Household Tips:இதை பண்ணா வீட்டில் பல்லியே வராது.. டாய்லெட் துர்நாற்றத்திற்கு குட்பை சொல்லுங்க- எளிமையான டிப்ஸ்கள்
வீட்டில் பல்லி வராமல் இருக்கவும், டாய்லெட்டில் பல்லி வராமல் இருக்கவும் எளிய டிப்ஸ்களைப் பார்க்கலாம்.
வீட்டில் பல்லி வராமல் இருக்க
50 கிராம் அளவு பாமாயிலை கடாயில் சேர்த்து அதை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் 15 கொத்து வேப்பிலையை சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்போது வேப்பிலை நன்கு வெடிக்க ஆரம்பிக்கும். சற்று தூரமாக நிற்பது நல்லது. இல்லையென்றால் மூடி வைத்து விடலாம். எண்ணெயின் சத்தம் அடங்கியதும் மூடியை திறந்து வேப்பில்லையை மட்டும் எண்ணெயில் இருந்து எடுத்து விட வேண்டும். இதை ஆற வைத்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் 3 கற்பூரத்தை பொடி செய்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு ரசக்கற்பூரத்தை உடைத்து தூளாக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை நன்றாக கலக்கி கொள்ள வேண்டும். வீட்டில், இந்த எண்ணெயை சிறு சிறு ஸ்பான்ச் துண்டுகளின் மீது சிறிதளவு ஊற்றினால் ஸ்பான்ச் எண்ணெயை உறிஞ்சிக் கொள்ளும். இந்த ஸ்பான்ச் துண்டுகளை, கழிவறை, குளியலறை, சமையலறை, உள்ளிட்ட பல்லி அதிகமாக வரும் இடங்களில் வைத்து விடலாம். இப்படி செய்தால் பல்லி வரவே வராது.
டாய்லெட்டில் துர்நாற்றம் வராமலிருக்க...
ஒரு கிண்ணத்தில் ஒரு டீஸ்பூன் அளவு கோல்கேட் பேஸ்ட்டை எடுத்துக் கொண்டு இதனுடன் ஒரு டீஸ்பூன் ஆப்ப சோடாவை சேர்த்துக் கொள்ள வேண்டும். முகத்தில் போடக்கூடிய பவுடர் இரண்டு டீஸ்பூன் அளவு இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த மூன்றையும் நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும். இதை மிக சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். நாம் எடுத்துக்கொண்ட அளவுக்கு 4 முதல் 5 உருண்டைகள் கிடைக்கும். இதை 1 மணி நேரம் காய விட வேண்டும். வீட்டின் குளியலரை, டாய்லெட் உள்ளிட்ட இடங்களில் இந்த உருண்டையை போட்டு வைத்தால் வாசமாக இருக்கும். மேலும் டாய்லெட்டின் ப்ளஷ் டேங்கில் இதில் இரண்டு மூன்று உருண்டைகளை போட்டு வைப்பதன் மூலம், இது ஒவ்வொரு முறை ஃப்ளஷ் செய்யும் போதும் தண்ணீரில் சிறிது சிறிதாக கரைந்து வரும். இதனால் கறைப்படியாமல் இருக்கும்.
மேலும் படிக்க
Crime: கொலையில் முடிந்த காதல்! பட்டப்பகலில் 18 வயது இளைஞனை வெட்டிக் கொன்ற சிறுவன் - கோவையில் கொடூரம்