மேலும் அறிய

கர்ப்பப்பை நீர்க்கட்டிகளா? (PCOS) எடை அதிகரிக்கிறதா.. இதை ஃபாலோ பண்ணுங்க..

PCOD மற்றும் PCOS பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களின் அன்றாட உணவுமுறைகளோடு தினசரி உடற்பயிற்சி, நடைப்பயிற்சியையும் அதிகளவில் மேற்கொள்ள வேண்டும்.

ஆரோக்கியமான உணவுகளை நம்முடைய அன்றாட உணவுமுறைகளில் எடுத்துக்கொண்டாலே பெண்கள் அதிகளவில் தற்போது சந்தித்துவரும்  பிசிஓஎஸ் பிரச்சனையினால் ஏற்படும் உடல் எடையைக் குறைக்க முடியும்.

பெண்கள் தற்செயலாக தங்களின் தோழிகளைச் சந்தித்துப்பேசும்போது,   அதிகளவில் கேட்கும் ஒரு விஷயம் உனக்கும் அந்தப்பிரச்சனை இருக்கா? என்றுதான். அந்தளவிற்கு இந்தியாவில் பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் ஒரு பிரச்சனை தான் பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் (PCOS) மற்றும் பாலிசிஸ்டிக் ஓவரியன் டிசிஸ்(PCOD) எனும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு கோளாறு ஆகும். சமீபத்திய கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் 20-29 வயதிற்கு உட்பட்ட பெண்களில் 16 சதவீதம் பேர் PCOS மற்றும் PCOD பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கிறது. 

கர்ப்பப்பை நீர்க்கட்டிகளா? (PCOS) எடை அதிகரிக்கிறதா.. இதை ஃபாலோ பண்ணுங்க..

இந்தப்பிரச்சனையால் பாதிக்கப்படும் பெண்கள் மாதவிடாய் கோளாறுகள், கருத்தரிப்பதில் சிக்கல், உடல் எடை அதிகரிப்பு போன்றவற்றினால் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சில பெண்களுக்கு  ஆண்ட்ரோஜன்கள் எனப்படும் ஹார்மோன்களின் அதிகரிப்பதன் காரணமாக கருப்பையில் நீர்க்கட்டிகளும் (PCOD) உருவாகிறது. இதனையடுத்து என்ன செய்வது? என்று மருத்துவர்களை அணுகும் போது அவர்கள் தெரிவிக்கும் ஒரு மருத்துவம், உங்களின் வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறைகளை நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதுதான்.

இதன் காரணமாகத்தான் PCOD பிரச்சனை அதிகளவில் ஏற்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள். மேலும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிடில்  பெண்கள் பெரிய அளவிலான பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். எனவே PCOD மற்றும் PCOS பிரச்சனையால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் உணவு மற்றும் வாழ்க்கை முறையில் கவனம் செலுத்தவேண்டும்.  இதோடு மட்டுமின்றி இதன் மூலம் அதிகரிக்கும் உடல் எடையைக்குறைக்க முயலவேண்டும். எனவே இந்நேரத்தில் PCOD மற்றும் PCOS பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பெண்கள் உடல் எடையைக் குறைப்பதற்கும், இப்பிரச்சனைக்குத் தீர்வு காண  என்ன வகையாக உணவு வகைகளை உட்கொள்ளலாம் என விரிவாக இங்கே தெரிந்துகொள்வோம்.

  1. நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

 நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ள முழு தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றை அதிகளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனை நாம் அன்றாடம் உட்கொள்ளும் போது இரத்த சர்க்கரை அளவைக்கட்டுப்படுத்தவும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. குறிப்பாக அதிக நார்ச்சத்துள்ள உணவுகள் பிசிஓஎஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு, உடல் எடை அதிகரிப்பு மற்றும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவுகிறது.

  1. புரத உணவுகளை சேர்க்கவும் :

நாம் நம்முடைய உணவு முறைகளில் புரதத்தைச் சேர்த்துக்கொள்ளும் போது இரத்தத்தில் சர்க்கரை அளவை உறுதிப்படுத்த உதவுகிறது. புரதம் நிறைந்த உணவுப்பொருள்களை  அதிகம் உட்கொள்ளும் போது  பெண்களுக்கு பசியின்மை ஏற்படும். இதனால் உடலில் தேவையற்ற கலோரிகளை சேர்க்க முடியாது. எனவே PCOS பிரச்சனையால் பாதிக்கப்படும் பெண்கள் தங்களது உணவுமுறைகளில் முட்டை, பாதாம், கடல் உணவுகள் போன்ற சத்தான, அதிக புரதச்சத்து நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

  1. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுகள்:

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுகள் உடல் வீக்கத்தைக் குறைக்கவும் இன்சுலின் அளவை நிர்வகிக்கவும் உதவுகின்றன.  எனவே பழங்கள், காய்கறிகள், நட்ஸ் மற்றும் முழுதானியங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

  1. கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்:

பெண்கள் ஐஸ்கிரீம், பழச்சாறுகள், சோடா போன்ற அதிக கார்போஹைட்ரேடுகள் நிறைந்த உணவுப்பொருள்களை சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இதேப்போன்று பேக்கரி பண்டங்கள், நெய் மற்றும் பாஸ்ட்புட் உணவுகள் உட்கொள்வதை தவிர்த்திட வேண்டும். இதன் மூலம் உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேராது.

கர்ப்பப்பை நீர்க்கட்டிகளா? (PCOS) எடை அதிகரிக்கிறதா.. இதை ஃபாலோ பண்ணுங்க..

  1. பால் உட்கொள்வதை பெண்கள் அதிகளவில் தவிர்க்கவேண்டும். இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, அதிக ஊட்டச்சத்தையும் அளிக்கிறது. மேற்கண்ட உணவுமுறைகளை தங்களுடைய வாழ்க்கை முறைகளில் பின்பற்றினாலே மருத்துகள் அதிகளவில் உட்கொள்ளத் தேவையில்லை. மேலும் அன்றாட உணவுமுறைகளோடு தினசரி உடற்பயிற்சி, நடைப்பயிற்சியையும் பெண்கள் அதிகளவில் மேற்கொள்ள வேண்டும்.

தலைப்பு செய்திகள்

வாகனச் சக்கரத்தின் கீழ் எலுமிச்சை வைப்பது ஏன்? ஆன்மீக நம்பிக்கைக்கு பின்னால் உள்ள உண்மையான அறிவியல்!
வாகனச் சக்கரத்தின் கீழ் எலுமிச்சை வைப்பது ஏன்? ஆன்மீக நம்பிக்கைக்கு பின்னால் உள்ள உண்மையான அறிவியல்!
தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மை? முன்னோர்களின் பழக்கத்தில் மறைந்திருக்கும் அறிவியல்
தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மை? முன்னோர்களின் பழக்கத்தில் மறைந்திருக்கும் அறிவியல்
காலம் முழுவதும் துணை நின்ற மனைவிக்கு துரோகம் செய்த ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்? உலகப் புகழ் விஞ்ஞானியின் காதல் சர்ச்சை!
காலம் முழுவதும் துணை நின்ற மனைவிக்கு துரோகம் செய்த ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்? உலகப் புகழ் விஞ்ஞானியின் காதல் சர்ச்சை!
சரக்கு அடிக்கும் போது 'சைடு டிஷ்' விஷயத்தில் உஷார்! இந்த 8 உணவுகளை மறந்தும் தொடாதீங்க! உயிருக்கே ஆபத்து....
சரக்கு அடிக்கும் போது 'சைடு டிஷ்' விஷயத்தில் உஷார்! இந்த 8 உணவுகளை மறந்தும் தொடாதீங்க! உயிருக்கே ஆபத்து....

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? -தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
Mahindra BE 6 New Upgrades: 3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
Embed widget