Organic Foods:ஆர்கானிக் உணவுப் பொட்களின் தரத்தை கண்டறிவது எப்படி? இதோ டிப்ஸ்!
Organic Foods கடைகளில் கிடைக்கும் ஆர்கானிக் உணவுகளை எப்படி தரத்துடன் வாங்குவது என்பதற்கான டிப்ஸ் இங்கே காணலாம்.
ஆர்கானிக் முறையில் விளைவிக்கப்படும் பழங்கள், காய்கறிகள் ஆகிவற்றிற்கான தேவை அதிகரித்துள்ளது. பலரும் ஆர்கானி பொருள் என்பதை தேடி வாங்குவதும் அதிகரித்துள்ளது. பூச்சிக்கொல்லி, ரசாயனங்கள் இல்லாமல் உற்பத்தி செய்யப்படும் காய்கறி, பழங்கள் ஆரோக்கியமானவை என்பதுடன் சுவையாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் சந்தைகளில் பல்வேறு வகைகள் இருப்பதால் எதை வாங்குவது, எது நிஜ ஆர்கானிக் உணவுப் பொருள் உள்ளிட்டவற்றிற்கு நிபுணர்களின் பதிலை காணலாம்.
ரசாயன கொல்லிகளைப் பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் உற்பத்தி செய்யப்படுவதே ஆர்கானிக் முறை என்று சொல்லப்படுகிறது இதன் மூலம் எந்த உயிரினங்களுக்கு கேடு விளையாது. இயற்கை உரங்கள் பயன்படுத்தப்படுவதால் அவை இயற்னையான முறையில் விளைவிக்கப்பட்ட ஆர்கானிக் காய் கனிகளாகும்.
ரசாயான பூச்சுக்கொல்லிகள் பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து இதை சாப்பிடுவதால் பல நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆர்கானிக் உணவுப் பொருட்களை கண்டுபிடிப்பது எப்படி?
ஆர்கானிக் என்ற லேபிள் இருப்பதை வைத்து மட்டுமே அதை நம்பிவிட முடியாது. உற்பத்தியாள, விவசாயி, எங்கே விளைவிக்கப்படுகிறது உள்ளிட்ட விவரங்களை தெரிந்துகொள்ளுங்கள்.
NPOP (National Program for Organic Production) அல்லது APEDA (Agricultural and Processed Food Products Export Development Authority) ஆகிய அரசின் அங்கீகாரம் பெற்றதா. அதற்கான சான்றிதழ் இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். நீங்கள் வாங்கும் பழங்கள்,காய்கறி ஆகியவற்றின் லேபிளில் குறிப்பிட்டுள்ள தகவல்களை படித்து உறுதி செய்ய வேண்டும்.
பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றின் தோற்றத்தை கவனிக்க வேண்டும். இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டவைக்கு தனியாக ஒரு தோற்றம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதன் நிறம், உருவம் மிகச் சரியாக இருக்காது. உதாரணத்திற்கு தக்காளி இருக்கிறது என்றால் அதன் தோலின் நிறம் சீரற்று இருக்கும். மெழுகு உள்ளிட்டவைகள் கோட் செய்யப்படதாக இருக்காது.
இயற்கையான முறையில் ரசாயன பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டிருக்காது. இதனால் பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றின் உள்ளே பூச்சி, புழு இருப்பதற்கு வாய்ப்பு அதிகம்.
நீங்கள் ஆர்கானிக் கடைகளில் இருந்து வாங்கும் பழங்கள், காய்கறிகளின் மணம் நன்றாக இருக்கும். அதில் இயற்கையான மணம் இருக்கும். ஏனெனில், இது உற்பத்தி செய்யப்பட்ட இடத்தில் இருந்து ஃப்ரெஷாக சந்தைகளுக்கு அனுப்பப்படும். காரணம், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டது வெகு நாட்களுக்கு இருக்காது. அவற்றை குறிப்பிட்ட நாட்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும்.
இயர்கையாக விளைவிக்கப்பட்ட பொருட்களின் சுவை தரமாக இருக்கும். ஏனெனில் அதில் தாதுக்கல், ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கும். ரசாயனம் பயன்படுத்தப்படாததால் அதற்கு தனி சுவை இருக்கும் என்று சொல்லப்படுகிறது.