Yoga: யோகாசன பயிற்சிகள் மூலம் உயரத்தை அதிகரிக்கலாம்!! யோகாசன பயிற்சிகள் சில!
தினமும் செய்யக்கூடிய சில யோகாசன பயிற்சிகள் மூலம் உடல் உங்களின் வளர்ச்சியை அதிகரிக்க முடியும்
ஒருவரின் உயரம் அவரவர்களின் மரபணுக்களை பொறுத்தே அமையும். தினமும் செய்யக்கூடிய சில யோகாசன பயிற்சிகள் மூலம் உங்களின் வளர்ச்சியை அதிகரிக்க முடியும். இருப்பினும் இந்த யோகாசனங்களை செய்வதன் மூலம் அனைவருக்கும் நிச்சயமாக உயரம் கூடிவிடும் என்று உத்தரவாதம் அளிக்க முடியாது. எனினும் இந்த பயிற்சிகள் நிச்சயம் ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஒரு சில ஆசனங்களின் பயன்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
சூரிய நமஸ்காரம்:
சூரிய பகவானை வணங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஆசனம் சூரிய நமஸ்காரம். பன்னிரண்டு யோகா ஆசனங்களின் கலவையாக இது விளங்குகிறது. இந்த ஆசனத்தை செய்வதன் மூலம் ரத்த ஓட்டம் சீராகி இரத்த குழாயில் உள்ள அடைப்புகள் நீங்கும். உடல் பருமனாக உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்வதன் மூலம் தொடை, வயிறு, இடுப்பு போன்ற இடங்களில் உள்ள கொழுப்புகள் கரையும். எலும்புகளையும் தசைகளையும் வலுப்பெற செய்கிறது. முதுகுத்தண்டை தளர்த்தி உயரத்தை மேம்படுத்தும்.
தடாசனம்:
இது நின்று கொண்டு செய்யவேண்டிய மிகவும் எளிமையான ஆசனம். இது மவுண்டன் போஸ் என்றும் அழைக்கப்படும். உயரத்தை அதிகரிக்க உறுதுணையாக இருப்பதோடு குதிகால் வழியை போக்கி கால்களை வலுப்பெற செய்கின்றன. மனதிற்கு அமைதியை தர கூடியது.
புஜங்காசனம்:
இது பாம்பு போன்ற தோற்றம் கொண்ட ஆசனம் என்பதால் இதற்கு கோப்ரா போஸ், சர்ப்பாசனம் என்ற பெயர்களும் உண்டு. மார்பு, முதுகெலும்பை வலுவாக்கும். மார்புச் சளியை போக்கும். மார்பு, தோள் மற்றும் வயிற்று பகுதியை நீட்டி உயரத்தை அதிகரிக்க செய்கிறது. மன அழுத்தம், மனச்சோர்வு பிரச்னைகளையும் போக்கும்.
ஹஸ்தபாதாசனம்:
நவீன யோகாவில் உள்ள ஆசனங்களில் ஒன்று ஹஸ்தபாதாசனம். மார்பு, கை மற்றும் கால்களை வலிமையாக்குவதோடு உடல்,தசை, கையையும் நீட்டுகிறது. வயிற்று பகுதியில் உள்ள கொழுப்பை கரைக்கிறது.
திரிகோனாசனம்:
இந்த ஆசனம் செரிமானத்தை தூண்டி கழிவுகளை அகற்றி உடலை சுத்தமாகிறது. இதனால் நாள் முழுவதும் உடல் புத்துணர்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க முடியும். வயிற்று வலி, இடுப்பு பிடிப்பு, தசை பிடிப்பு போன்ற பிரச்னைகளுக்கு தீர்வாகும். கைகளும், கால்களும் வலுப்பெற உதவும். உயரம் மற்றும் நீளம் தாண்டுவோர் திரிகோனாசனம் செய்வதன் மூலம் தங்களின் வெற்றியை உறுதி செய்யலாம். உயரத்தை அதிகரிக்கவும் மன அழுத்தத்தை போக்கவும் செய்யும்.
Also Read: Thengai Poo Benefits : கொடிய நோய்க்கும் மருந்து.. தேங்காய் பூவின் சிறப்புகள்..!
Thengai Poo Benefits : கொடிய நோய்க்கும் மருந்து.. தேங்காய் பூவின் சிறப்புகள்..!
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )