மேலும் அறிய
Advertisement
Weight loss Drug : ஒற்றை தலைவலி + உடல் பருமன்.. ரெண்டுக்கும் ஒரே மருந்தா? ஆராய்ச்சியில் புது தகவல்..
டிரிப்டான்ஸ் எனப்படும் மாத்திரை ஒற்றை தலைவலி மற்றும் கிளஸ்டர் தலைவலி சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படும் மாத்திரைகளில் ஒன்றாகும்.
நம்முடைய ஊரில் தலைவலி என்றாலே உடனே தலைவலி மாத்திரை எடுத்துக்கொள்வதை ஒரு வழக்கமாகவே வைத்துள்ளோம். டிரிப்டான்ஸ் எனப்படும் மாத்திரை ஒற்றை தலைவலி மற்றும் கிளஸ்டர் தலைவலி சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படும் மாத்திரைகளில் ஒன்றாகும். இது உடல் பருமனுக்கு சிகிச்சை அளிப்பதில் உதவியாக இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
பருமனை எலிகள் மீது இந்த ஆய்வு நடத்தப்பட்டதில் தினசரி டிரிப்டான்ஸ் டோஸ் கொடுக்கப்பட்டது. அதன் விளைவாக அவை குறைவான உணவை உண்டு ஒரு மாத காலத்தில் உடல் பருமனை வெகுவாக குறைத்துள்ளது என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசியின்மை மற்றும் எடை இழப்பிற்கு இந்த மாத்திரை மிகவும் பாதுகாப்பானது என ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட இந்த மாத்திரைகள் மீண்டும் தயாரிப்படவிருக்கின்றன.
பருமனை எலிகள் மீது இந்த ஆய்வு நடத்தப்பட்டதில் தினசரி டிரிப்டான்ஸ் டோஸ் கொடுக்கப்பட்டது. அதன் விளைவாக அவை குறைவான உணவை உண்டு ஒரு மாத காலத்தில் உடல் பருமனை வெகுவாக குறைத்துள்ளது என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசியின்மை மற்றும் எடை இழப்பிற்கு இந்த மாத்திரை மிகவும் பாதுகாப்பானது என ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட இந்த மாத்திரைகள் மீண்டும் தயாரிப்படவிருக்கின்றன.
அமெரிக்காவில் உள்ள 41% க்கும் அதிகமான பெரியவர்கள் உடல் பருமனாக இருப்பதால் நீரிழிவு , பக்கவாதம், இதய நோய் மற்றும் சில வகையான புற்றுநோய்களால் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். உடல் பருமன் காரணத்தால் அவர்களின் உணவு முறையிலும், உடல் செயற்பாடுகளிலும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
முளைக்கும் உடலுக்கும் இடையில் ஒரு ரசாயன தூதுவராக விளங்கப்படும் செரோடோனின், பசியின்மை சார்ந்த விஷயத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நீண்டகாலமாக விஞ்ஞானிகள் அறிந்தது. இருப்பினும் 15 வெவ்வேறு செரோடோனின் ரெசெப்டர்ஸ் உள்ளன. அவை செரோடோனின் தன்மையை உணர்ந்து மூலக்கூறுகள் மற்றும் செல்களின் நடத்தையை மாற்றுவதற்கு சிக்னல் கொடுக்கின்றன. பசியின்மையால் ஒவ்வொரு செரோடோனின் ரெசெப்டர்ஸ் பங்கினை புரிந்து கொள்வது ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. மேலும் fen-phen மற்றும் Belviq போன்ற சில மருந்துகள் ரெசெப்டர்ஸ் குறிவைத்து பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் அவை தடை செய்யப்பட்டன.
டிரிப்டான்ஸ் மருந்துகள் ஒரு மாத காலத்திற்குள் உடல் எடையை குறைக்கும் மற்றும் குளுக்கோஸ் மெட்டபாலிசத்தை மேம்படுத்தும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் டாக்டர் லியு கூறுகையில் பொதுவாக டிரிப்டான்ஸ் மருந்துகள் குறைந்த காலத்திற்கு மட்டுமே பரிந்துரைக்கப் படுவதால் அதன் பசியின்மை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவியாய் இருப்பதை கவனித்திருக்க மாட்டார்கள் என்றார்.
டிரிப்டான்ஸ் மருந்துகள் மீண்டும் தயாரிக்கப்படுவதற்கு சாத்திய கூறுகள் இருந்தாலும் மருந்து வளர்ச்சிக்கு இந்த கண்டுபிடிப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கும். உடல் பருமனுக்கு சிகிச்சை அளிக்கவும், உணவு உட்கொள்வதை முறைப்படுத்தவும் இந்த ஆராய்ச்சி முக்கியமானதாகும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion