மேலும் அறிய

Spicy corn curry: ஸ்வீட்கார்ன் பிடிக்குமா? சுவையான ஸ்வீட்கார்ன் கிரேவி - ரெசிபி இதோ!

Spicy corn curry: மிகவும் சுவையான முறையில் ஸ்வீட்கார்ன் மசாலா செய்யும் ரெசிபி விவரத்தை காணலாம்.

ஸ்வீட்கார்ன் மசாலா கிரேவி

என்னென்ன தேவை?

ஸ்வீட்கார் - 2 

வெங்காயம் - 2

இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்

தக்காளி விழுது - ஒரு கப்

தேங்காய் பால் - ஒரு கப்

புளி தண்ணீர் - ஒரு டேபிள் ஸ்பூன்

நெய் - சிறிதளவு

கரம் மசாலா - ஒரு டீஸ்பூன்

கார்ன்ஃப்ளார் மாவு -1 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை

ஸ்வீட்கார்ன் வேகவைத்து எடுக்கவும். தக்காளியை மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும். கடாய் சூடானதும் அதில் நெய் சேர்த்து பட்டை, கிராம்பு உள்ளிட்ட மசாலா சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். அதோடு இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் அதோடு தக்காளி விழுது, மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு, சிறிதளவு புளி தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறவும். மிளகாய் பொடி வாசனை போனதும் அதில் வேகவைத்த கார்ன் சேர்க்கவும். நன்றாக கொதித்ததும், தேங்காய் பால், சிறதளவு கார்ன்ஃப்ளார் மாவு கரைசல் சேர்க்கவும். இவை எல்லாம் நன்றாக கொதிக்க விடவும். ஸ்வீட்கார்ன் மசாலா கிரேவி ரெடி.

கோபி மஞ்சூரியன் பலருக்கும் மிகவும் பிடித்த டிஷ். அதே செய்முறையில் ஸ்வீட் கார்ன் மஞ்சூரியன் செய்யலாம்.

என்னென்ன தேவை?

ஸ்வீட்கார்ன் (வேகவைத்து தனியாக எடுத்தது) - இரண்டு கப்

மிளகு தூள் -2 ஸ்பூன்

உப்பு- தேவையான அளவு

இஞ்சி, பூண்டு விழுது - சிறதளவு 

வெங்காயம் - 2

குடை மிளகாய் - 2 

சோயாசாஸ் -தேவையான அளவு

சில்லி சாஸ் -தேவையான அளவு

டெமேட்டோ சாஸ் -தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

ஸ்வீட்கார்ன் வேகவைத்து எடுத்துகொள்ளவும். ஒரு கப்பில் 100 கிராம் சோளமாவு, 100 கிராம்கடலைமாவு, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலக்கவேண்டும். இதில் உங்கள் தேவைக்கு ஏற்ப உப்பை சேர்த்துகொள்ள வேண்டும். இதில் சிறிய அளவில் ஸ்வீட்கார்ன் சேர்த்து, அதில் மாவு நன்றாக ஒட்டியதும்  எடுத்து எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

 ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அதில் இஞ்சி பூண்டை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும். பின் பெரிய வெங்காயம் ஒன்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இதில் நறுக்கிய குடை மிளகாயை சேர்க்க வேண்டும்.  தேவையான உப்பை சேர்த்து வதக்க வேண்டும். பின் டொமேட்டோ கெச் அப் 3 ஸ்பூன், சில்லி சாஸ், சோயா சாஸ் 3 ஸ்பூன் சேர்த்துகொள்ள வேண்டும். மஞ்சூரியனின் உள்ள கலவை சற்று கிரேவியாக வேண்டும் என்றால் 2 ஸ்பூன் சோளமாவை சிறிதளவு தண்ணீரில் கலந்து இதில் சேர்த்து கொள்ளலாம். 

சுமார் 5 நிமிடம் அடுப்பை குறைந்த தீயில் வைத்து வேக வைக்க வேண்டும். இதையடுத்து பொரித்து வைத்துள்ள  ஸ்வீட்கார்னை சேர்த்து 2 நிமிடங்களில் வேக வைக்கவும். சிறிதளவு ஸ்பிரிங் ஆனியன் மற்றும் மல்லி தழையை கலந்து ஒரு நிமிடம் குறைவான தீயில் வைத்து மூடி வைக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான ஸ்வீட்கார்ன் மஞ்சூரியன் தயார். 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
Embed widget