Corn and Curry Leaves Rice: ஊட்டச்சத்து மிகுந்த ஸ்வீட்கார்ன் - கருவேப்பிலை சாதம் -ரெசிபி இதோ!
Corn and Curry Leaves Rice: லன்ச் பாக்ஸிற்கு என்ன சாப்பாடு செய்யலாம் என்று யோசிப்பவர்களுக்கு ஸ்வீட்கார்ன் கருவேப்பிலை வைத்து ஒரு ரைஸ் செய்வது எப்படி என்று காணலாம்.
![Corn and Curry Leaves Rice: ஊட்டச்சத்து மிகுந்த ஸ்வீட்கார்ன் - கருவேப்பிலை சாதம் -ரெசிபி இதோ! Sweet Corn Curry Leaves Rice Lunch box recipe Make Your Food Delicious and Nutritious Check out Corn and Curry Leaves Rice: ஊட்டச்சத்து மிகுந்த ஸ்வீட்கார்ன் - கருவேப்பிலை சாதம் -ரெசிபி இதோ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/16/908a4abb4b708f4d9bd9571c1b1b187e1715852320664333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வாரம் முழுவதும் லன்ச் பாக்ஸ்ல என்ன சாப்பாடு கொடுக்கிறதுன்னு சிலர் திட்டமிடுவது உண்டு. இதோ ஸ்வீட்கார்ன் - கருவேப்பிலை ரைஸ்-யும் லிஸ்ட சேர்த்துக்கலாம்.
என்னென்ன தேவை?
வேகவைத்த சாதம் - ஒரு கப்
ஸ்வீட்கார்ன் - 1 1/2 கப்
துருவிய தேங்காய் - அரை கப்
பொடியாக நறுக்கியு கொத்தமல்லி தழை - சிறிதளவு
அரைத்த கருவேப்பிலை விழுது - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2
தாளிக்க
முந்திரி - 10
வறுத்த வேர்க்கடலை - அரை கப்
காய்ந்த சிகப்பு மிளகாய் - 2
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு - அரை டீ ஸ்பூன்
சீரகம் - அரை டீ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - அரை டீ ஸ்பூன்
பெருங்காய தூள் - ஒரு டீ ஸ்பூன்
கருவேப்பிலை, கொத்தமல்லி - சிறதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாய் நன்றாக சூடானது மூன்று டேபிள் ஸ்பூன் நெய் சேர்க்கவும். தேவையான அளவு சேர்க்கலாம். இதில் கடுகு, சீரகம், காய்ந்த சிகப்பு மிளகாய், உளுந்து, கருவேப்பிலை எல்லாம் சேர்த்து நன்றாக வதக்கவும். இதோடு, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். இதில் முந்திரி இல்லையெனில் வேர்க்கடலை உங்கள் விருப்பத்திற்கேற்றவாறு சேர்க்கலாம். நன்றாக பொன்னிறமாக வதங்கியதும் ஸ்வீட்கார்ன், கருவேப்பிலை விழுது தேங்காய், உப்பு, பெருங்காய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும். வெள்ளரிக்காய் கொஞ்சம் வதங்கியதும் வேக வைத்த சாதம், கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும். அவ்வளவுதான். ஊட்டச்சத்து மிகுந்த கருவேப்பிலை - ஸ்வீட்கார்ன் சாதம் ரெடி.
கருவேப்பிலையில் உள்ள சத்துக்கள் என்னென்ன?
கறிவேப்பிலையில் புரதம், இரும்புச்சது, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், கொழுப்பு, கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, சி போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த சத்துக்களால் கண் பார்வைக் கோளாறுகள், சோகை நோய்கள் குணடையும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ...
பருவகாலங்கள் போல, நம் உடலுக்கும் அவ்வபோது நோய்தொற்று ஏற்படுவது இயல்பானதுதான். அப்படியான பொழுதுகளில் வைரஸ் கிருமிகளை எதிர்த்து எவ்வளவு திறமையாக வெள்ளையணுக்கள் போராடுகிறதோ அந்த வேகத்தில் நமக்கு ஏற்பட்ட உடல்நலக் கேடு காணாமல் போய்விடும். இத்திறனை நோய் எதிர்ப்பு சக்தி என்கிறோம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் காலையில், 7-10 கருவேப்பிலை இலைகளை சாப்பிடலாம். இல்லையெனில், தண்ணீரில் இலைகளை போட்டு, நன்கு கொதிக்க வைத்து வடிக்கட்டிய நீரை பருகலாம்.
எப்படி சாப்பிடுவது?
தினமும் காலையில் எழுந்ததும், 7-10 கருவேப்பிலை இலைகளை நன்கு மென்று திண்று தண்ணீர் குடிக்கலாம். இல்லையெனில், நீர்மோரில் அதிக கருவேப்பிலை உடன் சாப்பிடலாம். இப்படி சாப்பிடுவதால் உடலின் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிப்பதுடன் தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும்.
இன்றைய நவீன வாழ்வில் பலரும் ஆர்கானிக் உணவு வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துவரும் நிலையில், சமையில் மட்டும் கருவேப்பிலை சேர்த்துகொள்ளாமல், தினமும் காலையில் 7-10 கருவேப்பிலை இலைகளை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)