Palkova Recipe: பால்கோவா ரொம்ப பிடிக்குமா? இனி வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க...
சுவையான பால்கோவா எப்படி ஈசியா செய்வதென்று பார்க்கலாம் வாங்க.
பால்கோவா என்றாலே சட்டென்று நம் நினைவுக்கு வருவது ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா தான். இது சுவை மற்றும் தரத்திற்கு அங்கீகாரம் பெற்றது. இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா இன்று உலக அரங்கில் தனி அடையாளத்துன் திகழ்கிறது. ஸ்வீட் என்றாலே பொதுவாக எல்லோருக்கும் பிடிக்கும் அதுவா பால்கோவா என்றால் சொல்லவா வேண்டும். பால்கோவா சுவையானது என்றாலும் ஒவ்வொரு கடைக்கும் சுவை வேறுபடும்.
அதானால் சிலர் ஏன் நாமே பால்கோவாவை வீட்டில் தயார் செய்து பார்க்க கூடாது? என்று நினைப்பதுண்டு. ஆனால் அது நன்றாக வருமா என்ற சந்தேகத்தில் நாம் முயற்சிப்பதில்லை. உங்களுக்கு வீட்டிலேயே சுவையான பால்கோவை செய்து சாப்பிட வேண்டும் என்ற ஆசை உள்ளதா? நிச்சயம் செய்யலாம். வாங்க பால்கோவா எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பால் – 1 லிட்டர், சர்க்கரை – 3 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் பொடி – ஒரு சிட்டிகை, நெய் –2 டீஸ்பூன்
செய்முறை
முதலில் அடுப்பில் அடிகனமான அகலமான பாத்திரத்தை வைத்து அதில் திக்கான கொழுப்பு நிறைத்த பாலை ஊற்றவும். கரந்த பசும் பாலாக இருந்தால் பால்கோவா சுவையாக இருக்கும்.
கிட்டத்தட்ட 20 நிமிடம் பாலை சுண்ட காய்ச்ச வேண்டும். பால் பொங்கி வரும்போது ஏடு மேலே தங்கிவிடும். அதை கரண்டியால் சுரண்டி எடுத்து பாலுடன் சேர்த்துவிட்டு தொடர்ந்து கிளரிக்கொண்டே இருக்க வேண்டும்.
பால் நன்கு சுண்டி பாதியளவுக்கு வரும் வரை அடுப்பை மிதமான தீயில் வைத்து தொடர்ந்து கிளரிக்கொண்டே இருக்க வேண்டும். பாலை தொடர்ந்து கிளரினால் தான் பால்கோவா சரியான பதத்தில் வரும்.
பால் முழுவதுமாக சுண்டி கெட்டி பதத்திற்கு வந்தபின்பு அதில் சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து கிளற வேண்டும். பின் இதில் 1 ஸ்பூன் நெய் விட்டு நன்கு கிளற வேண்டும்.
பின் அடுப்பை மிதமான தீயில் வைத்து அடிப்பிடிக்காமல் நன்கு கிளறி விட வேண்டும். அதில் மீண்டும் 1 ஸ்பூன் நெய் ஊற்றி மீண்டும் கிளறி விட வேண்டும்.
இப்போது பால் நன்கு கெட்டியாகி நிறம் மாறி பால்கோவா பதத்திற்கு வந்து இருக்கும். இப்போது அடுப்பை அணைத்து விடலாம். அவ்வளவு தான் சுவையான பால்கோவா தயார்.
மேலும் படிக்க
Raghava Lawrence Salary :சந்திரமுகி 2 படத்திற்கு ராகவா லாரன்ஸ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?