ஜூஸ் தொடங்கி பருப்பு வகைகள் வரை.. இதெல்லாம் ரொம்ப ஆரோக்கியம்னு நினைச்சீங்களா? ஷாக் தகவல்..
ஆரோக்கியமான, சத்தான உணவை வாங்குவது என்றால் விலையுயர்ந்த பேக்கேஜ் செய்யப்பட்ட அல்ட்ரா-ப்ராசஸ் செய்யப்பட்ட உணவுகளை வாங்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை
யோகர்ட், எனர்ஜி பார்கள், வேகவைத்த சிப்ஸ், முழு கோதுமை மாவில் செய்யப்பட்ட நூடுல்ஸ் - அனைத்தும் உங்களுக்குப் பிடித்த உணவுகளின் ஆரோக்கியமான மாற்று என நம்புகிறீர்கள் இல்லையா? துரதிர்ஷ்டவசமாக, அப்படி இல்லை. இன்று பல நிறுவனங்கள் "அனைத்து-இயற்கை", "க்ளூட்டன் ஃப்ரீ" "குறைந்த கலோரிகள்" மற்றும் "கொழுப்பு இல்லாதவை" போன்ற மார்க்கெட்டிங் வார்த்தைகளைக் கொண்டு அனைத்தையும் பிரபலமாக்கியுள்ளன. இருப்பினும், ஆரோக்கியமான, சத்தான உணவை வாங்குவது என்றால் விலையுயர்ந்த பேக்கேஜ் செய்யப்பட்ட அல்ட்ரா-ப்ராசஸ் செய்யப்பட்ட உணவுகளை வாங்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. இது அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வழிகள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் ஆரோக்கியமான இயற்கை உணவுகளை உண்ணும்போது, அது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.அதாவது உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி மனதை கூர்மைப்படுத்துகிறது. அடுத்த முறை நீங்கள் பல்பொருள் அங்காடிக்குச் செல்லும்போது அல்லது ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்யும்போது, உங்கள் மளிகைப் பொருட்கள் பட்டியலில் இந்த உணவுகள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
பழங்களைச் சாப்பிடுங்கள், பழச்சாறை அல்ல!
பழச்சாறுகள் பொதுவாக ஆரோக்கியமான உணவுகள் என்று தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றன, ஏனெனில் அவற்றில் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன குறிப்பாக அவை ஆரஞ்சுகளில் இருந்து வைட்டமின் சி போன்றவை உடலுக்கு பெரிய அளவில் ஊட்டச்சத்து அளிக்கிறது. இருப்பினும், இதில் உள்ள பிரச்சினை என்னவென்றால், பழச்சாறு உணவில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் ஸ்டார்ச் மற்றும் தோலில் இருக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை இழக்கிறது. மேலும், நீரிழிவு அல்லது உடல் பருமன் போன்ற உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்கள் இதை உட்கொண்டால், அது அதிக சர்க்கரை அளவைக் கருத்தில் கொண்டு சர்க்கரை அளவை அதிகரிக்கும். இயற்கையான நார்ச்சத்து அகற்றப்படும் போது, பிரக்டோஸ் விரைவாக உறிஞ்சப்பட்டு, இரத்த சர்க்கரையின் திடீர் அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது, இதனால் கணையம் இன்சுலின் வெளியிடுகிறது. காலப்போக்கில், இந்த நுட்பம் தேய்ந்து, டைப் 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும். பேக்கேஜ் செய்யப்பட்ட பழச்சாறுகளும் மிகவும் தீங்கு விளைவிக்கும், ஏனெனில் அவை செறிவூட்டப்பட்டவை. எனவே, பழச்சாறுகளுக்குப் பதிலாக பழங்களை சாப்பிடுவது நல்லது.
இன்ஸ்டண்ட் எனர்ஜி பார்களை தவிர்க்கவும்
ஜிம்மில் ஒரு கடினமான உடற்பயிற்சி, வேலைக்குப் பிறகு அல்லது மிகவும் பிஸியான நாளின் நடுவில், நாள் முழுவதும் நீடிக்கும் கூடுதல் உந்துதலைக் கொடுக்கும் ஏதாவது ஒன்றை நீங்கள் தேடுவது நியாயமானதே. அடுத்த முறை உங்கள் பையில் கிடக்கும் கிரானோலா அல்லது எனர்ஜி பாரை நீங்கள் எடுத்து சாப்பிடும் முன்பு மீண்டும் ஒருமுறை யோசியுங்கள்.
இந்த பார்கள் பெரும்பாலும் ஆரோக்கியமான தின்பண்டங்களாகத் தோன்றினாலும், அதில் அதிக கலோரிகள் மற்றும் சர்க்கரை மற்றும் ப்ரிசர்வேட்டிவ்கள் சேர்க்கப்பட்டிருப்பதால் அவற்றை உட்கொள்ளக்கூடாது. இதனால் ஜிம்மில் அல்லது வொர்க்அவுட்டில் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வீணாகிவிடும். மாறாக, உலர்ந்த பழங்கள், வறுத்த கொட்டைகள் மற்றும் விதைகளுக்கு மாற வேண்டும்.
பேரீச்சம்பழம், அத்திப்பழம், அக்ரூட் பருப்புகள், வறுத்த பாதாம் மற்றும் நிலக்கடலை, வகைவகையான வறுத்த எள், தர்பூசணி விதைகள் போன்றவற்றை எடுத்துக்கொள்வது, அந்த நீண்ட நாட்கள் சோர்வடையாமல் வாழ உதவும்.
இதுமட்டுமில்ல, நிறைய பருப்பு வகைகள் மொத்தமாக உண்பதும் வாயுவை உற்பத்தி செய்யலாம். பேக்கேஜ், இன்ஸ்டண்ட் உணவுப் பொருட்களும் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.