Cholesterol Control Fruits : கொலஸ்ட்ராலை குறைக்கும் 5 பழங்கள் இவைதான்.. இதய ஆரோக்கியம் முக்கியம் மக்களே..
உடலில் புதிய செல்களை உருவாக்கவும்,உடலில் ஹார்மோன்கள் உற்பத்தி மற்றும் முக்கிய உடல் செயல்பாடுகளை செய்யவும் கொலஸ்ட்ரால் உதவுகின்றது.
பொதுவாக நமது உடலானது பல்வேறு ஊட்டச்சத்துகளால் நிரம்பியுள்ளன. அதில் ஒன்றுதான் கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு வகையாகும்.இந்த கொலஸ்ட்ரால் ஆனது நமது உடலில் சரியான அளவில் இருந்தால் தான் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் தற்போது மக்களிடம் முறையான உணவு பழக்கம் இல்லாததால் அதிகளவு கெட்ட கொழுப்பு உடலில் படிந்துள்ளதால் அதனை குறைப்பதற்கு போராடிக் கொண்டிருக்கின்றனர். பொதுவாக கொலஸ்ட்ரால் ஒரு மென்மையான கொழுப்பு போன்ற பொருளாகும்.
இது நமது உடலில் புதிய செல்களை உருவாக்கவும் , உடலில் ஹார்மோன்கள் உற்பத்தி மற்றும் முக்கிய உடல் செயல்பாடுகளை செய்யவும் இது உதவுகின்றது. பொதுவாக நமது உடலானது இரண்டு வகைகளில் நமது உடலுக்கு தேவையான கொலஸ்ட்ரால்களை பெறுகிறது.
நமது உடலானது இரண்டு வகைகளில் தனக்கு தேவையான கொலஸ்ட்ரால்களை பெருகிறது .அதில ஒன்று கல்லீரல் வழியாகவும் இன்னொன்று நாம் உண்ணும் உணவு வழியாகவும் தனக்கு தேவையான கொலஸ்ட்ரால்களை பெறுகிறது. இத்தகைய கொலஸ்ட்ரால், சரியான முறையில் இல்லாவிட்டால் நமது உடலில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இதில் தேவையற்ற கொலஸ்ட்ராலனது எவ்வாறு ஏற்படுகின்றது, மற்றும் அதன் பாதிப்புகளை பார்ப்போம்
○ நாம் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள ஆரோக்கியம் மற்ற உணவுகளை அதிகம் உண்பதால்,நமது உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது. நாம் இறைச்சி, வெண்ணை மற்றும் கேக் போன்றவற்றை அதிக அளவு எடுத்துக் கொண்டால்,நமது உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது.
○ நமது குடும்பத்தில் பரம்பரை பரம்பரையாக யாராவது ஒருவருக்கு அதிகளவு கொலஸ்ட்ரால் இருந்தால், அது நமக்கும் வர வாய்ப்புகள் உள்ளது .இந்த கொலஸ்ட்ரால் நமக்கு மாரடைப்பு பக்கவாதம் போன்றவற்றை ஏற்படுத்தும்.
○ நமது உடல் எடையானது அதிக அளவில் இருந்தால் கொலஸ்ட்ரால் ஆனது அதிக அளவு ஏற்பட வாய்ப்பு உள்ளது .இதனால் நமது உடலில் தேவையில்லாத தொந்தரவுகள் ஏற்படும்.
○ தைராய்டு மற்றும் சர்க்கரை போன்ற நோய்கள் நமது உடம்பில் இருந்தால் கொலஸ்ட்ரால் பாதிப்பு நிச்சயம் ஏற்படும்.
○ புகை மற்றும் மது பிடிக்கும் பழக்கம் கொண்டவராக இருந்தால் கண்டிப்பாக இந்த கொலஸ்ட்ரால் உடலில் அதிகரித்து,மேலும் பல நோய்களை உண்டாக்குகிறது.
○ நாம் பொதுவாக எந்த வேலையும் செய்யாமல் சாப்பிட்டு விட்டு உறங்கிக் கொண்டிருந்தால் நமது உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்.
○ அதிக அளவு மன அழுத்தம் நமது உடலில் ரத்த கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க செய்யும்.
நமது உடலில் உள்ள கொலஸ்ட்ரால்,சரியான முறையில் இருக்க, உணவானது முக்கிய பங்கு வகிக்கின்றது. அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் உணவில் பழங்களை சேர்ப்பதில் சற்று குழப்பம் அடைகின்றனர் .இந்த குழப்பத்தை தவிர்க்க இப்பொழுது நாம் குறைந்த கொலஸ்ட்ரால் உள்ள ஐந்து பழங்களின் வகைகளையும் மற்றும் அதன் சிறப்பு பண்புகளையும் பார்ப்போம்.
கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் 5 பழங்கள்:
○தக்காளி
○பப்பாளி
○ வெண்ணை பழம் ( பட்டர் ஃப்ரூட்)
○ஆப்பிள்
○சிட்ரஸ் பழங்கள்
1.தக்காளி:
தக்காளியில் பொதுவாக வைட்டமின் ஏ ,பி,சிமற்றும் கே போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்களனது நிரம்பி உள்ளது. தக்காளி நமது இதயத்திற்கு சிறந்த உணவாகக் கருதப்படுகின்றது.இது இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவற்றின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
2.பப்பாளி:
பப்பாளியில் நார்ச்சத்து நிறைந்துள்ளது.இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதோடு, எல்டிஎல் அல்லது கெட்ட கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
3.வெண்ணெய் பழம்: ( பட்டர் ஃப்ரூட்)
இந்த வெண்ணெய் பழமனது, நமது உடம்பில் கொலஸ்ட்ரால் அளவை அதிக அளவு குறைகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இத்தகைய பழமானது பக்கவாதம் ஏற்படுத்தும் அபாயத்தை குறைக்கிறது. மேலும் இது எல்டிஎல் மற்றும் எச்டிஎல் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துகின்றன.
4.ஆப்பிள்:
ஆப்பிள் ஆனது பொதுவாக அனைவரும் விரும்பக் கூடிய பழங்களில் ஒன்றாகும். இந்த ஆப்பிள் நமது இதயத்திற்கு அதிக அளவு நன்மைகளை தருகின்றது. இவை எல்டிஎல் கொழுப்பின் ஆரோக்கியமற்ற அளவைக் குறைத்து, பல நோய்களானது நமது இதயத்தை சேதப்படுத்தாமல் தடுக்கிறது.
5.சிட்ரஸ் பழங்கள்:
ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சைப்பழம் போன்ற அனைத்து சிட்ரஸ் பழங்களிலும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நமது உடலில் கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இந்த பழங்கள் தோல் மற்றும் கூந்தலுக்கு நன்மை தருவதோடு மட்டுமல்லாமல், கெட்ட கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.