Barley Benefits | பார்லி சாப்பிட்டா எடை குறையுமா? பார்லியை இப்படியெல்லாம் பயன்படுத்தலாம்
உடல் எடை குறைப்பது பலருக்கும் பெரிய சவாலாக இருக்கும். எதை சாப்பிடுவது, எதை சாப்பிட்டால் எடை குறையும் என தெரியாமல் இருப்பது பெரிய அவஸ்தையாக இருக்கும்
உடல் எடை குறைப்பது பலருக்கும் பெரிய சவாலாக இருக்கும். எதை சாப்பிடுவது, எதை சாப்பிட்டால் எடை குறையும் என தெரியாமல் இருப்பது பெரிய அவஸ்தையாக இருக்கும். சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் பலதகவல்களை முயற்சி செய்து பார்த்து எடை குறையாமல் கவலையாக இருக்கிறீர்களா? இந்த பார்லி கஞ்சியை முயற்சி செய்து பாருங்கள். உடல் எடையும் குறையும். உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளும் பார்லியில் இருந்து கிடைக்கும்.
பார்லி என்பது கோதுமை போன்ற ஒரு தானியமாகும். பார்லி கஞ்சி , தண்ணீர், சூப், ரொட்டி போன்றவற்றை செய்து சாப்பிடலாம். இந்த பார்லி அரிசியில் எண்ணற்ற ஊட்டச்சத்துகள் நிறைந்து இருக்கிறது.
பார்லி தண்ணீர் குடிப்பதால், உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. இந்த பார்லி தண்ணீர் தயாரிப்பது எப்படி?
பார்லி தண்ணீர் தயாரிக்க தேவையான பொருள்கள்
பார்லி - 1 கப்
தண்ணீர் - 7 முதல் 8 கப்
எலுமிச்சை சாறு- 1
தேன் - 1 டீஸ்பூன்
இலவங்கப்பட்டை- தேவையான அளவு
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
செய்முறை
இலவங்கப்பட்டை மற்றும் இஞ்சி இரண்டையும் சேர்த்து தண்ணீரில், பார்லி அரிசியும் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். குறைந்தது 20- 30 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அவற்றை வடிகட்டி தண்ணீர் மட்டும் குடிக்க வேண்டும். தண்ணீரில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சுவைக்கு தகுந்தாற்போல் சேர்க்கவும். சுவையான பார்லி தண்ணீர் தயார்
பார்லி அரிசியில் இருக்கும் ஊட்டச்சத்துகள்
வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், மாங்கனீசு, செலினியம், பாஸ்பரஸ், இரும்பு, கால்சியம் மற்றும் துத்தநாகம், ஆக்ஸிஜனேற்றிகள், பைட்டோ கெமிக்கல்கள் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்து இருக்கிறது.
பார்லி நீரில் இருக்கும் பயன்கள்
பார்லி நீர் பழங்காலம் முதல் பயன்படுத்த பட்டு வரும் பானமாகும்.இது செரிமான பிரச்சனைகளுக்கு ஏற்ற பானமாகும். அஜீரணம், வாந்தி, செரிமானமின்மை போன்ற பிரச்சனைகளுக்கு இந்த பார்லி அரிசி தண்ணீர் பயன்படுத்தப்பட்டது. பொதுவாகவே இந்த பார்லி அரிசியானது, வளர்சிதை மாற்றத்தை தூண்டுகிறது. அதனால் வளர்சிதை மாற்றம் சீராக இருந்தால் உடல் எடை குறையும். பார்லி அரிசி கஞ்சியில் இனிப்பு சேர்க்காமல் எடுத்து கொள்வதன் மூலம், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி இந்த பார்லி அரிசியை உணவில் சேர்த்து கொள்ளலாம்.
சரும ஆரோக்கியத்திற்கும் புத்துணர்வுக்கும், இந்த பார்லி அரிசி முக்கியமானது. சரும ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துகள் இதில் இருக்கிறது.