மேலும் அறிய
Valentine's day 2023: லவ்வர்ஸ் டே..! இன்னைக்கு உங்க லவ்வருக்கு இந்த மெசேஜ்லாம் அனுப்பி அசத்துங்க..!
Valentine’s Day 2023 Wishes in Tamil: உலக அளவில் எல்லா நகரங்களும் காதலை கொண்டாட தயாராகி விட்டனர். இந்த காதலர் தினத்தில் உங்கள் அன்புக்குரியவரை சிறப்பாக உணரவைக்க, அவர்களுக்கு அழகான வாழ்த்துக்கள் அனுப்பலாம்.
![Valentine's day 2023: லவ்வர்ஸ் டே..! இன்னைக்கு உங்க லவ்வருக்கு இந்த மெசேஜ்லாம் அனுப்பி அசத்துங்க..! Happy Valentine’s Day 2023 Wishes Images Quotes Status Messages Greetings and Photos Valentine's day 2023: லவ்வர்ஸ் டே..! இன்னைக்கு உங்க லவ்வருக்கு இந்த மெசேஜ்லாம் அனுப்பி அசத்துங்க..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/14/6ff8bf28ff84bc0ace1e3251f28c6b1c1676342689113109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
காதலர் தினம் 2023
Happy Valentine’s Day 2023 Wishes in Tamil: இளைஞர்கள் மிகவும் எதிர்பார்த்த காதலர் தினம் இறுதியாக வந்துவிட்டது! காதலர் தினம் வழக்கமாக பிப்ரவரி 14 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டம் ஒரு வாரம் முன்பே களைகட்ட ஆரம்பித்து இன்றைய நாளில் வந்து முடியும். இந்த நாளில், காதல் ஜோடிகள், தம்பதிகள் மகிழ்வுடன் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை வெவ்வேறு வழிகளில் பகிர்ந்து கொள்கின்றனர்.
இந்த நாளை முன்னிட்டு சென்னையில் மால்கள் மற்றும் பொது இடங்கள் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளன. உலக அளவில் எல்லா நகரங்களும் காதலை கொண்டாட தயாராகி விட்டனர். இந்த காதலர் தினத்தில் உங்கள் அன்புக்குரியவரை சிறப்பாக உணரவைக்க, அவர்களுக்கு அழகான வாழ்த்துக்கள் அனுப்பலாம். உங்களுக்காக இதோ!
காதலர் தின வாழ்த்துக்கள்
- உன்னை நேசிப்பது என்னை ஒரு சிறந்த மனிதனாக மாற்றியது. நீ என்னை நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே விரும்புகிறாய், எனது எல்லா குறைபாடுகளுடனும் என்னை நேசித்ததற்கு நன்றி. காதலர் தின வாழ்த்துக்கள்!
- உன்னுடன் உள்ள ஒவ்வொரு நாளும் அழகானது, ஒவ்வொரு கணமும் அவ்வளவு ஸ்பெஷல். காதலர் தின வாழ்த்துக்கள்!
- நீ நூறு வயது வரை வாழ்ந்தால், நான் ஒரு நாள் அதற்கு ஒரு நாள் குறைவாக வாழ விரும்புகிறேன், ஏனெனில் நீ இல்லாத ஒரு நிமிடமும் என்னால் வாழ முடியாது. காதலர் தின வாழ்த்துக்கள்!
- உங்கள் அன்பான, சிந்தனைமிக்க வழியை நான் விரும்புகிறேன். ஒவ்வொரு நாளும் நீங்கள் என் வாழ்க்கையில் கொண்டு வரும் மகிழ்ச்சியை நேசிக்கிறேன்.
- நான் உன்னுடன் எவ்வளவு நேரம் செலவிடுகிறேனோ, அவ்வளவு அதிகமாக நான் உன்னை காதலிக்கிறேன் என்று அர்த்தம். காதலர் தின வாழ்த்துக்கள்.
- என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நபருக்கு காதலர் தின வாழ்த்துக்கள். நான் உன்னை நேசிப்பதை நிறுத்துவேன் என்று எனக்கு தோன்றவே இல்லை, அன்பே.
- உன்னால்தான் வாழ்க்கையில் இனிமையும் மகிழ்வும் உள்ளது. எப்போதும் எனக்காக இருப்பதற்கு நன்றி காதலே... காதலர் தின வாழ்த்துக்கள்.
- இந்த வாழ்நாளில் எனக்கு நேர்ந்த மிக அழகான விஷயமாக நீ இருந்தாய் என்பதை இன்று நான் உனக்கு தெரிவிக்க விரும்புகிறேன். மிகவும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.
- உண்மையில் அன்பில் ஏதோ மந்திரம் உள்ளது, அது நம் அனைவரையும் மகிழ்ச்சியாகவும் ஆசீர்வதிக்கவும் செய்கிறது. உங்களுக்கு காதலர் தினத்தை முன்னிட்டு அன்பான வாழ்த்துக்கள்.
- என் வாழ்வின் வழித்துணை நீதான், என் வாழ்வின் மொத்த அன்பும் நீதான், நான் எப்போதும் உன் பக்கத்தில் இருக்கவே விரும்புகிறேன். காதலர் தின வாழ்த்துக்கள்.
- உன் நிபந்தனையற்ற அன்பு உலகை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் வலிமையை அளிக்கிறது. ஆதரவு, அன்பு, உதவி மற்றும் நீ தரும் நினைவுகளுக்கு நன்றி. காதலர் தின வாழ்த்துக்கள்.
காதலர் தின வாழ்த்து புகைப்படங்கள்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion