Mothers day | ”ஊரடங்கிலும் உனக்கு மட்டும் ஓய்வில்லை” - ட்விட்டரில் குவியும் அன்னையர் தின வாழ்த்துக்கள்
ஒரு சூறாவளியைப் பற்றிப் பேசினால், அது என் அம்மாவைப் பற்றிப் பேசுவதற்கான பொருத்தமான வாக்கியமாக இருக்கும் என்றவர் மாயா ஏஞ்சலோ
13 வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்ட என் அம்மாவுக்கு பள்ளிக் கல்வியில்லை. ஆனால் எங்களை மிகச்சிறப்பாக வளர்த்தெடுத்தவர் அம்மா என்று நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார் ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான்.
Mother never got opportunity to join school. But she raised us well. To all mothers who are special. In her marriage dress at the age of 13. #MothersDay pic.twitter.com/fB4zkZ7SOP
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) May 9, 2021
இப்போது இருக்கும் நான், என் அம்மா இல்லையென்றால் நிச்சயம் இப்படியாக இருந்திருக்கமாட்டேன். தாய்மை என்பது எந்த நிபந்தனையுமற்ற ஏற்றுக்கொள்ளல் என்று ட்விட்டரில் பதிந்திருக்கிறார் சத்குரு ஜக்கி வாசுதேவ்.
My mother set the ambience for me, without which I would not be what I am. Motherhood is not of biology but of unconditional Inclusion. #SadhguruQuotes #MothersDay pic.twitter.com/QETjZq0AVA
— Sadhguru (@SadhguruJV) May 9, 2021
தனது மகன் தன்னை முழுமைப்படுத்துவதாகவும், பெருமை கொள்வதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் தடகள வீராங்கனை பி.டி உஷா.
Happy Birthday to my son Vignesh 🎂
— P.T. USHA (@PTUshaOfficial) May 9, 2021
You complete me 👩👦#MothersDay pic.twitter.com/wNg639gjZZ
அம்மா நீ என் சிறந்த வழிகாட்டி, என் ஆற்றலுக்கும் தூண் என தனது நன்றியினை தெரிவித்திருக்கிறார் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா.
Thank you mom for always being my pillar of strength & showing me the right guidance. You will reamin my biggest inspiration! Wishing a very Happy #MothersDay to all the strong moms #LoveYouMa ❤️ pic.twitter.com/gJfmFm7SSX
— Suresh Raina🇮🇳 (@ImRaina) May 9, 2021
தன்னலமில்லாமல் இந்த உலகில் நீங்கள் யாரை நேசித்து, வளர்த்திருந்தாலும், உங்களுக்கு எனது அன்னையர் தின வாழ்த்துக்கள் என தெரிவித்திருக்கிறார் இந்தியாவின் மிகப் பிரபலமான சத்துணவு ஆலோசகரான ருஜுதா திவேகர்.
Happy Mother’s Day to everyone out there. Don’t forget to look after yourself. And while you do that tell me your most...
Posted by Rujuta Diwekar on Saturday, May 8, 2021