Snacks Weight Loss : உடல் எடை குறைக்கணும்.. ஸ்நாக்ஸும் சாப்பிடணுமா? இந்த 7 ஸ்நாக்ஸ் வகைகள் பாக்கெட்ல வைங்க
உடல் எடை குறைப்பின் போது நம் டயட்டீசியன் என்ன பரிந்துரைக்கிறாரோ அதை அதிக கெடுபிடியுடன் பின்பற்றுவது மிக மிக அவசியம். அது உணவு, தண்ணீர், உடற்பயிற்சி, சிறு தீனி என அனைத்திற்கும் பொருந்தும்.
உடல் எடை குறைப்பின் போது நம் டயட்டீசியன் என்ன பரிந்துரைக்கிறாரோ அதை அதிக கெடுபிடியுடன் பின்பற்றுவது மிக மிக அவசியம். அது உணவு, தண்ணீர், உடற்பயிற்சி, சிறு தீனி என அனைத்திற்கும் பொருந்தும்.
அந்த வகையில் டயட்டில் இருக்கும்போது சாப்பிடக் கூடிய 7வகையான ஸ்நாக்ஸ் வெரைட்டி பற்றி பார்ப்போம்.
1. சர்க்கரைவல்லிக் கிழங்கு வெட்ஜஸ்
சர்க்கரை வல்லிக் கிழங்கை வேகவைத்து சாப்பிட்டு வந்தால் அது உடல் எடைக் குறைப்புக்கு உதவும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். சர்க்கரை வல்லிக் கிழங்கு அதிக அளவிலான நார்ச்சத்து கொண்டது. மேலும் நிறைவான மாவுச் சத்து கொண்டது. இது உடலுக்குத் தேவையான சக்தியைத் தரும். இது உடல் எடை குறைப்புக்கு உதவும். அதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். வேக வைத்தோ, காய் போல் சமைத்தோ, சூப் செய்தோ இல்லை ஸ்நாக்ஸ் செய்தோ சேர்க்கலாம்.
அப்படி செய்யக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ் தான் ஸ்வீட் பொடேடோ வெட்ஜஸ். தோலை சீவிய சர்க்கரைவல்லிக் கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி அதன் மேலே ஆலிவ் ஆயிலை தெளித்துவிட்டு கூடவே சில மூலிகைகளையும் மிளகையும் தூவி பேக் செய்தால் வெட்ஜஸ் தயார்.
2. கத்தரிக்காய் சிப்ஸ்
என்னது கத்தரிக்காயில் சிப்ஸா? என்று கேட்கிறீர்களா? ஆம் கத்தரிக்காயில் சிப்ஸ் தான். அது நார்ச்சத்து அதிகமானது காலரிக்கள் குறைவானது. இது நம் டயட் ப்ளானில் இரு சிறப்பான ஸ்நாக்ஸாக அமையும். கத்தரிக்காயை சிறு வட்டங்களாக வெட்டி மசாலா, உப்பு சேர்த்து சிப்ஸ் போல் போட்டு எடுத்தால் தயார்.
3. மக்கானா பேல்
மக்கானா பேல் என்பது வடக்கிந்திய உணவு தான். ஆனால் எல்லோரும் ருசித்து உண்ணக்கூடியது. நவராத்திரி விரதத்தின் போது இதை அம்மனுக்கு செய்து படைப்பதுண்டு. விரதம் இருப்பவர்கள், உடல் எடை குறைப்பவர்களுக்கு இது உகந்த உணவாகும்.
தாமரை விதை பெரும்பாலும் விரதத்தின்போது மக்களால் உண்ணப்படும் ஒரு உணவு. இதில் நிறைந்துள்ள ஆற்றல் விரத நேரங்களில் மக்களை சோர்வடையாமல் வைத்திருக்க உதவுகிறது. மேலும் இது எடை இழப்பிலும் அதிக அளவில் உதவுகிறது. நீண்ட நேரம் பசியை தூண்டாமல் இருப்பதன் மூலம் நாம் அதிக கலோரிகளை உட்கொள்வதிலிருந்து இது நம்மைப் பாதுகாக்கிறது.
இதில் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாக நிறைந்துள்ளது. இதனால் இது ஒரு ஆரோக்கிய உணவாக கருதப்படுகிறது. இதிலுள்ள புரதச்சத்து நீண்ட நேரம் நமக்கு பசியை ஏற்படுத்தாது. பசியை கட்டுப்படுத்துவதன் மூலம் அதிக கலோரிகளை உட்கொள்ளுவதிலுருந்து நம்மை பாதுகாக்கறது.
