News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

Plantain Curry: வாழைக்காய் கறி! இந்த மாதிரி செய்து பாருங்க செம டேஸ்டா இருக்கும்!

சுவையான வாழைக்காய் கறி எப்படி செய்வதென்று கீழே விரிவாக பார்க்கலாம்.

FOLLOW US: 
Share:

தேவையான பொருட்கள் 

வாழைக்காய்-4

பெருங்காயம்- சிறிதளவு

கடலை பருப்பு-2 டேபிள் ஸ்பூன்

உளுந்தம் பருப்பு- 2 டேபிள் ஸ்பூன் 

மிளகாய் வத்தல்- 9

மிளகு - 1 ஸ்பூன் 

மல்லி விதை - 2 ஸ்பூன்

கறிவேப்பிலை - 1 கொத்து

கடுகு- தாளிக்க

சீரகம் - ஒரு ஸ்பூன்

சின்ன வெங்காயம் -10

பூண்டு -10 பல் 

மஞ்சள் பொடி

மிளகாய் தூள் -சிறிதளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

வாழைக்காயை தோல் நீக்கி விருப்பமான வடிவில் வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு சூடான கடாயில் எண்ணெய் விட்டு அதில் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். பருப்பு நன்றாக வறுபட்டு சிவக்க ஆரம்பிக்கும் போது, அதில்  மிளகு மற்றும்  மல்லி விதையையும் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். பின்னர் 8 வர மிளகாயை சேர்த்து  வறுக்க வேண்டும். கடைசியாக அதில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையையும் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். பின்னர் வறுத்த பொருட்களை நன்றாக ஆற வைத்து, மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 

இப்போது ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அதில் கடுகு, உளுந்தம் பருப்பு சேர்க்க வேண்டும். கடுகு பொரிந்ததும், அதில் ஒரு ஸ்பூன் சீரகம் மற்றும் கறிவேப்பிலையையும் சேர்க்க வேண்டும். பின்னர் அதில் 10 சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் 10 பல் பூண்டையும் தட்டி சேர்த்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் வதங்கிய பிறகு அரை ஸ்பூன் பெருங்காய தூளை சேர்க்க வேண்டும். அதில் கால் ஸ்பூன் மஞ்சள் தூள், மற்றும் உப்பு சேர்த்து மூடி போட்டு வேக விட வேண்டும். தேவை என்றால் லேசாக தண்ணீர் தெளித்து வேக விடலாம். வாழைக்காய் வெந்த பிறகு அதில் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்றாக கிளறி விட்டு இரண்டு நிமிடம் மூடி வைத்து இறக்கி விட வேண்டும். அவ்வளவுதான் ருசியான வாழைக்காய் பொடி கறி ரெடி.

மேலும் படிக்க 

Australia: ஒரே நாளில் 99 பாருக்கு விசிட்! போதையில் நண்பர்கள் செய்த தவறான காரியம்.. ஆனாலும் கின்னஸ் சாதனை..!

Puzhal Lake: புழல் ஏரி கரையில் அபாயமா? களத்திற்கே சென்ற அமைச்சர்கள்! நீர்வளத்துறை கொடுத்த நீண்ட விளக்கம்!

Published at : 07 Dec 2023 08:40 PM (IST) Tags: Plantain curry plantain recipe plantain side dish procedure

தொடர்புடைய செய்திகள்

Mango Panipuri Golgappe: சுவையான மாம்பழ பானிபூரி செய்வது எப்படி?இதோ ரெசிபி!

Mango Panipuri Golgappe: சுவையான மாம்பழ பானிபூரி செய்வது எப்படி?இதோ ரெசிபி!

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்; மாணவர்களுக்கு உணவு பரிமாறி, அமர்ந்து சாப்பிட்ட கனிமொழி எம்பி

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்; மாணவர்களுக்கு உணவு பரிமாறி, அமர்ந்து சாப்பிட்ட கனிமொழி எம்பி

Soya Tikka Masala: நாண், சப்பாத்திக்கு ஏற்ற சைடிஷ்; சோயா டிக்கா மசாலா ரெசிபி இதோ!

Soya Tikka Masala: நாண், சப்பாத்திக்கு ஏற்ற சைடிஷ்; சோயா டிக்கா மசாலா ரெசிபி இதோ!

Beetroot Idli Fry Recipe: ஹெல்தியான பீட்ரூட் இட்லி ஃப்ரை எளிதாக செய்யலாம் - இதோ ரெசிபி!

Beetroot Idli Fry Recipe: ஹெல்தியான பீட்ரூட் இட்லி ஃப்ரை எளிதாக செய்யலாம் - இதோ ரெசிபி!

Weight Loss: உடல் எடையை குறைக்கனும்னா உருளைக்கிழங்கு சாப்பிட கூடாதா? நிபுணர்கள் சொல்வது என்ன?

Weight Loss: உடல் எடையை குறைக்கனும்னா உருளைக்கிழங்கு சாப்பிட கூடாதா? நிபுணர்கள் சொல்வது என்ன?

டாப் நியூஸ்

Terrorist Attack: ஜம்மு & காஷ்மீரில் தீவிரவாதிகள் உடன் துப்பாக்கிச் சண்டை - ராணுவ வீரர்கள் 4 பேர் வீரமரணம்

Terrorist Attack: ஜம்மு & காஷ்மீரில் தீவிரவாதிகள் உடன் துப்பாக்கிச் சண்டை - ராணுவ வீரர்கள் 4 பேர் வீரமரணம்

Breaking News LIVE, JULY 16: நாதக நிர்வாகி கொலை - மதுரை மாநகர காவல் ஆணையர் நேரடி விசாரணை

Breaking News LIVE, JULY 16: நாதக நிர்வாகி கொலை -  மதுரை மாநகர காவல் ஆணையர் நேரடி  விசாரணை

CM Stalin: காவிரி விவகாரம் - இன்று கூடுகிறது தமிழக சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் - எடுக்கப்போகும் முடிவு என்ன?

CM Stalin: காவிரி விவகாரம் - இன்று கூடுகிறது தமிழக சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் - எடுக்கப்போகும் முடிவு என்ன?

Nilgiri: கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Nilgiri: கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு