ரொம்ப சூடா இருக்கீங்களா... ஜில்லுனு மாற இதை செய்யுங்க!
உடல் சூடு என்பது, அன்றாடம் செய்யும் வேலைகள் , எடுத்து கொள்ளும் உணவு, மற்றும் சுற்றுசூழல் சார்ந்து மாறுபடும். ஒருவரின் உடல் வெப்பம் ஒவ்வொரு பருவநிலைக்கு தகுந்தாற் போல் மாறும்.
உடல் சூடு என்பது, அன்றாடம் செய்யும் வேலைகள் , எடுத்து கொள்ளும் உணவு, மற்றும் சுற்றுசூழல் சார்ந்து மாறுபடும். ஒருவரின் உடல் வெப்பம் ஒவ்வொரு பருவநிலைக்கு தகுந்தாற் போல் மாறும். சிலருக்கு இயற்கையாகவே சூட்டு உடம்பு என சொல்வார்கள். அவர்களை எப்போது தொட்டாலும், சூடாக இருக்கும். இந்த உடல் சூடு அதிகமாவதை சில அறிகுறிகள் வைத்து தெரிந்து கொள்ளலாம். அதாவது,கண்களில் எரிச்சல், சிறுநீர் வெளியேற்றும் போது சூடாகவும்,எரிச்சலுடனும் இருக்கும். சிலருக்கு பாத எரிச்சல் கூட இருக்கும். வயிறு வலி கூட சிலருக்கு இருக்கும். இந்த வெப்பநிலையை சில வாழ்வியல் முறை மாற்றம் செய்து கொள்ளலாம்.
தண்ணீர் - ஒரு நாளைக்கு தேவையான தண்ணீர் குடிக்க வேண்டும். 2 -3 லிட்டர் அளவு தண்ணீர் குடிப்பது, உடல் வெப்ப நிலையை சீராக வைக்க உதவும். பருவ நிலைக்கு ஏற்ப தண்ணீரின் அளவும் மாறுபடும். எந்த பருவ நிலையாக இருந்தாலும், 2- 3 லிட்டர் தண்ணீர் அவசியம்.
வெந்தயம் - காலை எழுந்ததும், வெந்தயத்தை எடுத்து கொள்வது, உடல் குளிர்ச்சிக்கு உதவும். இரவு வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து காலை அதை எடுத்து கொள்வதும் நல்லது.
சோம்பு - இரவு ஒரு டம்ளர் தண்ணீரில் சோம்பை ஊறவைத்து காலை அந்த தண்ணீர் குடிப்பது, உடல் வெப்பத்தை தணிக்கும்.
இளநீர் - கோடை காலத்தில் ஏற்படும் நீர் இழப்பை தடுப்பதற்கும். உடல் வெப்பத்தை சமநிலையில் வைப்பதற்கும், இளநீர் உதவும். தினம் ஒரு இளநீர் குடிப்பது நல்லது.
மோர் - இது உடலுக்கு குளிர்ச்சியை தரும்.மோரில் ப்ரோ பயாடிக் நிறைந்து இருக்கிறது. உடல் குடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. வயிற்றில் நல்லது செய்யும் பாக்டீரியா வளர்வதற்கு உதவும்.
கற்றாழை ஜூஸ் - கற்றாழை சதை பகுதியை எடுத்து தனியாக எடுத்து ஜூஸ் ஆக அரைத்து குடிக்கலாம். சதை பகுதியை மட்டும் தனியாக எடுத்து முகம், கழுத்தில் தடவி கொள்ளலாம். இது உடலுக்கு குளிர்ச்சியாக இருக்கும். மேலும், கண் எரிச்சல் போக்கும். சருமத்திற்கு புத்துணர்வு அளிக்கும்.
விளக்கெண்ணணெய் - விளக்கெண்ணெய் உச்சம் தலை, தொப்புள், உள்ளங்காலில் தடவுவதன் மூலம் உடலுக்கு குளிர்ச்சியாக இருக்கும். மேலும் உடல் வெப்பம் தணியும். இது சருமத்திற்கு மிகவும் நல்லது. சந்தனம் - சந்தனத்தை தண்ணீரில் குழைத்து முகத்தில் தடவி கொள்ள வேண்டும். இது சருமத்திற்கு புத்துணர்ச்சியையும், குளிர்ச்சியையும் தரும். வைட்டமின் சி - வைட்டமின் சி சத்து நிறைந்த எலுமிச்சை, நெல்லிக்காய்,ஆரஞ்சு ஆகியவை உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை தருவதுடன், உடலுக்கு குளிர்ச்சியையும் தருகிறது.