மேலும் அறிய

Holi 2022: இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படும் ஹோலி வகைகள்: எங்கே? எப்படி?

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படும் ஹோலி வகைகள்: எங்கே? எப்படி?

ஹோலிப் பண்டிகை வட இந்தியாவில் தொடங்கியிருந்தாலும், மற்ற மாநிலங்களிலும் பல்வேறு கதைகளுடன் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் கொண்டாடப்படும் பல வகையிலான ஹோலிப் பண்டிகைகள் மற்றும் அங்கு நடக்கும் கொண்ட்டாங்களின் புகைப்படங்களையும் இத்தொகுப்பில் காணலாம்.

Holi 2022: இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படும் ஹோலி வகைகள்:  எங்கே? எப்படி?

லத்மார் ஹோலி, உத்திரபிரதேசம் (Lathmar Holi-Uttar Pradesh)

இந்தியாவின் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுரா, பார்சனா, விர்த்வான்,  ஆகிய பகுதிகளில் முதலில் ஹோலிப் பண்டிகை தொடங்குகிறது. மதுரா கிருஷ்ணரின் பிறப்பிடம் என்பதால் இந்தப் பகுதிகளில் ஹோலி பண்டிகை இங்கு மிகவும் மகிமையுடன் கொண்டாடப்படுகிறது.

ஹோலி, உத்திரபிரதேசம்

ஹோலியின் போது, மதுராவில் உள்ள கோயில்கள் திருவிழாவைக் கொண்டாட விரிவான நிகழ்வுகளை நடத்துகின்றன. இங்குள்ள பெண்கள் குச்சியுடன் தங்களது கணவர்களைத் துரத்துவார்கள். கிருஷ்ணன் தன் நண்பர்களுடன் ராதாவிடம் சேட்டைகள் செய்தபோது, ராதையின் தோழிகள் அவர்களை கம்புகளை வைத்து துரத்தினர் என்பது கதை. 

பகுவா ஹோலி-பீகார்(Phaguwa - Bihar):

Holi 2022: இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படும் ஹோலி வகைகள்:  எங்கே? எப்படி?

பீகார் மாநிலத்தில், போஜ்புரி மொழியில் ஹோலிப் பண்டிகை பகுவா என்றழைக்கப்படுகிறது. இங்கு வண்ண பொடிகளுடன் இசையோடு கொண்டாடி மகிழ்கின்றனர். கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பாங்க் என்ற பானமும் இடம்பெறுகிறது.

உக்ளி,கேரளா (Ukuli- Kerala):

கேளரா

கேளர மாநிலத்தில் ஹோலிப் பண்டிகை பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. இங்கு உக்ளி, மஞ்சள் குளியல், என்றழைக்கப்படுகிறது. மேலும், இங்குள்ள கசிர்புரம் திருமலா என்ற கோயிலில் கொங்கனி மக்கள் இதைத் திருவிழாவாகக் கொண்டாடுகின்றனர். இவர்கள் ஹோலிப் பண்டிகைக்கு இயற்கையான வண்ணங்களைப் பயன்படுத்துகின்றனர். மஞ்சள் பொடியைப் பயன்படுத்துவதால், மஞ்சள் குளியல் என்ற பெயர் வந்தது. மஞ்சள் மருத்துவ குணங்கள் கொண்டதால் மக்கள் மஞ்சள் பொடியை ஹோலிப் பண்டிகைக்கு பயன்படுத்துகின்றார்கள்.

ஷிக்மோ,கோவா(Shigmo - Goa):

Holi 2022: இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படும் ஹோலி வகைகள்:  எங்கே? எப்படி?

கோவா மாநிலத்தில் ஷிக்மோ திருவிழா ஒரு பெரிய வசந்த கொண்டாட்டமாகும். இங்கு ஹோலிப் பண்டிகையின்போது, பாரம்பரிய நாட்டுப்புற நடனம், வண்ணப் பொடிகள், இனிப்பு ஆகிவற்றுடன் கொண்டாடப்படுகிறது. கோவாவில் சுற்றுலாப் பயணிகள் கூட இந்த பண்டிகையை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள்.

ராயல் ஹோலி (Royal Holi ,Rajasthan):

ராஜஸ்தான் மாநிலத்தில் ஹோலிப் பண்டிகை அரச வம்சத்தினர் போல் உடையணிந்து கொண்டாடப்படுகிறது. கொண்டாட்டங்கள் ஹோலிகா தஹானுடன் தொடங்குகின்றன. ஹோலி அன்று அங்குள்ள ராஜாவால் ஏற்றப்படும் நெருப்பு ஹோலி தஹான் என்றழைக்கபப்டுகிறது. அதன்பிறகு, ஷம்பு நிவாஸ் அரண்மனையிலிருந்து ஒரு அரச ஊர்வலம் புறப்பட்டு, மானெக் சௌக் அரச இல்லத்தில் நிறைவடைகிறது. இந்த அணிவகுப்பில், அரச குடும்பத்தார் அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள் மற்றும் ஒட்டகங்கள் மீது அமர்ந்து இசைக்குழுவினரின் இசையை ரசிப்பார்கள். இரவு விருந்தைத் தொடர்ந்து இறுதியாக, கொண்டாட்டம் அற்புதமான வானவேடிக்கைகளுடன் முடிவடைகிறது. இதேபோஒ, ஜெய்ப்பூரில் நடக்கும்  நிகழ்ச்சிகளில் வழக்கமான ராஜஸ்தானி நாட்டுப்புற இசை, நடனம் மற்றும் குலால் நாடகம் ஆகியவை அரங்கேறும்.

