Octopus Mating : உடலுறவுக்குப் பிறகு தங்களைத்தானே அழித்துக்கொள்ளும் ஆக்டோபஸ்! - காரணம் ஏன் தெரியுமா?
இனச்சேர்க்கைக்குப் பிறகு ஆக்டோபஸ்கள் தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
இது நீண்ட காலமாக கடல்சார் நிபுணர்கள் மற்றும் சாதாரண மக்களால் அறியப்பட்ட ஒன்று. ஆனால் அதற்கான காரணம் எப்போதும் மர்மமாகவே இருந்தது. இயற்கையின் புதிர் எப்போதுமே அதிசயமானவை. அந்தப் புதிர்களில் ஒன்று ஆக்டோபஸ். ஆராய்ச்சியாளர்கள் இன்றளவும் கூட அவை வேற்றுகிரகத்தை சேர்ந்த உயிரினமாக இருக்கும் என நம்புகிறார்கள்.
விஞ்ஞானிகளால் நன்கு ஆய்வு செய்யப்பட்டு விளக்கப்பட்ட அவற்றின் தனித்துவமான பண்புகள், கடலில் உள்ள மற்ற உயிரினங்களிலிருந்து அவற்றை எப்போதும் தனித்து நிற்கச் செய்கின்றன. குறிப்பாக, இனச்சேர்க்கைக்குப் பிறகு ஆக்டோபஸ்கள் தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவை முட்டையிடுவதற்கு முன்பு தங்களைத் தாங்களே சித்திரவதை செய்து சாப்பிட முயற்சிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
View this post on Instagram
அவை ஏன் அவ்வாறு செய்கின்றன என்கிற கேள்விக்கு தற்போது பதில் கண்டறிந்துள்ளார்கள் விஞ்ஞானிகள். கரண்ட் பயாலஜி என்னும் ஜர்னலில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வின்படி, தாய் ஆக்டோபஸ்கள் முட்டையிடும் நேரத்தில் ஏற்படும் சில ரசாயன மாற்றங்களால் தாங்களாகவே வலியை உற்பத்தி செய்கின்றன அதை அடுத்து வலியின் காரணமாக அவைத் தங்களைத் தாங்களே சாப்பிடுகின்றன.
இதற்கு முன், 1977ல் வெளியான ஒரு ஆய்வு, ஆக்டோபஸின் கண்களுக்கு அருகில் உள்ள சுரப்பிகள் அவற்றின் சுய அழிவுக்கு காரணம் என்று விளக்கியது. அந்த நேரத்தில், சுரப்பிகள் ஸ்டீராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்வதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர், இது முட்டைகளை இடும்போது ஆக்டோபஸ்களை சித்திரவதை செய்ய தூண்டுகிறது.
தாய் முட்டையிடும் அதே நேரத்தில் மூன்று இரசாயன மாற்றங்கள் ஏற்படுவது கண்டறியப்பட்டது. ப்ரெக்னெனோலோன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் அளவுகளில் அதிகரிப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். 7-டீஹைட்ரோ கொலஸ்டிரால் அளவும் அதிகரிக்கிறது.
உடலில் ஏற்படும் இந்த இரசாயன மாற்றங்கள் பெரும்பாலும் ஒன்றாக சேர்ந்து ஆக்டோபஸ்கள் தங்களைத் தாங்களே வலியை உண்டாக்குகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் இப்போது நம்புகிறார்கள். இருப்பினும், ஆக்டோபஸின் உடலில் இத்தகைய கடுமையான மாற்றம் ஏற்படுவதற்கான சரியான காரணம் விஞ்ஞானிகளால் முழுமையாக கண்டறியப்படவில்லை. வாஷிங்டன் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் யான் வாங்கின் கூற்றுப்படி, ஆக்டோபஸ்கள் தங்கள் குஞ்சுகளைப் பாதுகாக்க இந்த செயல்முறை ஒரு வழியாகும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.