Lime Benefits: தேகத்தை ஆரோக்கியமாய் பராமரிக்க உதவும் எலுமிச்சை... எப்படி தெரியுமா..? அறிவோம் வாங்க!
எலுமிச்சை பழத்தின் நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
![Lime Benefits: தேகத்தை ஆரோக்கியமாய் பராமரிக்க உதவும் எலுமிச்சை... எப்படி தெரியுமா..? அறிவோம் வாங்க! Lemon benefits glowing skin remedy for constipatin stomach problems Lime Benefits: தேகத்தை ஆரோக்கியமாய் பராமரிக்க உதவும் எலுமிச்சை... எப்படி தெரியுமா..? அறிவோம் வாங்க!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/28/f579318deb29936e216393f83e62ef061685260610611333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
எலுமிச்சைக் கனி ஒரு அதிசயக்கனி. ஆம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், சரும அழகை பராமரிப்பதிலும் எலுமிச்சை பழம் முக்கிய பங்காற்றுகிறது. குறைந்த விலையில் எல்லா காலங்களிலும் கிடைக்கும் எலுமிச்சை பழத்தை ஜூசாக பருகுவதன் மூலம் ஏராளமான நன்மைகளை பெற முடியும்.
எலுமிச்சை பழத்தில் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து உள்ளது. இது நுரையீரல் தொற்றுக்களை குறைக்க உதவுகிறது. எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது.
உடல் எடையால் அவதி படுபவர்கள், அடிக்கடி எலுமிச்சைச்சாறு அருந்துவதன் மூலம் உடல் எடையை வெகுவாக குறைக்க முடியும். எலுமிச்சை ஜூஸில் சர்க்கரை கலக்காமல் பருகுவது கூடுதல் நன்மையை கொடுக்கும். வயிற்றுவலி, வயிற்று உப்புசம், நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றை சரியாக்கும் ஒப்பற்ற சாறு.
எலுமிச்சை சாறு பருகுவதால், சிறுநீர் அடைப்பு விலகும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். உடலின் தற்காப்பு சக்தி எலுமிச்சையால் பெருகும். கடல் உப்பினால் உப்பிய உடம்பு எலுமிச்சைச் சாறால் கட்டழகு மேனி பெறும். எலுமிச்சை பழம் பித்தத்தை போக்க வல்லது.
தலைவலி தீர்க்கும், மலச்சிக்கல் விலக்கும், தொண்டை வலியைப் போக்கும், வாந்தியை நிறுத்தும், காலராக் கிருமிகளை ஒழிக்கும், பல் நோய்களை குணப்படுத்தும், வாய் நாற்றத்தால் அவதி படுவோர், சரும நோய்களைக் குணப்படுத்தும், டான்சிலைத் தடுக்கும், விஷத்தை முறிக்கும், வாய்ப்புண்ணை ஆற்றும், தேள் கடிக்கு உதவும், வாயுத்தொல்லையால் அவதிப்படுவோர் எலுமிச்சை சாற்றை பருகி நிவாரணம் பெற முடியும். மேலும் பசியை தூணுட்ம் தன்மை கொண்டது. விரல் சுற்றிக்கு உதவும்
நீரிலும், காற்றிலும் ஏற்படும் கதிரியிக்க அபாயத்தைத் தடுக்கும் ஆற்றல் எலுமிச்சை தோலில் உள்ள ப்யோபிளேன் என்ற சத்தில் உள்ளது. தினமும் எலுமிச்சையை உண்பவர்கள் கதிரியக்கத்தைத் தாங்கி தப்ப முடியும். புற்று நோய்க்காரர்களுக்கு எக்ஸ்ரே சிகிச்சையால் ஏற்படும் கதிரியக்கத்தைத் தீங்கையும் தடுக்கும் வல்லமை படைத்து எலுமிச்சை என்று கூறப்படுகிறது.
விளையாட்டு, ஓட்டப் பந்தயம், கடுமையான வேலை இவற்றால் ஏற்படும் களைப்பை நீக்க ஒரு எலுமிச்சப் பழத்தை எடுத்து உடனே கடித்துச் சாற்றையோ அல்லது பிழிந்து சர்க்கரை போட்டோ சாப்பிட்டால் உடனடி தெம்பு ஏற்படும். உண்ணாவிரம் இருந்து முடிப்போர் மீண்டும் உண்ணும்போது எலுமிச்சை பழச்சாறு அருந்திவிட்டு உணவு உண்டால் அஜீரணப் பிரச்சனைகள் நேர்வதைத் தடுக்கலாம்.
இப்படி உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொக்கும் எலுமிச்சை பழம் மார்க்கெட்டுகளில் குறைவான விலைக்கு கிடைக்கின்றது. அனாலும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப எலுமிச்சை பழத்தை அளவுடன் சாப்பிட்டு அதன் நன்மைகளை பெறலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)