Holi 2022: இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படும் ஹோலி வகைகள்:  எங்கே? எப்படி?

ஹோலா மொஹலா,பஞ்சாப் (Hola Mohalla - Punjab):

பஞ்சாப் ஹோலி கொண்டாட்டம்

பஞ்சாப் மாநிலத்தில், இது ஹோலாமோலா ஹோலி என்று அழைக்கப்படுகிறது.  இந்த பண்டிகை நிஹாங் சீக்கியர்களால் கொண்டாடப்படுகிறது. இந்தக் கொண்டாட்டத்தில் அவர்களின் தற்காப்புக் கலைகளையும் அடங்கும்.  இசை, இனிப்பு, வண்ணங்கள் நிறைந்த கொண்டாட்டத்தில் பாங்க் பானமும் இடம்பெறும். இங்கு ஹோலி பண்டிக்கை ஒரு நாளைக்கு முன்பாகவே தொடங்கும்.

பசந்த் உற்சவ், மேற்கு வங்காளம் (Basant Utsav -West Bengal):

மேற்கு வங்காளம் ஹோலிப் பண்டிகை கொண்டாட்டம்

மேற்கு வங்க மாநிலத்தில், ஹோலிப் பண்டிகை பசந்த உத்சவ் என்று கொண்டாடுகிறது. வசந்த விழா என்றும் அழைக்கப்படும் இந்த உத்சவ் பிரபல இந்திய கவிஞர் ரவீந்திரநாத் தாகூரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இங்குள்ள மக்கள் ஹோலிக் கொண்டாட்டத்தின்போது மஞ்ச்ள் வண்ணம் அதிகம் இருக்குமாறு பார்த்துக்கொள்வார்கள். ஹோலி கொண்டாட்டத்திற்கு மக்கள் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து வழக்கம். கொல்கத்தாவில் உள்ள சாந்திநிகேதனில் கொண்டாடப்படும் ஹோலி இந்தியாவில் மிகவும் பிரசிதி பெற்றதாகும்.

ரங் பஞ்சமி,மஹாராஷ்ரா (Rang Panchami - Maharashtra):

மஹாராஷ்ட்ரா ஹோலிப் பண்டிகை கொண்டாட்டம்

மஹாராஷ்ரா மற்றும் மத்திய பிரதேசத்தில் ஹோலிப் பண்டிகை ரங் பஞ்சமி என்று அழைக்கப்ப்டுகிறது. இங்குள்ள பகுதிகளில் இசை, விளையாட்டுகள் வண்ணமயமான கொண்டாட்டத்தில் இடம்பெறுகிறது. மாநிலத்தின் தலைநகர் மும்பையில் உள்ள அனைத்து சிறந்த ரிசார்ட்டுகள், கிளப்புகள் மற்றும் மைதானங்கள் மும்பையில் ஹோலி கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

யாசாங் – மணிப்பூர் (Yaosang - Manipur):

Holi 2022: இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படும் ஹோலி வகைகள்:  எங்கே? எப்படி?

மணிப்பூர் மாநிலத்தில் ஹோலி  யாசங் என்ற பெயரில் ஆறு நாட்கள் கொண்டாடப்படுகிறது.  இங்குள்ள பழங்குடியின மரபுகளுடன் ஹோலிக் கொண்டாடப்படுகிறது. விழாவின் சிறப்பம்சமாக மணிப்பூரின் நாட்டுப்புற நடனமான தபல் சோங்பா உடன் கொண்டாட்டங்கள் அமைகின்றன. நம்பிக்கையின் வெளிபாடாகவும், தீமை நீங்கிய நல்ல நாட்களை வரவேற்கும் விதமாகவும் மக்கள் ஹோலி கொண்டாடுகிறார்கள்.

Softshell Turtle: டைனோசர்கள் காலத்தில் வாழ்ந்த ஆமை..வியப்பில் ஆழ்த்திய கண்டுபிடிப்பு

’பூனைகளுக்கு சிக்கன்..எனக்கு க்ரேவி!’ - சிறை அனுபவம் பகிரும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Aerohub: இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீபெரும்புதூர்... ‘ஏரோஹப்’ பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?
இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீபெரும்புதூர்... ‘ஏரோஹப்’ பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Aerohub: இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீபெரும்புதூர்... ‘ஏரோஹப்’ பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?
இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீபெரும்புதூர்... ‘ஏரோஹப்’ பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
Watch Video: ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ பெண்களிடம் எகிறிய பா.ம.க. எம்.எல்.ஏ - வீடியோவை பாருங்க
Watch Video: ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ பெண்களிடம் எகிறிய பா.ம.க. எம்.எல்.ஏ - வீடியோவை பாருங்க
"அம்பேத்கர் எனக்கு கடவுள், அவர் வழிப்படி நான் அரசியல் செய்கிறேன்" -அண்ணாமலை
Embed widget