மேலும் அறிய

’நாட்டு நாய்களில் இத்தனை வகைகளா?’ கலக்கும் கன்னியும் சிப்பிப்பாறையும்..!

தென் தமிழகத்தை பொருத்த வரையில் இந்த நாய் இனத்திற்கு ஒரு ஒற்றை மற்ற club standard நாய்களுக்கு உள்ளது போல ஒற்றை தன்மையில் ஆனா standards கிடையாது.

வேட்டைத்துணைவன் 23

கன்னி / சிப்பிப்பாறை நாய்கள் பகுதி : 15

“நாய்க எல்லாமே நல்ல ஒழுக்கமா இருக்கு அண்ணாச்சி ! இப்பக்குள்ள இப்படி நாய்கள நாங்க பாக்கல ! அப்படியே பழைய செட்டுக எல்லாத்தையும் ஒடையாம கொண்டு வந்துட்டீங்களே.. இதுக மட்டும் தானா இல்ல ஓட்டத்துக்கு தக்கன வேற எதுவும் உண்டா? “

என்ற கேள்வியை வெளியூரில் இருந்து பழக்கத்தின் பொருட்டு ( பழக்கம் இல்லாதவர் எவராயினும் நாய்களை காட்டுவது கிடையாது ) நம் நாய்களைப் பார்க்க வந்த ஒருவர் ( அவரும் வேட்டை நாய்கள் வைத்திருபவர்தான் ) என் குருநாதரிடம் கேட்க, அவர் சிரித்த படியே “அதுக்கொண்ணு இதுக்கொண்ணா? எல்லாக் கழுதைக்கும் இத்தாம்ண்ணே”என்ற பதிலைச் சொன்னார்.

இந்தக் கேள்விக்கும் பதிலுக்குமான சிறிய இடைவெளியை விளக்க மிக நீண்டதொரு பதிவு தேவைப்படும் என்றே நம்புகிறேன். எனவே இதை இங்கயே விட்டுவிட்டு வருவதை கவனிக்கத் துவங்குங்கள் அடுத்து அடுத்து வரும் ரெண்டு மூன்று கட்டுரைகள் அதற்கு விடையளிக்கும்.

சமீபத்திய கட்டுரைகளில் இந்தக் கூர் முக வேட்டை நாய்கள் பற்றி பேசும் போது எல்லாம் ஒழுக்கம் – சுத்தம் என்ற வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துகிறேன் அல்லவா ! இதில் ஒழுக்கம் என்பது நன்னெறியோ அறமோ அல்ல. அது போலவே சுத்தம் என்பது தூய்மையோ துப்புரவோ அல்ல. முன்பே கூட இதை லேசாகச் சொல்லி இருந்தேன்.

’நாட்டு நாய்களில் இத்தனை வகைகளா?’ கலக்கும் கன்னியும் சிப்பிப்பாறையும்..!
முழித்தெறிப்பு

“நல்ல ஒழுக்கமான நாய் “ என்று வேட்டை நாய்களில் சொல்வது நல்ல அங்க லச்சனத்தைத் தான் . சரி இங்கு நல்ல லச்சனம் என்பது எது? அதை எப்படி அறிய வேண்டும்? பலருக்கு  கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் பிடித்திருக்கிறது இந்த ஒற்றை கேள்விக்கு விடைகான. கற்றை வித்தயை கை அளிக்க கசந்தோர் தானே இங்கு அநேகம் பேர்.

நமக்கு அவ்வளவு ஆகாதுதான். அதே சமயம் முறையே அறிய கொஞ்சம் மெனக்கெட வேண்டியது வரும் . அதை முறையே அறிய வேண்டும் என்றால் என்ன என்ன லச்சனங்கள் இதில் உண்டு என்பதோடு அதன் உடல் அமைப்பு ஒவ்வொற்றையுமே அரியாதான் வேண்டும்.

“நல்ல முழித்தெறிப்பு, பிட்டிப் பிடிப்பு, வால் சன்னம், சங்கு கட்டு, கழுத்தோட்டம், ரோமச் சன்னம், கூனுக்கால்” போன்ற கலை சொற்களை பற்றிய பரிச்சியம்  அதற்கு அவசியம் வேண்டும். எல்லா நாய் இனங்களுக்கும் இப்படியான ஒன்று உண்டு தான். அதாவது அந்த நாய்களின் அங்க லச்சனத்தை வல்லுநர் பார்வையில் விளக்க!

’நாட்டு நாய்களில் இத்தனை வகைகளா?’ கலக்கும் கன்னியும் சிப்பிப்பாறையும்..!
ஒட்டு ரோமம் அல்லது  ரோமச் சன்னம்

ஆனாலும் நமது நாய்களில் ஒரு கூடுதல் சிறப்பு உண்டு.அது எப்படி என்றால் ஏனைய நாய் இனங்களுக்கான லச்சனங்கள் திருத்தங்கள் எல்லாம் kennel club கள் மூலம் சீமான்கள் பலர் கூடி வடிவமைக்கப் பெற்றது. அந்த வடிவத்தின்  சாராம்சம் பழைய ஆட்கள் மூலம் கிடைத்ததுதான் என்றாலும் என்று இஞ்சிவை எல்லாமும் club கள் வகுத்துக்கொடுத்தவை தான்.  சுமார் 100 வருடங்களுக்கு முன்பு இருந்த டாபர்மேன் நாய்களையும் german shepherd நாய்களையும் இப்போது உள்ள நாய்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள் ஒரு பெரிய தடம் புரண்டு சில காலம் ஓடி இருப்பது தெரியும்.

தென் தமிழகத்தை பொருத்த வரையில் இந்த நாய் இனத்திற்கு club standard நாய்களுக்கு உள்ளதுபோல ஒற்றை தன்மையில் ஆன standards கிடையாது. காரணம் இவை வெவ்வேறு காலகட்டமாக வெவ்வேறு குழுக்கள் மூலம் வெவ்வேறு தேவைக்கு வந்து விருத்தியாகி பரவியவை என்பதை முன்னரே பார்த்தோம். ஒரு வகையில் அது நல்லதும் கூட ! இவை இன்னும் உயிர்போடு இருக்க அந்த பன்முக தன்மையும் ஒரு காரணம்.

அது ஒரு வேலை ஒற்றை தன்மையில் மாறினால் – மாறிக்கொண்டு இருப்பதினால் என்னென்ன விளைவுகள் வரும் என்பதை பின்னர் விரிவாகக் காண்போம். சரி அப்படியானால் அதன் பன்முகத் தன்மை என்னென்ன? இந்தக் கேள்விக்கும் அதன் லச்சனம் என்னென்னே என்ற கேள்விக்கும் ஒரே பதில் இந்நாய்களில் புழங்கும் சொற்களை முறையே அறிவதுதான்.

’நாட்டு நாய்களில் இத்தனை வகைகளா?’ கலக்கும் கன்னியும் சிப்பிப்பாறையும்..!
கழுத்தோட்டம் - சங்கு கட்டு

முழித்தெறிப்பு :

நல்ல கோலிக் குண்டு போல முன் துருத்திக்கொண்டு இருக்கும் கண் அமைப்புக்கு இப்படிப் பெயர். இதை விழித் தெறிப்பு என்று சொல்வோரும் உண்டு. இப்படியான நாய்கள் வேட்டையில் சூட்டிப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. அதாவது அதற்கு களத்தில் பார்வைக் கோணம் அதிகம் என்ற கணக்கில். அந்தக் கண்ணானது மஞ்சள் நிறத்தில் இருந்தால் அது “எறி கண்ணு” அப்படி எறி கண்ணு உள்ள நாய்கள் கோவக்குறி உள்ளவை என்பதும் நம்பிக்கை. கண்கள் சற்று உள்வாங்கி இருந்தால் அதுற்கு பொந்து கண்ணு என்று பெயர். இது இருப்பதினாலயே இவை நல்ல வேட்டை நாய் ஆகாது என்று அர்த்தம் அல்ல. அதுவும் இதில் உண்டுதான்.

சங்குக்கட்டு :

கழுத்து நல்ல உருட்டாக நீண்டு வருவதை நல்ல சங்குக் கட்டு உள்ள நாய்கள் என்று கூறுவர். அது நங்கு நீண்டு இருந்தால் நல்ல கழுத்தோட்டம் கொண்ட நாய்கள் என்றும் கூறுவார். அப்படியான நாய்கள் கூடுதல் கவர்ச்சியான தோற்றத்தினை கொண்டவை. அதற்கு என்றைக்கும் நல்ல மௌசு உண்டு.

ரோமச்சன்னம் :

இந்த வகை நாய்களுக்கு பொதுவாகவே முடி குறைவு தான். அதிலும் குறைவான முடி உடைய நாய்களுக்கு கூடுதல் சிறப்பு. அவை ஒரு நல்ல லச்சனம். அதை நல்ல ஒட்டு ரோமம் உள்ள நாய்கள் என்றும் நல்ல ரோமச் சன்னம் உள்ள நாய்கள் என்றும் கூறுவர்.

சுழி சுத்தம் :

குதிரைகள் மற்றும் மாடுகளுக்கு பார்ப்பது போலவே நாய்களுக்கும் சுழி பார்த்து எடுப்பது உண்டு. இந்த வழக்கம் எங்கள் பகுதியில் குறைவு என்றாலும் வேறு சில பகுதிகளில் நடப்புத்தான். ரெண்டு பாக்க நெஞ்சிலும் இட – வளம் பாயும் நெஞ்சு சுழி, ரெண்டு தொடைக்கு மேலும் வரும் விலாச் சுழி. தலை உச்சிச் சுழி. ரெண்டு பக்கமும் வரும் பிடதிச் சுழி எல்லாம் ஓட்டத்துக்கு கணக்கில் எடுத்துப் பார்த்த காலம் உண்டு.

’நாட்டு நாய்களில் இத்தனை வகைகளா?’ கலக்கும் கன்னியும் சிப்பிப்பாறையும்..!
"வால் சன்னம்"

வால் சன்னம் :

சாலுக்கி நாய்கள் போன்ற உடல் அமைப்பு கொண்டாலும் ரோமத்திலும் வால் அமைப்பிலும் நமது நாய்கள் கொஞ்சம் வேறு பட்டுதான் இருக்கிறது என்ற காரணத்தால் வால் சார்ந்த லச்சனத்தை சிலர் அழுத்திச் சொல்வதை பார்த்திருக்கிறேன். அப்படி சொல்பவர்கள் பெரும்பாலும் வெளி நாட்டு நாய்களைப் பார்த்து கருத்து சொல்பவர்கள். இங்கு உள்ளவர்களும் அதுவும் ஒரு லச்சனம் அவ்வளவே. எலி வால் மாதிரி ஒல்லியாக கணு கணுவாக சாட்டை போல வால் உடைய நாய்கள் நல்ல வால் சன்னம் உள்ள நாய்கள். அதே வால் தடிமனாக வாய்த்தால் அது பருவால் நாய்கள்.

இன்னமும் உண்டு நிறையவே பார்க்கலாம் வரும் தொடர்களில் !

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Embed widget