Oral Health : செம்பு ஸ்க்ராப்பர் கொண்டு நாக்கை சுத்தம் செய்தால், இத்தனை நன்மைகளா?
ஆரோக்கியத்தை பேணி பாதுகாப்பதற்கு பல் துலக்குவது மிகவும் இன்றியமையாதது அதிலும் இரண்டு வேளை பல் துலக்குவது என்பது மிகவும் முக்கியமாகும்.
பல் போனால் சொல் போயிற்று என்ற ஒரு முதுமொழி தமிழகத்தில் உண்டு பற்களின் ஆரோக்கியத்தை பேணி பாதுகாப்பதற்கு பல் துலக்குவது மிகவும் இன்றியமையாதது அதிலும் இரண்டு வேளை பல் துலக்குவது என்பது மிகவும் முக்கியமாகும். குழந்தைகளிடம் சிறு வயது முதலே பல் துலக்கும் பழக்கத்தை கொண்டு வருவது அவர்களின் தன்னம்பிக்கையான சிரிப்பிற்கு மிகவும் தேவையான ஒன்றாகும்.
இதனுடன் சேர்த்து உங்கள் நாக்கையும் சுத்தப்படுத்த வேண்டும் என்பதை அவர்களுக்கு பழக்கத்தில் நீங்கள் கொண்டு வரவேண்டும்.
பல் இடுக்குகள் மற்றும் ஈறுகளில் உணவுத் துகள்கள் படிந்து வாயில் இருக்கும் உமிழ்நீருடன் வினை புரிந்து துர்நாற்றமாகவும் மற்றும் பாக்டீரியாக்கள் உறைவிடமாகவும் மாறுவதை பல் துலக்குவது எவ்வாறு தடுக்கிறதோ,அதைப்போலவே, நாக்கை சுத்தப்படுத்துவது, என்பதும் மிகவும் இன்றியமையாததாகும்.
இதன் மூலம் சுவை அரும்புகள் மேலும் உணர்ச்சியுடனும்,மிகவும் நுட்பத்துடனும்,நன்றாக சுவையை அறிந்து கொள்வதற்கு, சுத்தப்படுத்தப்பட்ட நாக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது.ஆகவே நாக்கில் இருக்கும் சுவை மொட்டுக்கள், நன்கு வேலை செய்து,உமிழ் நீரை நன்றாக சுரக்கச் செய்கின்றது. இதன் மூலம் உண்ணும் உணவுப் பொருளுடன்,உமிழ்நீர் நன்றாக கலந்து,செரிமான பாதையில், எவ்வித பிரச்சனைகளும் இல்லாமல்,உணவினை ஜீரணிக்கிறது. மேலும்,நீங்கள் பேசும்போது, நாக்கின் இயற்கையான நிறத்துடனே, நாக்கானது இருக்கும், அதில் வெள்ளையாக,மாவு போன்ற ஒரு படிவம் நீக்கப்பட்டு இருப்பதால்,நீங்கள் வாய் திறந்து பேசுவதையும், சிரிப்பதையும் தன்னம்பிக்கையோடு செய்வீர்கள்.
இரண்டு வேளை பல் துலக்கி, நாக்கை சுத்தப்படுத்துவது என்பது, சராசரி மனிதர்களை காட்டிலும்,ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்,வைற்று உபாதைகள் மற்றும் வாயு தொல்லை உள்ளவர்களுக்கு இன்றியமையாத விஷயமாகும்.
பல் துலக்குவதற்கு அந்த காலகட்டத்தில் ஆலங்குச்சி மற்றும் வேலங்குச்சி ஆகியவற்றை பயன்படுத்தினார்கள்.இன்னும் சில இடங்களில் கரித்துண்டு, அடுப்பிலிருந்து கிடைக்கும் சாம்பல் மற்றும் செங்கற் பொடி ஆகியவற்றையும் பயன்படுத்திவந்தார்கள். தற்காலங்களில் பேஸ்ட் மற்றும் பிரஷ் இந்த இடத்தை பிடித்துக் கொண்டது.
பல் துலக்கும் பிரஷ் மற்றும் பேஸ்ட்டை போலவே நாக்கை சுத்தம் செய்வதற்காக வழிப்பான்கள் எனப்படும் ஸ்கிரப்பர்கள்,கடைகளில் நிறைய வகைகளில் கிடைக்கின்றன. பிளாஸ்டிக்குகள்,ஸ்டீல்கள் மற்றும் செம்பினால் ஆன வழிப்பான்கள் கிடைக்கின்றன.
இந்த வழிப்பான்களை பயன்படுத்துவதனால்,நாக்கின் சுத்தம் பராமரிக்கப்படுகிறது. இதனால் வாய் துர்நாற்றம் மற்றும் ஈறுகளில் வீக்கம், ரத்தம் கசிவது போன்ற பிரச்சினைகளில் இருந்தும் நம்மை பாதுகாக்கிறது. தினம்தோறும் இதை பயன்படுத்துவதினால்,மிக அழுத்தமாக இதை பயன்படுத்தக் கூடாது. நாக்கில் இதை நன்றாக அழுத்தி பயன்படுத்தினால், சில நேரங்களில் ரத்தக்கசிவு அல்லது சுவையறும்புகள் பாதிப்படைவது போன்ற, பிரச்சினைகள் வரும்.ஆகவே கவனமாக மென்மையாக இதை பயன்படுத்த வேண்டும்.
தற்காலத்தில் செம்பினால் ஆன வழிப்பான்கள் புழக்கத்தில் கிடைக்கின்றன. இப்படியாக இரவு மற்றும் காலை என இருவேளையும் நாக்கை சுத்தப்படுத்துவதினால் செரிமானமானது மேம்படுகிறது என்பது ஆய்வுகளின் முடிவில் தெரிய வந்திருக்கிறது.
அதைப்போலவே,இவ்வாறு சுத்தம் செய்த நாக்கானது, மிகவும் மென்மையாகவும், நுட்பத்துடனும் விளங்கும். ஆகவே,அதிகப்படியான சூடாக சாப்பிடுவதோ,அதிகப்படியாக குளிராக சாப்பிடுவதோ, உங்கள் நாக்கு மற்றும் பற்களுக்கு தீங்கை விளைவிக்கும். எனவே,உங்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் என அனைவரையும், இரண்டு வேலையும் பல் துலக்கி, வழிப்பான்களை கொண்டு சுத்தம் செய்யும் பழக்கத்தை கொண்டு வாருங்கள். இதன் மூலம்,அவர்களின் உடல் ஆரோக்கியத்தை பேணி காப்பது மட்டுமல்லாமல், நம்பிக்கை நிறைந்த சிரிப்பையும் உங்களால் கொண்டு வர முடியும்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )