Health:கொளுத்தும் வெயில்தான்... ஆனாலும் அதிக முறை குளிக்காதீங்க! பிரச்னைகளை விளக்கும் மருத்துவர்கள்!
கோடைக்காலத்தில் தினமும் ஒரு முறைக்குமேல் குளிப்பது சருமத்திற்கு ஆரோக்கியமானது இல்லை.
வேனிற் காலத்தில் காலை, மாலை என இரண்டு வேளைகளும் குளிக்கவே மனம் விரும்பும். உடலில் வியர்வை அதிகம் கசிவதால் உண்டாகும் அசுத்தத்தைப் போக்கவும் உடல் வெப்பத்தைக் குறைக்கவும் இரண்டு வேளை குளிப்பதை வழக்கமாக கொண்டிருப்போம். ஆனால், நாளைக்கு ஒருமுறைக்கு மேல் குளிப்பது உடல்நலனுக்கு நல்லதுஇல்லை என்கிறார்கள் மருத்துவர்கள். தினமும் ஒருமுறைக்கு மேல் குளிப்பது உடலுக்கு என்னென்ன கேடு விளைவிக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
அதிகமுறை குளிப்பதால் ஏற்படும் தீமைகள் என்னென்ன:
ஆரோக்கியமான சருமம் என்பது அதில் உள்ள எண்ணெய் அடுக்குகள் மற்றும் நல்ல பாக்டீரியாக்களை பராமரிக்க உதவுகிறது. அதே சமயம், குளிக்கும்போது சருமத்தை சோப் போட்டு சுத்தம் செய்வோம். அப்போது, உடலில் உள்ள நல்ல பாக்ட்டீரியாக்கள் மற்றும் எண்ணெய் பதத்தை நீக்குகிறது. அதனால்தான், உங்கள் சருமத்தில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் வெளியேறாமல் இருக்க, ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே குளிக்க வேண்டும் என்பது நிபுணர்களின் பரிந்துரையாக இருக்கிறது.
குளியலுக்கு பிறகு, தோல் கரடுமுரடாக அல்லது வறட்சியா மாறும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். இதனால் வெளியில் உள்ள பாக்டீரியா எளிதில் உடலில் நுழையும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இதனால் தோலில் நோய்தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. எனவே, குளித்த உடனே, தோலை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள மாய்சரைஸர் அப்ளை செய்ய வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் போதுமான அளவு ஆண்டிபாடிகளை உருவாவதற்கும், இதன் மூலம் நோய் எதிர்ப்பு மண்டலம் ஆரோக்கியத்துடன் இருக்க நல்ல பாக்டீரியாக்கள் தேவையாக இருக்கிறது. இதனால்தான், குழந்தைகள் தினமும் குளிக்கக் கூடாது என்று பல மருத்துவர்கள் கூறுகிறார்கள். அடிக்கடி குளிப்பதால், நமது நோய் எதிர்ப்பு மண்டலம் சரியாக வேலை செய்யும் திறன் பாதிக்கப்படும்.
ஷாம்பு மற்றும் சோப்பு ஆகியவற்றில் உள்ள கெமிக்கல் நம் உடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களை அழிக்கிறது என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். மேலும், இது தோலின் மேற்பரப்புக்குத் தேவையான பாக்டீரியாவை அகற்றி விடுகிறது. எனவே ஒன்றுக்கு மேற்பட்ட முறை குளிப்பது சருமத்திற்கு நல்லதல்ல.
தோல் பிரச்சனை உள்ளவர்கள் 5 நிமிடங்களுக்கு மேல் குளிக்கக் கூடாது என்கின்றனர் நிபுணர்கள். மேலும், அவர்கள் ஒரு நிமிடத்திற்கு மேல் ஷவரின் கீழ் இருக்கக்கூடாது. அவ்வாறு செய்வது உங்கள் தோல் மற்றும் முடி இரண்டின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )