Rice Massage Gel | பருக்கள், கருவளையம் எல்லாத்துக்கும் முடிவு.. அரிசி இருந்தா போதும்.. இந்த க்ரீமை வீட்டிலேயே செய்யலாம்..
வீட்டிலேயே செய்யக்கூடிய பியூட்டி டிப்ஸ் நிறைய உள்ளன. நேரம் இருந்தால் இதுபோன்ற இயற்கையான பொருட்களைக் கொண்டு தேவைக்கேற்ப அவ்வப்போது மசாஜ் க்ரீம்களை செய்யலாம்.
வீட்டிலேயே செய்யக்கூடிய பியூட்டி டிப்ஸ் நிறைய உள்ளன. நேரம் இருந்தால் இது போன்ற இயற்கையான பொருட்களைக் கொண்டு தேவைக்கேற்ப அவ்வப்போது மசாஜ் க்ரீம்களை செய்யலாம். இதுவும் அப்படி ஒரு க்ரீம் தான்.
செய்முறை:
இரண்டரை டேபிஸ் ஸ்பூன் அரிசியை எடுத்துக்கொள்ளவும். அதை நன்கு அலசி ஊற வைக்கவும். இரவு முழுவதும் ஊறினால் சிறப்பு. பின்னர் காலையில் அதை சிறிய ஆட்டுக்கல்லில் சிறுக சிறுக தண்ணீர்விட்டு ஒரு மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். அந்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்துவிட்டு கால் கப் தேங்காய் துருவிக் கொள்ளவும். நல்ல நெத்துக் காயாகப் பார்த்து அதிலிருந்து பூ துருவிக் கொள்ளவும். அந்தப் பூவை அரைத்து விழுதாக்கி அதிலிருந்து ஒரே முறையாக பால் எடுக்கவும். அந்தப் பாலை வடிகட்டி அரைத்து வைத்த மாவுடன் சேர்க்கவும். இந்தக் கலவையை அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து கிளறிக் கொண்டே இருக்கவும். இல்லவிட்டால் அடி பிடித்துவிடும். மிக முக்கியமாக அடி கனமான பாத்திரத்தில் இதைப் பயன்படுத்த வேண்டும்.
க்ரீமைக் கிளறிக் கொண்டே இருக்கும் போது ஒரு கட்டத்தில் நல்ல க்ரீம் பதத்திற்கு வரும். அந்த நேரத்தில் இதை அடுப்பிலிருந்து இறக்கி விடவும். அடுப்பிலிருந்து இறக்கிய பின்னர் அப்படியே முழுமையாக சூடு ஆறவிடவும். அந்த வேளையில் மேலே எதுவும் மூடி போட்டுவிடக்கூடாது. திறந்து வைத்து க்ரீமை முழுமையாக ஆற விடவும். க்ரீம் நன்றாக ஆறிய பின்னர் அதில் ஏதேனும் எசன்ஷியல் ஆயில் ஊற்றிக் கொள்ளலாம். ரோஸ் எண்ணெய், லேவண்டர் எண்ணெய், வெட்டிவேர் எண்ணெய், சந்தன எண்ணெய் என எதை வேண்டுமானாலும் உங்களின் விருப்பப்படி சேர்த்துக் கொள்ளலாம்.
ஒரு டீஸ்பூன் அளவு இதனை சேர்த்தால் போதும். இந்த ஸ்டேஜில் க்ரீமை கைப்படாமல் ஈரம் அற்ற நன்றாக உலர்ந்த கன்டெய்னரில் மாற்றிக் கொள்ளவும். அதை அப்படியே குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் கொள்ளவும். 4 நாட்கள் வரை இதனைப் பயன்படுத்தலாம். இந்த க்ரீம் ஒருவகை மசாஜ் க்ரீம். இதை மசாஜ் செய்ய மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஏனெனில் இதில் இருக்கும் அரிசி தோலை இறுக்கமாக்கும். நீங்கள் இந்த க்ரீமை அப்ளை செய்து அப்படியே விட்டால் இறுக்கமாகும். ஆனால் அதேவேளையில் மசாஜ் க்ரீமாக பயன்படுத்தினால் சருமம் புத்துணர்ச்சி பெறும்.
எப்படிப் பயன்படுத்துவது?
வீட்டிலேயே சுத்தமாக பக்குவமாக செய்த இந்த க்ரீமை முகத்தை நன்றாக கழுவி சுத்தம் செய்து உலர்த்திவிட்டு. இந்த க்ரீமை சிறிது போல் எடுத்துக் கொண்டு முகத்தில் பூசிவிட்டு மேல்நோக்கி மசாஜ் செய்ய வேண்டும். எவ்வளவு நேரம் முடிகிறதோ அவ்வளவு நேரம் மசாஜ் செய்யலாம். நீங்கள் எத்தனை விலையுயர்ந்த நரஷிங் க்ரீமை சந்தையில் வாங்கினாலும் இதுபோன்ற இயற்கையான பலனைப் பெற முடியாது.
இது ஃப்ரீ ரேட்டிக்கல்ஸை அப்புறப்படுத்தி சருமத்திற்கு இளமையான தோற்றத்தைத் தருகிறது. முகம் பொலிவு பெறுகிறது. இந்த க்ரீமை தினமும் கூட பயன்படுத்தலாம். மசாஜ் முடித்து சுத்தமான தண்ணீரில் முகத்தைக் கழுவிவிட்டால் போதும். ஒரே ஒரு வாரம் இதை தொடர்ச்சியாகப் பயன்படுத்திப் பாருங்கள். நீங்களே வித்தியாசத்தை உணர்வீர்கள்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )