Winter Vegetables: குளிர்காலத்தில் உணவில் சேர்க்கவேண்டிய காய்கறிகள் என்ன? நிபுணர்கள் சொல்லும் டிப்ஸ்!
Winter Vegetables: குளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய காய்கறிகள் என்னென்ன என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்லும் அறிவுரைகளை காணலாம்.
குளிர்காலம் வந்தவுடன் அதற்கேற்றாற்போல உடல்நிலை மாறுவிடும். சூடாக ஏதாவது சாப்பிட வேண்டும் என தோன்றும். எந்த பருவமாக இருந்தாலும் சரிவிகித உணவு சாப்பிட வேண்டியது உடல்நல ஆரோக்கியத்திற்கு நல்லது. குளிர் மற்றும் மழை காலங்களில் தொற்றுநோய்கள் பரவும் நேரம் என்பதால் ஊட்டச்சத்து மிக்க உணவுகள் டயட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
குளிர்காலத்தில் என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்லும் டிப்ஸ் பற்றி கீழே காணலாம்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு
சர்க்கரைவள்ளி கிழக்கு பீட்டா கரோட்டீன் நிறைந்தது. கண், பார்வை ஆரோக்கியத்திற்கு அதிகளவில் உதவுகிறது.இதில் டயட்ரி ஃபைபர் அதிகம். இதனால் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக செயல்பட உதவுகிறது. சர்க்கரைவள்ளி கிழங்கை வேக வைத்து சாப்பிடுவது, சூப், பொரியல், கட்லட் என சாப்பிடலாம். வைட்டமின் ஏ, பி, இரும்புச்சத்து பொட்டாசியம் போன்ற சத்துகள் அதிகம். சர்க்கரை வள்ளிக்கிழங்கு. உடலுக்கு தேவைப்படும் சத்துகளை அளித்து உடலில் சதை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
முட்டைக்கோஸ்
முட்டைக்கோஸ் வைட்டமின்கள் அதிக நிறைந்தது. வைட்டமின் சி.,கே, டயட்ரி ஃபைபர் அதிகம் உள்ளது. ஆன்டி-ஆக்ஸிடண்ட் அதிகமாக இருப்பதால் கடுமையான நோய்கள் ஏற்படுவதை தடுக்கும் என்று சொல்லப்படுகிறது. சாலட் சாப்பிடலாம். முட்டைக்கோஸ் சாதம் லன்ச் பாக்ஸ் ரெசிபி. டிரை பண்ணுங்க - முட்டைக்கோஸ் ரைஸ்
பீட்ரூட்
குளிர்காலத்தில் அதிகமாக கிடைக்கும் காய்கறிகளில் ஒன்று. இதில் ஊட்டச்சத்துகள் அதிகம்.இரத்த அழுத்தம் கட்டுக்குள் வைக்க பீட்ரூட் உதவுகிறது. இதில் நிட்ரிக் ஆக்ஸைடு அதிகமாக உள்ளது. இது உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது. வைட்டமின் ஏ, பி6, சி உள்ளிட்டவைகள் இருக்கிறது. இது கல்லீரல் ஆரோக்கியத்திகு மிகவும் நல்லது. ஆன்டி- ஆக்ஸிடண்ட் அதிகம் இருக்கிறது. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் கொழுப்பு அமிலம், நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமான சக்தியை அதிகப்படுத்தும். தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிக்கலாம். இது சருமத்தையும் ஆரோக்கியமாக வைத்துகொள்ள உதவுகிறது.
புரோக்கோலி
புரோக்கோலியில் இருக்கும் அதிகப்படியான ஃபோலேட், இதய ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியது. இதய நோய்கள் வராமல் தடுக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்தது. இதிலிருக்கும் பாலிபினால் இதய செயல்பாடு சீராக இருக்கும். இரத்த அழுத்தும் கட்டுக்குள் இருக்கும். இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்க உணவில் ப்ரக்கோலி சேர்த்துகொள்ளலாம். காலிஃப்ளார் 65 செய்வது போலவே இதை செய்து சாப்பிடலாம்.
கேரட்
கேரட் வைட்டமின் ஏ நிறைந்தது.பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற சத்துக்கள் இதில் மிகுந்துள்ளது.இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. கண் பார்வையை கூர்மையாக்குதல், எலும்புகளை உறுதியாக்குதல் உள்ளிட்ட நன்மைகள் இதில் இருக்கிறது. கேரட் ஜூஸ், கேரட் சாதம், கேரட் கேக், அல்வா என செய்து சாப்பிடலாம்.
கீரை
கீரை வகை உணவுகளில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக கால்சியம், இரும்புச்சத்து, நார்சத்து, தாதுக்கள், வைட்டமின்கள், புரதம், போலிக் அமிலம் போன்ற பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. முருங்கைக்கீரையில் இரும்புச் சத்து, வெந்தயக்கீரையில் உடலின் செயலாற்றை அதிகரிக்கும், முடக்கத்தான் உடலில் உள்ள நச்சு வாயுக்களை வெளியேற்றும், அரைக்கீரை, முளைக்கீரை, வள்ளாரைக்கீரை, புளிச்ச கீரை, சிறுகீரை என எல்லா வகையான கீரைகளிலும் ஊட்டச்சத்து மிகுந்துள்ளது.
குளிர்காலத்தில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் மண்ணுக்கு அடியில் விளையக்கூடிய காய்கறிகளில் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. குளிர்காலத்தில் விளையும் பழங்கள், காய் போன்றவற்றை உண்பது உடல்நலனுக்கு நன்மை பயக்கும். அந்தந்த சீசனுக்கு ஏற்றவாறு, அப்போது கிடைக்கும் உணவுகளை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நன்று.
இலந்தைப் பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவல்லது. குளிர் காலத்தில் புளியை சேர்த்துக் கொள்வது நல்லது. இது உடலுக்கு புத்துணர்ச்சி தரும். நெல்லிக்காயில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் சத்து இருக்கிறது. எள் சாப்பிடலாம் எலும்புகள் மூட்டு வலுப்பெறும்.
ஆரஞ்சு மற்றும் ஆப்பிள் போன்ற பழங்கள் குளிர்காலத்தில் சிறந்தது. வைட்டமின் சி சளி மற்றும் இருமலுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகிறது. குளிர்காலத்தில் உடலில் உஷ்ணத்தை தக்கவைக்கும்விதமான உணவுகளை சாப்பிட வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.