மக்கானாக்களில் பிளேவனாய்டுகள் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக நிறைந்துள்ளன. மேலும்
இது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. அதுமட்டுமல்லாமல் இது சரும ஆரோக்கியத்தையும் ஊக்குவிக்கிறது.
இதில் குறைந்த அளவில் கிளைசெமிக் குறியீடு என் உள்ளது. ஆரோக்கியமான ரத்த குளுக்கோஸ் அளவை ஒழுங்குபடுத்துவதில் இது பெரும் பங்கினை கொண்டுள்ளன என்பதை பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
தாமரை விதைகளில் அதிகளவில் பொட்டாசியமும் குறைந்தளவு சோடியமும் உள்ளன. எனவே, இவை ரத்த நாளங்களை எளிதில் தளர்வடையச் செய்து, ரத்த அழுத்தத்தைச் சீராக்கி, ஆரோக்கியமான நிலையில் வைக்கின்றன.
நமது உடலில் குறைந்தளவு மக்னீசியம் இருந்தால் மாரடைப்பு வருவதற்கு அதிக வாய்ப்புண்டு. தாமரை விதைகளில் அதிகளவு மக்னீசியம் உள்ளதால் ரத்த ஓட்டமும் ஆக்சிஜன் சப்ளையும் மேம்படுகிறது. இதய நோய் ஆபத்துகளும் குறைகின்றன.
4. ஓட்ஸ் தோக்லா
ஓட்ஸ் தோக்லா என்பது ஒரு சுவையான ஃப்யூஷன் குஜராத்தி செய்முறையாகும், இது ஓட்ஸ், ரவை, பேக்கிங் சோடா மற்றும் தயிர் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. டோக்லாவின் மிதமான சுவைகள் உங்கள் பசியை ஆரோக்கியமான முறையில் பூர்த்தி செய்கின்றன.
ஓட்ஸில் நார்ச்சத்து அதிகமென்பதால் அவை காலை உணவுக்கு சாப்பிடப்படுகின்றன.
5. லவுகி ஜூஸ்
சுரைக்காய் ஜூஸ் சாப்பிடுவதால் உடல் எடை குறையும். சுரைக்காயில் சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ்,இரும்புச் சத்து, வைட்டமின் பி போன்றவை உள்ளன. ஜீரண சக்தியை அதிகரிக்க சுரைக்காய் ஜூஸை குடித்தால் கல்லையும் ஜீரணிக்கும் சக்தியை கொடுக்கும். கோடை கால வெப்பம் நமது உடல் சூட்டை அதிகரிப்பதோடு, தோல் சம்பந்தமான பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது. சுரைக்காய் பக்குவம் செய்து சாப்பிடுவதால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் தாக்காமல் காப்பதோடு நமது தோலுக்கு மினுமினுப்பையும் கொடுக்கும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கல் சுரைக்காய் ஜூஸ் அதிக நீர்ச்சத்து கொண்டது. இது கொழுப்புகளைக் குறைக்கும். வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்.
6.அமராந்த் டிக்கி:
பித்தம், மிகுதி உள்ளவர்கள் தண்டுக்கீரையை நன்கு பயன்படுத்தலாம். தண்டைச் சாப்பிட்டு வந்தால், சிறுநீர் நன்கு போவதால், உடல் எடை குறைந்தது தேவையில்லாத நீர் கோர்த்தல் தடுக்கப்படும். இதில் நார்ச்சத்து இருப்பதால், ரத்தம் சுத்தி அடையும். மலச்சிக்கல் இல்லாமல் செய்து விடும்.
இந்த தண்டுக்கீரையைக் கொண்டு செய்யும் ரெஸிபிதான் அமராந்த் டிக்கி.
7.ராகி குக்கீஸ்
கேழ்வரகில் இயற்கையாகவே இரும்புச்சத்து உள்ளது. இதனால் இதனை அதிகம் உண்பது, இரத்த சோகை நோயை குணப்படுத்த உதவுகிறது. கேழ்வரகு உட்கொள்வது இயற்கையாகவே உடலை ஓய்வு பெற செய்யும். மேலும் இது கவலை, மன அழுத்தம், மற்றும் தூக்கமின்மையை போக்க உதவுகிறது. அதனால் ராகியில் ரொட்டி செய்து சாப்பிட்டால் உடல் எடை குறைய அது உதவுகிறது.