(Source: ECI/ABP News/ABP Majha)
Mutton Gravy Dosa: முட்டை தோசை தெரியும்.. மட்டன் கறி தோசை தெரியுமா? சண்டே டின்னருக்கு அசத்துங்க..
சுவையான மட்டன் கறி தோசை ரோட்டுக்கடை சுவையில் எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க....
தேவையான பொருட்கள்
200 கிராம்-மட்டன் கொத்து கறி
3-முட்டை
1- வெங்காயம்
1-தக்காளி
1/2 ஸ்பூன் இஞ்சி பூண்டுபேஸ்ட்
1 ஸ்பூன் -மிளகு தூள்
1/2 ஸ்பூன்- மிளகாய் தூள்
1/2 ஸ்பூன்- கரம் மசாலா
1/2 ஸ்பூன்- சீரக தூள்
1/2 ஸ்பூன் மல்லி தூள்
1/4 ஸ்பூன் -மஞ்சள் தூள்
1/2 ஸ்பூன்-கடுகு
1/2 ஸ்பூன்- சோம்பு
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு எண்ணெய்
செய்முறை
மட்டனுடன்( ஆட்டிறைச்சி) மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து குக்கரில் 5 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.பின் முட்டையை ஒரு கிண்ணத்தில் உடைத்து ஊற்றி நன்றாக அடித்துக்கொண்டு, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளியை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானவுடன் கடுகு மற்றும் சோம்பு சேர்த்து தாளிக்கவும்.
பின் அதனுடன் சிறிது வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாடை போகும் வரைக்கும் நன்கு வதக்கி விட்டு, தக்காளி சேர்த்து , மசியும் வரை வதக்கவேண்டும். பின் மஞ்சள் தூள், மல்லித்தூள் ,கரம் மசாலா தூள், மிளகாய் தூள், சீரகத்தூள் சேர்த்து பிரட்டி எடுக்க வேண்டும். அதனுடன் வேக வைத்த கறியை தண்ணீரோடு சேர்த்து நீர் வற்றி கெட்டியாக வரும் வரை அடுப்பில் கொதிக்க விட வேண்டும்.
அடுப்பை சிம்மில் வைத்து விட்டு, தோசைக்கல்லில் மாவை எடுத்து சிறிய தோசை ஒன்றை ஊற்ற வேண்டும். சிறிது வெந்ததும் தோசை மீது ஒரு கரண்டி முட்டையை ஊற்றி, பின் அதற்கு மேல் ஒரு கரண்டி கறியை வைத்து தோசை முழுவது பரப்பி தேய்த்து விட வேண்டும். அதன் மேல் சிறிது மிளகு தூள் தூவிவிட்டு சுற்றி எண்ணெய் விட்டு திருப்பி போட்டு தோசையை அழுத்தி விடவும்..
1 நிமிடம் கழித்து எடுத்தால் சுவையான,கறி தோசை தயார். இதற்கு தொட்டு கொள்ள எதுவும் இல்லாமல் அப்படியே சாப்பிடலாம். சாப்பிடுவதற்கு காரசாரமாகவும் மிகுந்த சுவையுடனும் இருக்கும். நீங்களும் வீட்டில் டின்னருக்கு ட்ரை பண்ணி பாருங்க.
மேலும் படிக்க
Watch Video: யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய ரஜினிகாந்த்.. நாளைக்கு என்ன திட்டம்?
எப்போது ரத்தாகும் நீட் தேர்வு? உண்ணாவிரத போராட்டத்தில் களமிறங்கும் திமுக இளைஞரணி..