பாத்திரங்கள் விலக்கும் சிங் அடைப்பு.. மெத்தை கறைகள் நீக்கம்.. பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்..
சிங்க் அடைப்பு நீங்க, வெள்ளை மெத்தையில் உள்ள கறை நீங்க டிப்ஸ்களை பார்க்கலாம்.
வெள்ளை மெத்தையில் உள்ள கறை நீங்க
நம் வீட்டில் இருக்கும் வெள்ளை மெத்தையில் கறைபட்டு விட்டால் அதை துவைக்க முடியாது. ஆனால் இனி நீங்கள் உங்கள் வெள்ளை மெத்தையில் பட்ட கறையை பற்றி கவலைப்பட வேண்டாம். ஒரு ஸ்பிரே பாட்டிலை எடுத்துக் கொள்ளவும். அதில் இரண்டு ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்க்கவும். இதனுடன் 4 ஸ்பூன் வினிகர் சேர்க்கவும். இப்போது பேக்கிங்க் சோடாவும், வினிகரும் சேர்ந்து நன்றாக பொங்கி வரும்.
இப்போது ஸ்பிரே பாட்டிலை மூடிக்கொண்டு மூடிக்கொள்ளவும். பின் மெத்தையில் உள்ள கறையின் மீது இதை ஸ்பிரே செய்யவும். அந்த இடம் நன்றாக நனையும் அளவு ஸ்பிரே செய்துவிட்டு, பின் ஸ்பாஞ்சைக்கொண்டு அந்த கரையின் மீது தேய்த்துவிட வேண்டும். நாம் துணியை ப்ரெஷ் கொண்டு தேய்ப்பதுபோல் தேய்த்து விட வேண்டும். இப்போது மெத்தையில் உள்ள கறை முழுவதுமாக போய்விடும்.
சிங்க்கில் படிந்துள்ள கறை நீக்கம்..
உங்கள் வீட்டில் உள்ள சிங்க்கைக் கறை படிந்து உள்ளதா? இதை எளிய முறையில் சுத்தம் செய்து விடலாம். சிங்கில் இரண்டு ஸ்பூன் அளவு பேக்கிங் சோடாவை தூவி விட வேண்டும். பின் டிஷ்-வாஷ் லிக்விட்டை ஸ்பாஞ்சில் ஊற்றி சிங்க் முழுவதும் தேய்த்து கழுவவேண்டும். பின் தண்ணீரில் கழுவினால் சிங்க் பளிச்சென மாறி விடும்.
சிங்க் ட்யூபில் உள்ள அடைப்பு நீக்கம்
உங்கள் வீட்டு சிங்கில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறதா? இதை பண்ணுங்க. உங்கள் சிங்கில் உள்ள துளையில் 2 ஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்து அதில் 6 அல்லது 7 ஸ்பூன் அளவு வினிகர் ஊற்றி விடவும். இதை 10 நிமிடம் அப்படியே ஊற விட்டு விடவும். பின் இரண்டு டம்ளர் அளவு சுடு தண்ணீரை இந்த ஓட்டையில் ஊற்றி விடவும். இப்போது சிங்கின் ட்யூபில் உள்ள அடைப்பு சுத்தமாக நீங்கி விடும்.
மேலும் படிக்க
Sheer Khurma: ரம்ஜான் ஸ்பெஷல் பாயாசம்... நாவில் எச்சில் ஊறும் சுவையில் ஷீர் குருமா...செய்முறை இதோ!
Vegetable Stew: கேரளா ஸ்டைலில் வெஜிடபிள் ஸ்டூவ்.. இடியாப்பத்திற்கு சூப்பர் காம்போ - செய்முறை இதோ!