Summer Tips: வெயிலை சமாளிக்க ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவுகள்..
Summer Tips: உடலின் வெப்பத்தை சீராக வைத்துகொள்ள உணவில் சேர்த்துகொள்ள வேண்டியவைகளாக நிபுணர்கள் சொல்வதை இங்கே காணலாம்.
கோடை வெயில் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. சில்லுன்னு ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும் நேரங்களில் ஃப்ரிட்ஜில் இருந்து தண்ணீர், குளிர்பானங்கள் குடிப்பதை விட, இயற்கையான பழச்சாறு, இளநீர், பழங்கள், நீர்ச்சத்தி நிறைந்த காய்கறிகள் சாப்பிடுவது ஆகியவற்றை சாப்பிடலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
அதோடு, வெயில் காலத்தில் உடலின் வெப்பநிலையில சீராக வைக்க இயற்கையான வழிகளை தெரிவு செய்யலாம் என்று சொல்கின்றனர்.ஆயுர்வேத மருத்துவத்தின்படி, உடலில் வாதம், பித்தம், கபம் மூன்றும் உடலின் இயக்கத்திற்கு இன்றியமையாததாக இருக்கிறது. இவை மூன்றும் சீராக இருக்க வேண்டும்.
கோடை காலத்தில் அவசியம் இல்லாமல் வெயில் அதிகம் இருக்கும் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்கலாம். போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, உடலை குளிர்ச்சியாக வைத்துகொள்ளும் முறைகளை பின்பற்றலாம். 10-6 மணி வரை வெளியே செல்ல திட்டமிட வேண்டாம். ஆனால், எல்லாருக்கும் இதே நிலை இருக்காது. வேலைக்குச் செல்பவர்கள் கோடையை எதிர்கொள்வது சவாலானதாகவே இருக்கும். கோடையில் எலக்ட்ரோலைட்ஸ் அதிகமாக் எடுத்துகொள்ளலாம். பருத்தி ஆடைகளை அணியலாம். ஒரு நாளைக்கு இரண்டு வேளை குளிப்பது, உடற்பயிற்சி செய்வது உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும்.
உடலின் வெப்பத்தை சீராக வைத்துகொள்ள உணவில் சேர்த்துகொள்ள வேண்டியவைகளாக ஆயுர்வேதம் பரிந்துரைப்பதை காணலாம். இது தொடர்பாக ஆயுர்வேத மருத்துவர் ரிதுஜா சொல்லும் அறிவுரைகளை காணலாம்.
வெயில் அதிகமாக இருக்கும் நேரத்தில் (pitta-aggravating foods) எண்ணெயில் பொரித்த, அதிகம் உப்பு உள்ள உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இந்த காலத்தில் சிலருக்கு சில உணவுகள் குடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். இஞ்சி, மிளகாய் போன்றவைகள் உடலின் வெப்பத்தை அதிகரிக்கலாம். அதனால், இவற்றை குறைவாக பயன்படுத்துவது குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படாமல் இருக்க உதவும்.
புதினா, சீரகம், கொத்தமல்லி, வெந்தயம் இவற்றை சாப்பிடுவது உடலின் வெப்பத்தை சீராக வைக்க உதவும்.
புதினா:
புதினா ஒரு சிறந்த மூலிகை. அஜீரணக் கோளாறுகளை தடுக்கும். நெஞ்செரிச்சல் உள்ளிட்டவைகளை போக்கும். கோடை வெயிலிலும் உங்களை புத்துணர்வுடன் வைத்திருக்கும். இது உடலின் வெப்பத்தை வியர்வையாக வெளியேற்றுவதை தூண்டும் திறன் கொண்டது.
டீயில் புதினா சேர்க்கலாம், புதினா சட்னி, லெமன் புதினா ஜூஸ் உள்ளிட்ட வகையில் புதினாவை சேர்த்து கொள்ளலாம்.
Lemon balm:
இதுவும் புதினா குடும்பத்தை சேர்ந்த ஓர் மூலிகைதான். இதில் சிட்ரஸ் வாசனை நிறைந்திருக்கும். உடலின் வெப்பத்தை குளிர்விக்கவும் மனதை ரிலாக்ஸாக வைக்கவும் உதவும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதோடு பெப்பர்மின்ட், Spearmint , உள்ளிட்டவற்றையும் டீ செய்து அருந்தலாம்.
செம்பருத்தி:
செம்பருத்தி ஏராளமான சத்துக்களை கொண்டுள்ளது. இதய பாதுகாப்பு, சரும பாதுகாப்பு பலவற்றிற்கு உதவும். போலவே இது உடலின் வெப்பநிலையை சீராக வைக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. செம்பருத்தி டீ அருந்துவதால் உடலை குளிர்ச்சியாக வைப்பதோடு ஹைட்ரேட்டாகவும் வைக்கும்.
கொத்தமல்லி:
கொத்தமல்லி ஊட்டச்சத்து நிறைந்தது. உடலின் வெப்பநிலை குறைக்கும் திறன் இதற்கு உண்டு. உணவில் கொத்தமல்லி சேர்த்துகொண்டால் செரிமான மண்டலம் மகிழ்ச்சியாக இருக்கும்.
- ஒரு டீஸ்பூன் தனியாவை எந்த சமைக்கும் உணவில் சேர்க்கலாம்.
- சாலட், உணவு வகைகளில் கொத்தமல்லி இலைகளை தூவி சாப்பிடலாம்.
பெருஞ்சீரகம்:
இதில் உள்ள வைட்டமின் சி செரிமானத்தை தூண்டுகிறது. உங்களை புத்துணர்ச்சியுடன் இருக்க செய்கிறது. சீரகமும் உணவில் சேர்த்து கொள்ளலாம். இது உடலில் இருந்து நச்சுக்களை நீக்கும்.