மேலும் அறிய
Advertisement
Cooking Tips : பாகற்காய் கசப்பு போகணுமா? தக்காளி அழுகிடுச்சா? உங்க கிச்சனுக்கான டிப்ஸ் எல்லாமே இங்க இருக்கு..
அரிசி, ரவை, மைதா வைத்திருக்கும் பாத்திரங்களில் சிறு வண்டுகள் வந்துவிடும். அவற்றில் சிறிது வசம்பு தட்டிப்போட்டுவிட்டால் பூச்சி, புழுக்கள் வராது.
தினமும் சமையலில் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் சமையல் முறைகள் குறித்த சிறிய குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதன்படி, அழுகிய தக்காளியை பயன்படுத்துவது முதல் மைதாவில் பூச்சி வராமல் இருக்கவைப்பது வரையிலான சில எளிய சமையல் டிப்ஸ்கள் உங்களுக்காக.
- தக்காளி கொஞ்சம் ஓரமாக அழுகி இருந்தால் அதை தூக்கி எறிந்து விட வேண்டாம். அந்த தக்காளியை குளிர்த்த நீரில் போட்டு சிறிது உப்பும் சேர்த்து கொள்ள வேண்டும். ஒரு இரவு அப்படியே வைத்தால் தக்காளி நிலையான தன்மையை அடையும்.
- தோசை மாவுக்காக அரிசி ஊற வைக்கும்போது அதனுடன் சிறிது ஜவ்வரிசியும் சேர்த்து ஊறவைத்து அரைத்தால், தோசை மொறுமொறுப்பாக இருக்கும்.
- ஆப்பத்துக்கு மாவு கலக்கும்போது அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் கோதுமை மாவு சேர்த்தால் ஆப்பம், சீக்கிரம் காய்ந்து போகாது.
- பூரி செய்யும்போது, மாசு பிசைய தண்ணீர் சேர்ப்பதற்கு பதிலாக பால் சேர்த்து பிசைந்தால் பூரி ருசியாக இருக்கும்.
- பாகற்காய் கசக்கும் என்பதால் பெரும்பலானோர் அதை விரும்ப மாட்டார்கள். பாகற்காய் கசப்பு போக உப்பு, மஞ்சள், எலுமிச்சை சாறு போதும். இந்த மூன்று பொருட்களுடன் வெள்ளம் சேர்த்து 30 நிமிடங்கள் ஊற வைத்தால் பாகற்காய் கசக்காது.
- பாகற்காயை 2, 3 நாட்கள் வைத்தால் பழுத்து விடும். பாகற்காய் பழுக்காமல் இருக்க, அதன் மேற்புறமும், அடிப்புறமும் வெட்டி விட்டு, இரண்டாக பிளந்து வைத்தால் எத்தனை நாள் ஆனாலும் பாகற்காய் பழுக்காது.
- கீரையுடன் பயத்தம்பருப்பு சேர்த்து கூட்டு செய்யும்போது அதனுடன் ஒரு கப் பாலை சேர்த்தால் கீரை மணமாக இருக்கும்.
- அரிசி, ரவை, மைதா வைத்திருக்கும் பாத்திரங்களில் சிறு வண்டுகள் வந்துவிடும். அதில் சிறிது வசம்பு தட்டிப்போட்டு விட்டால் அரிசி, ரவை, மைதாவில் பூச்சி, புழுக்கள் வராது.
- கொண்டைக்கடலை, பட்டாணி, மொச்சை போன்றவற்றை சமைக்க முதல் நாள் ஊறவைக்க வேண்டும். அப்படி ஊறவைக்க மறந்து விட்டால், அவற்றை எண்ணெய் இல்லாமல் நன்றாக வறுத்து எடுத்து பிறகு குக்கரில் வேக வைத்தால் நன்றாக வெந்து விடும்.
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
பொழுதுபோக்கு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion