்பி வழியும் போது, இந்த நீர்வீழ்ச்சி கண்கொள்ளா காட்சியாக இருக்கும். உயரத்திலிருந்து கீழே விழும் நீர், மேகங்களை உருவாக்கி, அழகியல் காட்சியை உருவாக்குகிறது.
2. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி:
மழைக்காலத்தை சிறப்பாகக் கழிக்க ஏற்ற இடமான அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி கேரளாவின் மிகப்பெரிய அருவியாகும். இந்தியாவிலன் நயாகரா' என்றும் அழைக்கப்படுகிறது.
3.ஜோக் நீர்வீழ்ச்சி:
ஜோக் நீர்வீழ்ச்சி ஷிமோகா மற்றும் உத்தர கன்னடா மாவட்ட எல்லையில் அமைந்துள்ள இந்தியாவின் இரண்டாவது உயரமான நீர்வீழ்ச்சி ஆகும்.
4.நோகலிகை நீர்வீழ்ச்சி:
இந்தியாவின் மிக ஈரமான இடமான சிரபுஞ்சியை அடிப்படையாகக் கொண்டது. 335 மீ உயரமுள்ள நீர்வீழ்ச்சியானது, பாறைகளில் இடியுடன் கூடிய சத்தத்துடன் தரையை வந்தடைகிறது.
5.ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி:
தமிழ்நாட்டில் உள்ள ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியானது, காவிரி ஆற்றினால் உருவாகிறது.
6.போகோதா நீர்வீழ்ச்சி:
போகதா நீர்வீழ்ச்சி தெலுங்கானா மாநிலம், முலுகு மாவட்டத்தில், அமைந்துள்ள நீர்வீழ்ச்சியாகும்.
7.சுருளி நீர்வீழ்ச்சி:
சுருளி நீர்வீழ்ச்சியானது, தமிழ்நாட்டில் உள்ள தேனி மாவட்டத்தில் உள்ளது. நீராட ஏதுவாக இந்த நீர்வீழ்ச்சியானது அமைந்துள்ளதால், பலரும் விரும்பி செல்லும் இடமாக உள்ளது.
8.ரன்பட் நீர்வீழ்ச்சி:
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ரத்னகிரி உக்ஷிக்கு அருகில் உள்ள ரன்பட் நீர்வீழ்ச்சியானது, ரயிலில் செல்லும் பணிக்கு கண்கவர் காட்சியாக உள்ளது
9.ஹண்ட்ரு நீர்வீழ்ச்சி:
ஹண்ட்ரு நீர்வீழ்ச்சியானது, இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நீர்வீழ்ச்சி ஆகும். இது இந்தியாவின் 34வது உயரமான நீர்வீழ்ச்சியாகும். இது இப்பகுதியில் உள்ள மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.
10.நம்பி நீர்வீழ்ச்சி:
நம்பி நீர்வீழ்ச்சியானது, சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிஜாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மிக அழகான மற்றும கவர்ச்சிகரமான தோற்றமானது மக்களை இழுக்கும் சக்தியை கொண்டுள்ளது.