Kiss Day 2025 : நெற்றி முதல் கழுத்து வரை.. முத்தத்தில் இத்தனை வகைகளா? கிஸ் டே ஸ்பெஷல்
Kiss Day 2025 : காதலன் காதலிக்கு கொடுக்கும் முத்தம் என்பது அவர்கள் இருவருக்கும் நடுவில் இருக்கும் பாசம், பிணைப்பு, நம்ப்பிக்கை ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது.

பிப்ரவரி மாதம் என்றவுடனே நம் நினைவுக்கு வருவது காதலர் தினம் தான், காதலர் தினம் என்பது ஒரு நாள் கொண்டாட்டம் அல்ல அது வாரம் கொண்டாடப்படுகிறது. பிப்ரவரி 7 ஆம் தேதி ரோஸ் டேவுடன் தொடங்கும் இந்த கொண்டாட்டங்கள் பிப்ரவரி 14 காதலர் தினத்துடன் நிறைவடைகிறது. நாளை உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று 13.02.2025 முத்த தினம் கொண்டாடப்படுகிறது.
முத்த தினம்:
முத்தம் என்பது உணர்ச்சிகளின் வெளிபாடாகும், முத்தத்தில் பல வகைகள் உள்ளன, ஒவ்வொரு முத்தமும் ஒவ்வொரு உணர்ச்சியை தரும். காதல் காதலிக்கு கொடுக்கும் முத்தம் என்பது அவர்கள் இருவருக்கும் நடுவில் இருக்கும் பாசம், பிணைப்பு, நம்ப்பிக்கை ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது.ஒவ்வொரு முத்தமும் எதை வெளிப்படுத்துகிறது என்பதை இதில் காண்போம்.
நெற்றி முத்தம்:
நெற்றி முத்தம் என்பது காதலன் மற்றும் காதலி நெற்றியில் கொடுக்கும் போது தாயின் பாசம், அக்கறை போன்றவற்றை பிரதிபலிக்கும் விதமாக நெற்றியில் கொடுக்கும் முத்தம் இருக்கும்.
மூக்கில் முத்தம்:
காதல் அல்லது காதலி தங்களது துணைக்கு மூக்கில் முத்தம் இடும் போது நீ எவ்வளவு அழகாய் இருக்கிறாய் என்பதை எடுத்துச்சொல்லும் ஒரு ரொமான்டிக் முத்தமாக இருக்கிறது.
உதட்டில் முத்தம்:
உதட்டில் முத்தமிடும் போது உங்கள் காதலன் மற்றும் காதலி தங்கள் இணையை தங்கள் உயிருக்கும் மேலாக நேசிக்கிறார்கள் என்பதை பிரதிப்பலிக்கும் விதமாக உதடுகளில் கொடுக்கும் முத்தம் உள்ளது.
கையில் முத்தம்:
உங்கள் காதலன் அல்லது காதலியை கைகளில் முத்தமிடும் போது தங்களின் துணையை மனத்தில் மிகுந்த மதிப்போடும் நேசத்தோடு நேசிப்பதாகவும் அர்த்தம்.
கன்னத்தில் முத்தம்:
கன்னத்தில் கொடுக்கும் முத்தம் என்பது உங்கள் காதலன் அல்லது காதலி நட்பாகவும், பாசத்தோடு இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.
கழுத்தில் முத்தம்:
இது இருக்கும் முத்தத்தில் மிகுந்த ரொமான்ட்டிக்கான முத்தமாக பார்க்கப்படுகிறது, காதலம் மற்றும் காதலில் கூடலில் இருக்கும் போது பின்னால் வந்து அணைத்து முத்தமிடும் போது இருவருக்குமான காதல் அதிகரிக்கும்.
கண்களில் முத்தம்:
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா என்கிற பாடல் அனைவரின் பிளே லிஸ்ட்டிலும் இடம் பெற்றிருக்கும், அந்த வகையில் கண்களில் இமைகளில் காதலன் அல்லது காதலி முத்தமிடும் போது உங்களை வாழ்க்கை முழுவதும் கண்களில் வைத்து பார்த்துக்கொள்வேன் என்பதை குறிக்கிறது.
விரல்களில் முத்தம்:
விரல்களில் முத்தம் ஈடுவது என்பது இந்த உலகமே நீதான் என்பதை சொல்லாமல் சொல்லும் விதமாக இந்த முத்தம் உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

