மேலும் அறிய

Holi 2024 Wishes: வண்ணங்களின் கொண்டாட்டம் - ஹோலி வாழ்த்து மெசேஜ் இதோ!

Holi 2024 Wishes in Tamil: ஹோலி பண்டிகைக்கு வாழ்த்து சொல்ல சில செய்திகள் இதோ!

இந்தியாவில் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும் ஒன்றாகும். நாளை (25.03.2024) ஹோலி கொண்டாடப்படுகிறது. குளிர்காலம் முடிந்து கோடையை வரவேற்கும் பண்டிகை ஹோலி.

வட மாநிலங்களில் விமரிசையாக கொண்டாடுவது அதிகமாக இருந்தாலும் மற்ற மாநிலங்களிலும் ஹோலி பண்டிகை கொண்டாடுவது வழக்கமாகிவிட்டது. நண்பர்கள், குடும்பத்தினர் எல்லாரும் இணைந்து ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடிகளை தூவி, பல வண்ண பொடிகள் கலந்த தண்ணீர் ஊற்றி மகிழ்ச்சியுடன் விளையாடுவர்.

ஹோலிக்கு முந்தைய நாள் இரவு, மக்கள் ஹோலிகா தஹான் என்ற மதச் சடங்கைச் செய்து, தீமையின் அழிவைக் குறிக்கும் "ஹோலிகா" என்ற பேய்க்கு தீ வைத்து எரித்து, மறுநாள்  வண்ணம் நிரப்பப்பட்ட பலூன்களைப் பயன்படுத்தி ஒருவருக்கொருவர் வண்ணங்களைப் பூசி கொண்டாடி மகிழ்வர். 

ஹோலி பண்டிகை 

ஹோலி பண்டிகை வசந்தத்தை வரவேற்கும்விதமாக இருக்கும். மற்றொரு கதை, கிருஷ்ண அவதாரத்தில் ஸ்ரீகிருஷ்ணரும், ராதையும் மகிழ்ந்து கொண்டாடிய திருவிழா ஹோலி என்றும் சொல்லப்படுகிறது. ஆயர்பாடி மக்களும், ஆவினங்களும் கொண்டாடிய சந்தோஷத் திருவிழா ஹோலி என்று புராண கதைகளிலும் சொல்லப்படுகிறது. 

ஹோலி பண்டிகை ஓவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. உத்தரபிரதேசம் மாநிலத்தில் லத்மார் ஹோலி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. துரா, பார்சனா, விர்த்வான்,  ஆகிய பகுதிகளில் முதலில் ஹோலிப் பண்டிகை தொடங்குகிறது. மதுரா கிருஷ்ணரின் பிறப்பிடம் என்பதால் இந்தப் பகுதிகளில் ஹோலி பண்டிகை இங்கு மிகவும் மகிமையுடன் கொண்டாடப்படுகிறது.

பீகார் மாநிலத்தில்  பகுவா என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. கேரளாவில் உக்ளி, கோவாலில் ஷிக்மோவில், ராஜஸ்தான் மாநிலத்தில் ராயல், பஞ்சாபில் ஹோலா மெஹலா என்ற பல்வேறு பெயரில் கொண்டாடப்படுகிறது. இப்படி பல்வேறு பெயர்களில் கொண்டாடப்பட்டாலும் ஹோலி என்பது வண்ணங்களின் பண்டியாக கொண்டாடப்படுகிறது. நேர்மறையான எண்ணங்களை பரப்பும்விதமாகவும் ஹோலி நம்பப்படுகிறது.

ஹோலி பண்டிகை - வாழ்த்து செய்திகள்..

  • வண்ணங்களின் கொண்டாடத்தில் மகிழ்ந்திருங்கள்..ஹோலி வாழ்த்துகள்..
  • நட்பின் மகத்துவத்தை உணர்ந்து கொண்டாடுங்கள். ஹோலி வாழ்த்துகள்!
  • ஹோலி உங்களுக்கு பல நன்மைகளை அளிக்கட்டும். இந்த நாளில் எல்லாம் புதியதாக தொடங்கட்டும். ஹோலி வாழ்த்துகள். 
  • இனிய ஹோலி வாழ்த்துகள். வாழ்க்கையில் வசந்தம் நிலைக்கட்டும்!
  • சோகங்கள் வண்ணங்கள் கொண்டாட்டத்தில் மறையட்டும். நலமே சூழட்டும். இனிய ஹோலி வாழ்த்துகள்.
  • வாழ்க்கை வண்ணங்களால் நிறையட்டும்.இனிய ஹோலி வாழ்த்துகள்!
  • அன்புடன் வாழ்வோம். இனிய ஹோலி வாழ்த்துகள்!
  • வண்ணங்களுடன் கொண்டாடும் பொழுதுகளை மறக்க வேண்டாம். நம்பிக்கையான தருணங்கள் காத்திருக்கிறது என்பதை இது உணர்த்துகிறது. ஹோலி பண்டிகை வாழ்த்துகள்!
  • வண்ணங்கள் நிறந்த நாளில் தீய பழக்கங்கள், எண்ணங்களை கைவிட உறுதி ஏற்போம்! ஹோலி பண்டிகை வாழ்த்துகள்!
  • ஹோலி நாளில் உங்கள் அன்புக்குரியவர்களிடம் வெளிபடுத்துங்கள்! ஹோலி பண்டிகை வாழ்த்துகள்!
  • உங்கள் வாழ்வில் வண்ணங்கள் எப்போதும் நிறைந்திருக்கட்டும். ஹோலி பண்டிகை வாழ்த்துகள்!
  • உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஹோலி பண்டிகை வாழ்த்துகள்!
  • நண்பர்களுக்கு இனிய ஹோலி வாழ்த்துகள்! வாழ்க்கை வண்ணமயமாகட்டும்!
  • வாழ்க்கையை கொண்டாடி மகிழ வேண்டும் என்பதை இந்த வண்ணங்கள் நினைப்படுத்தட்டும். ஹோலி வாழ்த்துகள்!
  • மகிழ்ச்சியாக இருப்பதே வாழ்க்கை. இனிய ஹோலி வாழ்த்துகள்!
  • வாழ்வில் எல்லாம் சிறப்பாக நடக்கட்டும். ஹோலி வாழ்த்துகள்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Embed widget