Period Pain and Menstruation : பீரியட்ஸ் நாட்களில் அதிக சோர்வா? வயிறு வலியா? இந்த டிப்ஸை கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க..
மாதவிடாயின் போது ஒருவித அசௌகரியம் மற்றும் மனசோர்வு இருக்கும். தொடைகள், வயிறு மற்றும் முதுகு பகுதிகளில் கடுமையான வலியை உணர்வது இயல்பானது.

மாதவிடாயின் போது ஒருவித அசௌகரியம் மற்றும் மனசோர்வு இருப்பது இயல்பானது. ஆனால் மாதவிடாய் காலங்களில் சோர்வை உணராமலும், மனநிலையை அலைய விடாமல் இருப்பதற்காக சிலவற்றை கடைபிடிக்கலாம்.
வலியை குறைக்கலாம்:
பொதுவாக மாதவிடாயின் போது தொடைகள், வயிறு மற்றும் முதுகு பகுதிகளில் கடுமையான வலியை உணர்வது இயல்பானது. இது டிஸ்மெனோரியா என்று அழைக்கப்படும். மாதவிடாய் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே மாதவிடாய் பிடிப்புகள் தொடங்கிவிடும். சிலருக்கு லேசான அறிகுறிகள் இருக்கும் பலருக்கு கடுமையான தலைசுற்றல், குமட்டல், தலைவலி போன்ற அறிகுறிகள் இருக்கும். அதை குறைப்பதற்கு ஹீட்டிங் பேட் மூலம் முதுகு மற்றும் அடிவயிற்றில் ஒத்தடம் வைக்கலாம். ஜோஜோபா மற்றும் கிளாரி சேஜ் எண்ணெய் வைத்து வயிற்றில் மசாஜ் செய்யலாம். தசைப்பிடிப்புகளை சரி செய்ய அதற்கான உடற்பயிற்சிகளை செய்யலாம்.
வீக்கத்தை குறைக்கலாம் :
பொதுவாக மாதவிடாய்க்கு முன்னர் அல்லது பின்னர் மாதவிடாய் வீக்கம் இருக்கும். உடல் எடை அதிகரித்தது போல அல்லது வயிறு இறுக்கம் போன்ற உணர்வுகள் தோன்றும். அது போன்ற நேரங்களில் தண்ணீர் அல்லது நீராகாரங்கள் அதிகமாக குடிக்கவும். பழங்கள் மாற்றும் காய்கறிகளை அதிகமாக சேர்த்துக்கொள்ளவும். போதுமான அளவு வைட்டமின்கள், தாதுக்கள், புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு வகைகளை எடுத்து கொள்ளவேண்டும். காபியை தவிர்த்து இஞ்சி மற்றும் மிளகு சேர்த்த மூலிகை டீயை பருகலாம். போதிய அளவு ஓய்வு, உடற்பயிற்சி, யோகா அவசியம்.
டார்க் சாக்லேட் :
மாதவிடாய் காலத்தில் 40g - 120g அளவு டார்க் சாக்லேட் சாப்பிடுவதன் மூலம் மாதவிடாய் காலத்தின் போது இருக்க கூடிய அசௌகரியத்தை குறைக்கலாம். அதில் மெக்னீசியம் செறிவு இருப்பதால் தசை தளர்வுக்கு மற்றும் பிடிப்பை சரி செய்ய உதவுகிறது.
சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்:
மாதவிடாயின் போது பிறப்புறுப்பில் புளிப்பு நாற்றம் இருப்பது இயற்கையானது. பொதுவாக மாதவிடாய், செக்ஸ் மற்றும் ஓவியுலேஷன் சமயங்களில் யோனி உங்களை பராமரிக்க முயற்சிக்கிறது. லாக்டோபாகில்லி எனப்படும் பாக்டீரியா சமநிலையை பராமரிக்க உதவுகிறது. இது நன்மை பயக்கும் பாக்டீரியா என்பதால் எந்த ஒரு பயமும் தேவையில்லை. பிறப்புறுப்பின் வெளிப்புறத்தை வெதுப்பான நீரால் சுத்தம் செய்யலாம். ஆனால் சோப்பை பயன்படுத்த கூடாது. அது யோனியை எரிச்சலூட்டி, pH சமநிலையை சீர்குலைக்கும்.
எப்போது சானிட்டரி பேட் மாற்ற வேண்டும்:
எப்போது நீங்கள் துர்நாற்றம் அல்லது அசுத்தமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறதோ அப்போது நாப்கினை மாற்ற வேண்டும். எட்டு மணி நேரத்திற்கு ஒரு முறை நிச்சயமாக நாப்கின் அல்லது டம்பானை மாற்ற வேண்டும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

