மேலும் அறிய

Kohli IPL Record: ஐபிஎல் போட்டியில் 6 ஆயிரம் ரன்கள் கடந்த முதல் வீரர் - விராட் கோலியின் புதிய சாதனை..

ராஜஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணியின் கேப்டன் கோலி சாதனை படைத்தார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி, ஐபிஎல் போட்டிகளில் 6 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற 16-ஆவது ஐ.பி.எல், ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற பெங்களூர் கேப்டன் விராட் கோலி முதலில் ராஜஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.  ஜோஸ் பட்லர் 8 ரன்களுக்கும்,  மனன் வோரா 7 ரன்களுக்கும், டேவிட் மில்லர் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்ததால், தொடக்கமே ராஜஸ்தான் அணி தடுமாறியது. இதையடுத்து, இணைந்த கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் ஷிவம் துபே இணை நிதானமாக ஆடியது. 21 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்க ஷிவம் துபே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

Kohli IPL Record: ஐபிஎல் போட்டியில் 6 ஆயிரம் ரன்கள் கடந்த முதல் வீரர் - விராட் கோலியின் புதிய சாதனை..

அவருடன் ஜோடி சேர்ந்த ரியான் பராக் 16 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 25 ரன்களை சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து 46 ரன்களை சேர்த்திருந்த ஷிவம் துபேவும் ஆட்டமிழக்க, களத்தில் இறங்கிய ராகுல் திவேதியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் இறுதியில் 23 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 40 ரன்களை குவித்தார். இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 177 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 178 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் கோலி, படிக்கல்  ஆகியோரின் அதிரடியால் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 16.3 ஓவர்களில் 181 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. கோலி 72, படிக்கல் 101 ரன்கள் எடுத்தனர். ஐபிஎல் போட்டியில் முதல் சதமடித்த படிக்கல் ஆட்டநாயகன்  விருது பெற்றார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி பெறும் நான்காவது வெற்றி இதுவாகும். இந்த வெற்றியின் மூலம் அந்த அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு சென்றது.

Milestone 🔓

6000 Runs in #VIVOIPL for 👑 Kohli 👏👏

Live - https://t.co/dch5R4juzp #RCBvRR #VIVOIPL pic.twitter.com/WxLODwE2zD
— IndianPremierLeague (@IPL) April 22, 2021

இந்தப் போட்டியின் 13ஆவது ஓவரில் விராட் கோலி 51 ரன்கள் எடுத்தபோது, ஐபிஎல் போட்டிகளில் 6 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். 196ஆவது போட்டியில் கோலி இந்த சாதனையை படைத்துள்ளார். கோலிக்கு அடுத்த இடத்தில் சிஎஸ்கே வீரர் ரெய்னா 5,448 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். டெல்லி வீரர் ஷிகர் தவான் 5,428 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும், ஹைதராபாத் வீரர் வார்னார் 5,384 ரன்களுடன் நான்காவது இடத்திலும், 5,368 ரன்களுடன் ஐந்தாம் இடத்தில் மும்பை வீரர் ரோகித் சர்மாவும் உள்ளனர்.

தலைப்பு செய்திகள்

45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
ரூ. 1 லட்சம் வரை ரொக்கப் பரிசு! நாகை மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு அரிய வாய்ப்பு!
ரூ. 1 லட்சம் வரை ரொக்கப் பரிசு! நாகை மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு அரிய வாய்ப்பு!
விளையாட்டில் ஆர்வமா? அரசு வழங்கும் ரூ. 1 லட்சம் பரிசு! ஆகஸ்ட் 31-க்குள் உடனே அப்ளை பண்ணுங்க!
விளையாட்டில் ஆர்வமா? அரசு வழங்கும் ரூ. 1 லட்சம் பரிசு! ஆகஸ்ட் 31-க்குள் உடனே அப்ளை பண்ணுங்க!
சிவகங்கை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வெல்லுங்கள்... முழு விவரம் !
சிவகங்கை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வெல்லுங்கள்... முழு விவரம் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget