மேலும் அறிய

Fatty Liver:கொழுப்பு நிறைந்த சீஸ் உணவுகளை அதிகமாக சாப்பிடுறீங்களா?கல்லீரல் பாதிக்கப்படலாம் - ஆய்வில் தகவல்!

Fatty Liver: அதிக கொழுப்பு நிறைந்த பாலில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை தொடர்ச்சியாக அதிகம் சாப்பிட்டால் கல்லீரல் பாதிக்கப்படலாம் என ஆய்வில் தகவல்.

அதிக கொழுப்பு நிறைந்த பாலில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை (high-fat dairy products) உணவில் சேர்ப்பது கல்லீரல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என ஆய்வு முடிவு எச்சரிக்கிறது. 

பால் பொருட்கள் விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. நல்ல திக்கான பாலில் காஃபி, மில்க்‌ஷேக், க்ரீம் சீஸ், வெண்ணெய், நெய் ஆகியவற்றில் தயாரிக்கப்படும் டோஸ்ட், சான்ட்விச் ஆகியவற்றை விரும்பி சாப்பிடுவோம் இல்லையா? ஆனால், அதிக கொழுப்பு நிறைந்த பால் பொருட்களை சாப்பிடுவது கல்லீரலின் ஆரோக்கியத்தை பாதித்து  fatty liver பிரச்னை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ' Journal of Hepatology’ இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் கொழுப்பு நிறைந்த சீஸ், க்ரீம் ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படும் உணவுகள் சாப்பிடுவது ’Metabolic dysfunction-associated steatotic liver disease’ பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிவித்துள்ளது. 

இஸ்ரேலில் உள்ள Hebrew University of Jerusalem கல்வி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் குறைந்த கொழுப்பு, சர்க்கரை நிறைந்த உணவுகள் கல்லீரல் பாதிப்பை குறைப்பதை கண்டறிந்துள்ளது. அதிக சர்க்கரை, கொழுப்பு நிறைந்த உணவுகள் fatty liver பாதிப்பிற்கு வழிவகுக்கும் என்பதையும் ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளது. 

இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட பேராசிரியர் இது தொடர்பாக தெரிவிக்கையில்,” இது பொதுவான தகவல்கள் மட்டுமே. இது தொடர்பாக கூடுதல் ஆய்வு நடத்தப்பட உள்ளது. இது எல்லாருக்கும் பொருந்துமா, எப்படி செயல்படுகிறது ஆகியவற்றை துல்லியமாக கண்டறிய கூடுதல் சாட்சியகள் தேவைப்படுகிறது. இந்த ஆய்வு எலி, மனிதர் என இரண்டு முறைகளிலும் மேற்கொள்ளப்பட்டது.” என்று தெரிவித்தார். 

இந்த ஆய்வில் அதிக கொழுப்பு நிறைந்த பால் பொருட்கள் கொண்ட உணவுகள் சாப்பிட்ட எல்லாருக்கும் உடல் எடை அதிகரித்திருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக அதிக கொழுப்புள்ள க்ரீம், சீஸ் உள்ளிட்டவற்றை சாப்பிடுவது கல்லீரல் பாதிப்படைய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. 

ஆரோக்கியமான கல்லீரலுக்கு எதெல்லாம் நல்லது?

  • பச்சை காய்கறிகள், கீரை வகைகள், ப்ரோக்கோலி ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். 
  • நல்ல கொழுப்புள்ள உணவுகளை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். 
  • வால்நட்,அவகேடோ,ஆலிவ் எண்ணெய் ஆகியவைகள் கல்லீரலுக்கு நல்லது. 
  • போதிய அளவு தண்ணீர் அருந்துவது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. 
  • நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். பொதுவாக, உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதில் தண்ணீர் பெரும் உதவி புரிகிறது. தண்ணீர் ஒரு சிறந்த ’detoxicating agent'.

பாதிப்பு ஏற்படாமல் தவிர்ப்பு எப்படி?

ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தின் மூலம் கல்லீரல் பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். ஆரோக்கியமான காலை உணவை சாப்பிடுவது,  உப்பு, கொழுப்பு அதிகமாக உள்ள உணவுகளை தவிர்ப்பக்து, அதிகளவில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை தவிர்ப்பது, நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது, மது அருந்தாமல் இருப்பது, தினமும் உடற்பயிற்சி செய்வது ஆகியவற்றின் மூலம் கல்லீரல் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம். 

பொறுப்புத்துறப்பு: இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Duraimurugan: ஏம்பா..! எடப்பாடி, அன்புமணிக்கு விஷயம் தெரியுமா? தெரியாதா - அமைச்சர் துரைமுருகன் நச் பதிலடி
Duraimurugan: ஏம்பா..! எடப்பாடி, அன்புமணிக்கு விஷயம் தெரியுமா? தெரியாதா - அமைச்சர் துரைமுருகன் நச் பதிலடி
SSC CGL RESULT 2024: மத்திய அரசின் சிஜிஎல் தேர்வு முடிவு எப்போது? காத்திருக்கும் தேர்வர்கள்! எஸ்எஸ்சி சொல்வது என்ன?
SSC CGL RESULT 2024: மத்திய அரசின் சிஜிஎல் தேர்வு முடிவு எப்போது? காத்திருக்கும் தேர்வர்கள்! எஸ்எஸ்சி சொல்வது என்ன?
PSLV-C59 Proba-3 Mission: சூரியன் தான் இலக்கு, நாளை விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி - சி59 ராக்கெட் - ப்ரோபா-3 விண்கலம் ஆராயப்போவது என்ன?
PSLV-C59 Proba-3 Mission: சூரியன் தான் இலக்கு, நாளை விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி - சி59 ராக்கெட் - ப்ரோபா-3 விண்கலம் ஆராயப்போவது என்ன?
ஷாருக்கான் சரக்குதான் உலகத்துலேயே பெஸ்ட் விஸ்கி! என்ன பிராண்ட்? என்ன விலை?
ஷாருக்கான் சரக்குதான் உலகத்துலேயே பெஸ்ட் விஸ்கி! என்ன பிராண்ட்? என்ன விலை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்துறை குடுங்க, இல்லனா...” பிடிவாதமாக இருக்கும் ஷிண்டே! விழிபிதுங்கி நிற்கும் பாஜகஉதயநிதி முன் தள்ளுமுள்ளு! போர்வையை இழுத்த பெண்கள்! கோபத்தில் கத்திய POLICEAadhav Arjuna : ”திமுக-னா பல் இளிப்பீங்க விஜய்-னா மட்டும் கசக்குதா?” திருமாவை- விளாசும் தவெக! | TVKJose Charles Profile : ”அடுத்த CM என் பையன் தான்”லாட்டரி மார்டின் ஸ்கெட்ச்!யார் இந்த ஜோஸ் சார்லஸ்? | Lottery Martin

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Duraimurugan: ஏம்பா..! எடப்பாடி, அன்புமணிக்கு விஷயம் தெரியுமா? தெரியாதா - அமைச்சர் துரைமுருகன் நச் பதிலடி
Duraimurugan: ஏம்பா..! எடப்பாடி, அன்புமணிக்கு விஷயம் தெரியுமா? தெரியாதா - அமைச்சர் துரைமுருகன் நச் பதிலடி
SSC CGL RESULT 2024: மத்திய அரசின் சிஜிஎல் தேர்வு முடிவு எப்போது? காத்திருக்கும் தேர்வர்கள்! எஸ்எஸ்சி சொல்வது என்ன?
SSC CGL RESULT 2024: மத்திய அரசின் சிஜிஎல் தேர்வு முடிவு எப்போது? காத்திருக்கும் தேர்வர்கள்! எஸ்எஸ்சி சொல்வது என்ன?
PSLV-C59 Proba-3 Mission: சூரியன் தான் இலக்கு, நாளை விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி - சி59 ராக்கெட் - ப்ரோபா-3 விண்கலம் ஆராயப்போவது என்ன?
PSLV-C59 Proba-3 Mission: சூரியன் தான் இலக்கு, நாளை விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி - சி59 ராக்கெட் - ப்ரோபா-3 விண்கலம் ஆராயப்போவது என்ன?
ஷாருக்கான் சரக்குதான் உலகத்துலேயே பெஸ்ட் விஸ்கி! என்ன பிராண்ட்? என்ன விலை?
ஷாருக்கான் சரக்குதான் உலகத்துலேயே பெஸ்ட் விஸ்கி! என்ன பிராண்ட்? என்ன விலை?
JEE Advanced 2025: ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு எப்போது? தேதி அறிவித்த ஐஐடி கான்பூர்- இவர்களுக்கெல்லாம் அனுமதி இல்லை!
JEE Advanced 2025: ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு எப்போது? தேதி அறிவித்த ஐஐடி கான்பூர்- இவர்களுக்கெல்லாம் அனுமதி இல்லை!
TN Ministers Delhi Visit :  “அடுத்தடுத்து நிர்மலா சீதாராமனை சந்தித்த தமிழக அமைச்சர்கள்” என்ன நடக்கிறது டெல்லியில் ?
TN Ministers Delhi Visit : “அடுத்தடுத்து நிர்மலா சீதாராமனை சந்தித்த தமிழக அமைச்சர்கள்” என்ன நடக்கிறது டெல்லியில் ?
TVK DMK VCK: கிள்ளி விட்ட விஜயின் தவெக.. பொங்கி எழுவாரா திருமா? திமுக மீது அட்டாக் வருமா? - கனிமொழி அஸ்திரம்
TVK DMK VCK: கிள்ளி விட்ட விஜயின் தவெக.. பொங்கி எழுவாரா திருமா? திமுக மீது அட்டாக் வருமா? - கனிமொழி அஸ்திரம்
Fengal Cyclone Damage; கோரத்தாண்டவம் ஆடிய புயல் ; சின்னாபின்னமான ரயில் தண்டவாளங்கள்; மீண்டும் துவங்கிய ரயில் போக்குவரத்து
Fengal Cyclone Damage; கோரத்தாண்டவம் ஆடிய புயல் ; சின்னாபின்னமான ரயில் தண்டவாளங்கள்; மீண்டும் துவங்கிய ரயில் போக்குவரத்து
Embed widget