Love Relationship : உணவுக்கு உப்பு... உறவுக்கு இதெல்லாம்: உங்கள் காதலரிடம் கட்டாயம் எதிர்பார்க்க வேண்டியவை இதுதான்..
உங்களையும் உங்கள் நேரத்தையும் மதிப்பது என்பது உறவில் பாராட்டப்பட வேண்டிய விஷயம் அல்ல அவை உறவில் தேவைப்படும் குறைந்தபட்ச எதிர்பார்ப்புகள்
நீண்ட கால உறவுகளுக்கு வரும்போது, தரங்களை நிர்ணயிப்பதும், நீங்கள் உண்மையிலேயே தகுதியான விஷயங்களை உங்கள் துணையிடமிருந்து எதிர்பார்ப்பதும் தவறல்ல. உண்மையில், ஒரு உறவில் நீங்கள் விரும்புவதையும் ஒரு நபராக நீங்கள் யார் என்பதையும் புரியவைப்பது உண்மையில் உங்கள் பிணைப்பை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றும். அவர்கள் உங்களுக்கு நேர்மையாக இருக்க வேண்டிய அவசியம், நீங்கள் உறவில் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதைத் தெளிந்துகொள்வது, உங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற அவர்களின் விருப்பம், உங்களையும் உங்கள் நேரத்தையும் மதிப்பது என்பது உறவில் பாராட்டப்பட வேண்டிய விஷயம் அல்ல அவை உறவில் தேவைப்படும் குறைந்தபட்ச எதிர்பார்ப்புகள்.
அதற்குக் குறைவான எந்த உறவிலும் நீங்கள் இருக்கத் தயார் என்பது உங்களுக்கு வலி ஏற்படுத்தும், அல்லது அசௌகரியம் உண்டாக்கும் மேலும் காலப்போக்கில் உங்கள் அடையாள உணர்வை இழக்கக் கூடிய நிலை உண்டாகும்.
"சில சமயங்களில் உறவுகளில் குறைந்த பட்ச எதிர்பார்ப்புகளைப் பெறுவதில் நாம் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக நான் நினைக்கிறேன். அடடே! அவர்கள் இந்த நேரத்துக்கு அழைப்பதாகச் சொன்னார்கள் அதை செய்தார்கள் என்பதே உங்களுக்குப் பெரிய விஷயமாக இருக்கும். அது மிகவும் உற்சாகமாகவும் அழகாகவும் இருந்தாலும், உங்களுக்குக் கிடைக்க வேண்டியதில் அது குறைந்தபட்சம்" என்கிறார் தெரபிஸ்ட் சாரா குபுரிக்.
View this post on Instagram
அவர் ஆரோக்கியமான உறவில் கட்டாயம் இருக்கவேண்டிய வேறு சில குறைந்தபட்சங்களையும் பட்டியலிடுகிறார்:
- அவர்கள் உங்கள் கருத்தை மதிக்க வேண்டும்.
- அவர்கள் உங்களைக் குறித்து கேள்விகளை எழுப்ப வேண்டும். அப்படியென்றால் பொதுவாக அவர்கள் உங்களைத் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள் என்று பொருள்.
- அவர்கள் திட்டங்களை வகுத்து பின்பற்ற வேண்டும்
- அவர்கள் நேர்மையானவர்களாக இருக்க வேண்டும்.
- அந்த உறவில் நீங்கள் எங்கு நிற்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள அவர்களின் செயல்பாடு உதவ வேண்டும்.
- அவர்கள் உங்கள் எல்லைகளை மதிக்க வேண்டும்,
"இவை அனைத்தும் ஆரோக்கியமான உறவைப் பேணுவதற்கான மிகக் குறைவானவை. அதற்குக் குறைவான எதையும் ஏற்றுக்கொள்வது உங்களுக்கு நீங்களே ஒரு தீங்கைச் செய்து கொள்கிறது" என்று முடிக்கிறார் குபுரிக்.