Deep Sleep: ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா?... இந்த டிப்ஸ் எல்லாம் ஃபாலோ பண்ணுங்க...
Deep Sleep: இரவு நேரத்தில் ஆழ்ந்த தூக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த அறிவுரைகளை மருத்தவர்கள் தெரிவிக்கின்றனர். அதனை கீழ்கண்டவாறு காணலாம்
தூக்கம்
நாள் முழுக்க வேலை செய்த களைப்பில் தூங்கலாம் என்ற தலை சாய்த்திருப்பீர்கள். ஆனால் தூக்கமே வந்திருக்காது. நம்மளுடைய அன்றாட வாழ்வில் பல சிந்தனைகள் ஓடிக் கொண்டு தான் இருக்கும். நம்முடைய சிந்தனைகளாளே தூக்கம் வராமல் இருக்கும். இன்னொரு காரணம் இரவில் சாப்பிட்ட உணவாகக் கூட இருக்கலாம். இரவு உணவு சரியில்லை என்றால் கூட நிச்சயம் தூக்கத்தை கலைக்கக் கூடும். அதனால் என்ன செய்வது என்று பலரும் யோசனை செய்வீர்கள். மனதை ஒருமுகப்படுத்துவது என்பது புதுமுயற்சி. அதுவும் கை கொடுக்கவில்லை என்றால் அது ஒரு நோயாக இருக்குமோ என பலர் யோசனை செய்வீர்கள்.
ஆரோக்கியமான உடலுக்கு ஆழ்ந்த தூக்கம் என்பது அவசியமான ஒன்று. அப்போது தான் உடல் உறுப்புகள் அதற்குரிய வேலைகளை சரியாக செய்து உடலை சரியாக பராமரிக்கும். இல்லையேனில் எதிர்விளைவுகளை உண்டாக்கி நோய்களை ஏற்படுத்தும். இன்சோம்னியா என்கிற தூக்கமின்மை நோயாலும் பலர் அவதிப்படுகின்றனர்.
ஆழ்ந்த தூக்கத்திற்கான வழிகள்
நாள் முழுவதும் வேலை செய்துவிட்டு கலைப்பாக வீட்டுக்கு நாள்தோறும் வருவார்கள். அப்போது உடல் வலிக்கு சூடான நீரில் குளிப்பது நல்லது. தூங்குவதற்கு 2 மணி முன்பு சூடான நீரில் குளிப்பது, ஆழ்ந்த தூக்கத்தை தரும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
உடல் வலியால் கூட தூக்கம் வராமல் இருக்கும். அதனால் இரவு தூங்க செல்வதற்கு முன் மசாஜ் செய்வது நல்லது. மசாஜ் செய்வதால் உடலும் மனதும் அமைதியை பெரும். குறிப்பாக இரவில் மசாஜ் செய்தால் உடல் சோர்வு நீங்கி தூக்கத்தை ஏற்படுத்தும். இதற்காக அழகு நிலையம் செல்ல வேண்டாம். நம் வீட்டில் இருக்கும் எண்ணெய்யை பயன்படுத்தி மசாஜ் செய்யலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும் இருட்டு அறையில் தூங்குவதை உறுதி செய்ய வேண்டும். இருட்டு அறையில் தூங்குவது என்பது அவசியம். அப்போது நம் எதையும் சிந்திக்காமல் ஆழ்ந்த தூக்கத்தை பெறலாம். இருளில் தூங்கும்போது அதிக எண்ணிக்கையில் மெலடோனின் ஹார்மோன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
எனவே, சுற்றியுள்ள பகுதியில் அதிக வெளிச்சம் இருக்கும்போது, ஹார்மோன் அளவு குறைகிறது. ஒளியின் காரணமாக தூக்கம் கலைகிறிது. இதனால் மெலடோனின் உற்பத்தி குறைகிறது. மெலடோனின் உற்பத்தி குறைந்தால் அது நம் தூக்கத்தை கலைக்கும். இருளில் தூங்குவது என்பது உடல் உறுப்புகள் நல்ல செயல்பாட்டில் இருக்கும் எனவும் நல்ல ஆழ்ந்த தூக்கத்தை பெறலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
View this post on Instagram
தவிர்க்க வேண்டிய உணவுகள்
ஆழ்ந்த தூக்கம் இல்லையென்றால் அது நம் எடுத்துக் கொள்ளக்கூடிய உணவாக கூட இருக்கலாம். அதனால் தூங்குவதற்கு முன்பு சில உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதன்படி , காஃபி, மது, சிகரெட் இவற்றை தவிர்க்க வேண்டும். அதேபோன்று தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு சாப்பிட வேண்டும். இரவில் கட்டாயம் அளவான உணவுகளை உண்ண பழங்கிக் கொள்ளுங்கள். லாப்டாஃப், டிவி, செல்போன் போன்றவற்றை இரவில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.