Cooking Tips: பால் பொங்கி கீழே வழியாமல் இருக்க டிப்ஸ்...2 வாரங்கள் வரை பயன்படுத்தக்கூடிய ஈசி தொக்கு ரெசிபி..
பயனுள்ள கிச்சன் மற்றும் சமையல் குறிப்புகளைப் பார்க்கலாம்.
குளிர்சாதனப் பெட்டியின் உள்பாகத்தை மட்டும் அல்ல வெளிப்புறத்தையும் நாம் பயனுள்ளதாக பயன்படுத்த முடியும். அதற்கு மேக்னேட் ஹூக்ஸ்களை வாங்கி குளிர்சாதனப் பெட்டியின் மீது ஒட்டவைத்து அதில் நாம் கடைக்கு எடுத்துச் செல்ல பயன்படுத்தும் பை உள்ளிட்டவற்றை மாட்டி வைத்துக் கொள்ளலாம்.
தீய்ந்துபோன ஸ்டீல் கறையை போக்க
வீட்டில் ஸ்டீட் கடாய், ஸ்டீல் பாத்திரம் உள்ளிட்டவை விடப்பிடியான தீக்கரை படிந்து காட்சி அளிக்கும். இதை ஸ்கிரப்பர் வைத்து எவ்வளவு தேய்த்து கழுவினாலும் போகாது. அப்படிப்பட்ட கறையை மிக எளிதாக போக்க, க்ரைண்டிங் ஸ்பான்ச் கொண்டு வழக்கமாக பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் லிக்விட் அல்லதை சோப்பில் தொட்டு தேய்க்க வேண்டும்.பின் தண்ணீரில் கழுவினால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். ஆம் கறை காணாமல் போயிருக்கும்.
ஈசி தொக்கு
300 கிராம் சின்ன வெங்காயம், 100 கிராம் அளவு பூண்டு, தேவையான அளவு உப்பு, 10 அல்லது 12 காய்ந்த மிளகாய், நெல்லிக்காய் அளவு புளி ஆகியவற்றை எண்ணெயில் சேர்த்து வதக்க வேண்டும். பின் இதை ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் கடுகு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அறைத்த விழுதை இதில் சேர்த்து 5 நிமிடம் வதக்கி விட வேண்டும். தேவைப்பட்டால் சிறிது எண்ணெய் சேர்த்து வதக்கி கொள்ளலாம். இந்த கலவையை ஆற வைத்து ஒரு டப்பாவில் அடுத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து இரண்டு வாரம் வரை வைத்து சாப்பிடலாம். இந்த தொக்கு இட்லி மற்றும் தோசையுடன் வைத்து சாப்பிட நன்றாக இருக்கும். சட்னி அரைக்கமுடியாத நேரத்தில் இந்த தொக்கு பெரிதும் உபயோகமாக இருக்கும்.
பால் பொங்கி வழியாமல் இருக்க
பால் காய்ச்சும் போது பால் பொங்கி கேஸ் ஸ்டவ்வில் ஊற்றி விடும். இதை க்ளீன் செய்வது இல்லத்தரசிகளுக்கு பெரும் வேலையாக இருக்கும். நீங்கள் இந்த டிப்ஸை ஃபாலோ செய்தால் பால் பொங்கி ஊற்றாது. நீங்களும் பாலை அடுப்பில் வைத்து விட்டு மற்ற வேலைகளை பார்க்கலாம். பால் பாத்திரத்திற்குள் நாம் ஊற்றும் பால் மூழ்கும் அளவிலான ஒரு சிறிய கிண்ணத்தை வைத்து விட்டு பின் பாலை பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். பாத்திரத்தின் அரைப்பாதி அளவு காலியாக இருக்க வேண்டும். இப்போது அடுப்பை மிதமான தீயில் வைத்து காய்ச்ச வேண்டும். இப்போது பால் பாத்திரத்திறத்திற்கு உள்ளேயே பொங்கும். பாத்திரத்திற்கு வெளியே பொங்கி வழியாது.
மேலும் படிக்க