News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

கீரைகளை எப்படி சமைக்கணும்? சமையலில் காரம் அதிகமா?! இதோ முக்கிய குறிப்புகள்..

உப்மாவில் காரம் அதிகமாகிவிட்டால் அதை எப்படி சரி செய்வது என்பது உள்ளிட்ட பயனுள்ள சமையல் குறிப்புகளை பார்க்கலாம்.

FOLLOW US: 
Share:

கடைகளில் இருந்து வாங்கும் கீரைகளில் பூச்சி அறிக்காமல் இருக்க அதிகம் பூச்சிக்கொல்லி மருந்துகளை அடித்து இருப்பார்கள். எனவே இதை நாம் அப்படியே சாப்பிடுவது நல்லதல்ல. எனவே கீரைகளை வெறும் தண்ணீரில் கழுவாமல், கீரையை கழுவி ஒரு பாத்திரத்தில் சேர்த்து கீரை மூழுகும் அளவு அதில் தண்ணீர் சேர்த்து இதில் ஒரு எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு ஒருமுறை நன்றாக கலந்து விட்டு, இதை 10 நிமிடம் ஊறவைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் நல்ல தண்ணீரில் ஒருமுறை கழுவி விட்டு சமைப்பது நல்லது. 

உருளைக்கிழங்கை நாம் சமைப்பதற்கு வெட்டிய உடன் அது கருத்து விடும் என்பதால் வெட்டிய உருளைக்கிழங்கை தண்ணீரில் ஊற வைப்பது வழக்கம். தண்ணீரில் போட்டு வைத்தாலும் 10 நிமிடத்திற்கு மேல் தண்ணீரில் இருந்தால் உருளைக்கிழங்கு சில நேரங்களில் கருத்து விடும். அப்படி கருக்காமல் இருக்க உருளைக்கிழங்கை ஊற வைக்கும் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் பால் சேர்த்தால் அரை மணிநேரம் ஆனாலும் உருளைக்கிழங்கு கருத்துப் போகாமல் இருக்கும். 

மக்ருணி, சேமியா, உப்மா போன்றவை சமைக்கும்போது அதில் காரம் அதிகமாகிவிட்டால் இரண்டு ஸ்பூன் அளவு அதில் பால் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டால் காரம் குறைந்து விடும். இல்லையென்றால் இதற்கு பதில் தயிர் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் சேர்த்தாலும் காரம் குறைந்து விடும். 

நாம் பாட்டில் அல்லது டப்பாவில் உப்பு ஸ்டோர் செய்து வைக்கும்போது சில நாட்களிலேயே உப்பு தண்ணீர் விட்டு நீர்த்துவிடும். இப்படி ஆகாமல் உப்பு எப்போது ஃப்ரெஷ்ஷாக இருக்க வேண்டுமென்றால், உப்பு கொட்டி வைக்கும் டப்பாவில் கால் டீஸ்பூன் அளவு சோள மாவு சேர்த்து மாவு டப்பா முழுவதும் படும்படி குலுக்கிவிட்டு தடவிவிட்டு ( spread) செய்துகொள்ள வேண்டும். பின் கொட்டாங்குச்சியின் சிறு துண்டை எடுத்து அதன் மேல் உள்ள சிரட்டையை கத்தியால் நீக்கி விட்டு அதை டப்பாவின் அடியில் போட்டுக்கொள்ள வேண்டும். இப்போது இந்த டப்பாவில் உப்பு கொட்டி வைத்தால் உப்பு நீர்த்து போகாமல் ஃப்ரெஷ்ஷாக இருக்கும். 

Published at : 10 Mar 2024 12:09 PM (IST) Tags: Cooking tips keep salt fresh excess salt Upma clean green leaves

தொடர்புடைய செய்திகள்

தின்ன தின்ன திகட்டாத திருநெல்வேலி சொதிக்கு ஈடேது மக்களே! வாங்க செஞ்சு அசத்துவோம்..!

தின்ன தின்ன திகட்டாத திருநெல்வேலி சொதிக்கு ஈடேது மக்களே! வாங்க செஞ்சு அசத்துவோம்..!

Tomato Dosa: தோசை பிரியரா? உடுப்பி ஸ்டைல் தக்காளி தோசை - ரெசிபி இதோ!

Tomato Dosa: தோசை பிரியரா? உடுப்பி ஸ்டைல் தக்காளி தோசை - ரெசிபி இதோ!

Paneer Pulao: புரதச் சத்து நிறைந்த பனீர் புலாவ் - ரெசிபி இதோ!

Paneer Pulao: புரதச் சத்து நிறைந்த பனீர் புலாவ் - ரெசிபி இதோ!

Immunity booster Juice:நோய் எதிர்ப்பு மண்டலம் சீராக இயங்க வேண்டுமா? இதை ட்ரை பண்ணுங்க!

Immunity booster Juice:நோய் எதிர்ப்பு மண்டலம் சீராக இயங்க வேண்டுமா? இதை ட்ரை பண்ணுங்க!

Summer Drink: கோடைக்கு ஏற்ற குளுகுளு மாம்பழம், இளநீர் ஜூஸ் ரெசிபி!

Summer Drink: கோடைக்கு ஏற்ற குளுகுளு மாம்பழம், இளநீர் ஜூஸ் ரெசிபி!

டாப் நியூஸ்

Latest Gold Silver Rate: அப்பாடா! திங்கள் கிழமையே குறைந்த தங்கம் விலை..! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

Latest Gold Silver Rate: அப்பாடா! திங்கள் கிழமையே குறைந்த தங்கம் விலை..! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

CSK Vs RCB IPL Playoff: சென்னையை தட்டி தூக்குனா தான் ப்ளே ஆஃப் வாய்ப்பு - ஆர்.சி.பி. எப்படி ஜெயிக்கணும் தெரியுமா?

CSK Vs RCB IPL Playoff: சென்னையை தட்டி தூக்குனா தான் ப்ளே ஆஃப் வாய்ப்பு - ஆர்.சி.பி. எப்படி ஜெயிக்கணும் தெரியுமா?

AP Assembly Elections: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு - ஆர்வமுடன் வாக்களித்த பிரபலங்கள்!

AP Assembly Elections: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு - ஆர்வமுடன் வாக்களித்த பிரபலங்கள்!

Pavithra Jayaram: அப்பளம் போல நொறுங்கிய கார்.. சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை பலி

Pavithra Jayaram: அப்பளம் போல நொறுங்கிய கார்.. சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை பலி