மேலும் அறிய
Advertisement
என்ன செஞ்சாலும் கூந்தல் வறண்டு போகுதா? இதையெல்லாம் செஞ்சிடுங்க.. அப்புறம் பாருங்க..
ஒரு அவகாடோ பழத்தை மசித்து செய்து முட்டையுடன் சேர்க்கவும். பின்னர் ஈரமான கூந்தலில் தடவி குறைந்தபட்சம் 20 நிமிடங்களுக்கு மேல் ஊற விட்டு கழுவினால் மென்மையான கூந்தலை பெறலாம்
கூந்தல் வறண்டு போகாமல் தடுக்க குறிப்புகள்...
அவகாடோ
ஒரு அவகாடோ பழத்தை மசித்து செய்து முட்டையுடன் சேர்க்கவும். பின்னர் ஈரமான கூந்தலில் தடவி குறைந்தபட்சம் 20 நிமிடங்களுக்கு மேல் ஊற விட்டு கழுவினால் மென்மையான கூந்தலை பெறலாம்.
வெண்ணெய்
வெண்ணெயை வரண்ட முடிகளில் மசாஜ் செய்யுங்கள், பின்னர் ஒரு அரை மணிநேரம் ஊற விடுங்கள். வழக்கம்போல் ஷாம்பூ செய்யுங்கள். பளபளப்பான கூந்தலை எளிதாக பெறலாம்.
முட்டை மாஸ்க்
வறண்ட கூந்தலுக்கு முட்டை மாஸ்க்கும் சிறந்தது. முட்டையின் வெள்ளை கரு, ஆலிவ் ஆயில் சேர்த்து தலையில் கூந்தலில் அப்ளே செய்யவேண்டும். பிறகு 15-20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இதைச் செய்து வந்தால் உங்கள் கூந்தல் பட்டுப்போல் அலைபாயும்.
ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயில் வறண்ட கூந்தலுக்கான மிகச் சிறந்த முறையாகும். 1/2 கப் ஆலிவ் எண்ணெயை இதமான சூட்டில் எடுத்துக்கொள்ளவும். வரண்ட உங்கள் கூந்தலில் தேய்க்கவும். பின்னர் கூந்தலை ஒரு பிளாஸ்டிக் பையைக் கொண்டு கவர் செய்யவும். 45 நிமிடங்களுக்கு பின்னர் ஷாம்பூ செய்தால் மென்மையான பளபளப்பான கூந்தலை பெறலாம்.
கற்றாழை ஜெல்
உங்கள் வறண்ட கூந்தல் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர கற்றாழை ஜெல் பெரிதும் பயன்படுகிறது. கற்றாழை ஜெல்லை மயிர்க்கால்களில் படும்படி தேய்க்கும்போது அது முடியின் வேர்க்கால்களுக்குள் நுழைந்து கூந்தல் வறண்டு போவதை தடுக்கிறது.
கற்றாழை ஜெல்லை தடவிய பிறகு ஒரு ஒரு மணிநேரம் அப்படியே வைக்க வேண்டும். பிறகு கெமிக்கல் குறைவான ஷாம்பு கொண்டு அலசிக் கொள்ளுங்கள்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
சென்னை
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion