Common Indian Spices : 7 மசாலாக்கள்.. 7 முக்கிய பலன்கள்.. உங்க உணவில் இவ்வளவு அற்புதங்கள் இருக்கா?
ஃப்ரீ ரேடிக்கல்களின் பாதிப்பிலிருந்து உடலைப் பாதுகாப்பது உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகின்றன.
சர்வதேச உணவுகளில் இந்திய மசாலாக்களுக்கு என்று எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. நம் சமையலில் மசாலாப் பொருட்களைப் பயன்படுத்துவது அதன் சுவையை அதிகரிக்கின்றன. கூடுதலாக மசாலாப் பொருட்கள் நம் உடல் நலனைப் பொருத்த வரை பெரிய அளவில் உதவியாக இருக்கின்றன. அதிலும் ஃப்ரீ ரேடிக்கல்களின் பாதிப்பிலிருந்து உடலைப் பாதுகாப்பது உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது. நம்மில் பெரும்பாலானவர்கள் அறியாத பல நன்மைகள் நம் மசாலாப் பொருட்களில் உண்டு..அதனைப் பார்க்கலாம்!
1. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது - ஏலக்காய் :
ஏலக்காய் அல்லது எலைச்சி இதயத்தின் ஆரோக்கியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஏலக்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஏராளமான நார்ச்சத்துகள் நிரம்பியுள்ளன. இது கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும். இது தனது டையூரிடிக் பண்புகளால் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது.
2. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது - இலவங்கப்பட்டை:
இலவங்கப்பட்டை தெர்மோஜெனீசிஸ் அல்லது கொழுப்பு செல்களை எரிக்கும் செயல்முறையை ஊக்குவிக்கும் சின்னமால்டிஹைட் எனப்படும் அத்தியாவசிய எண்ணெயைக் கொண்டுள்ளது என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் மற்றும் எடை இழப்பை ஊக்குவிக்கும் பல நொதிகளின் செயல்பாட்டை இந்த எண்ணெய் அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
3. இரும்புச் சத்து நிறைந்த ஆதாரம் - சீரகம்:
சீரகம் இரும்புச்சத்துக்கான சிறந்த மூலமாகும். 100 கிராம் சீரகத்தில் 66.4 மில்லிகிராம் இரும்புச்சத்து உள்ளது, இது USDA தரவுகளின்படி உங்கள் தினசரி தேவையில் 368 சதவிகிதம் வரை பூர்த்தி செய்யும்.
4. நெஞ்சு எரிச்சலை நீக்குகிறது - பெருங்காயம்:
பெருங்காயம் அழற்சி எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் தாக்கத்துக்கு எதிரான எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளது. இது நெஞ்சு சளியை வெளியேற்ற உதவுகிறது. இதன் சிறந்த பலன்களைப் பெற தண்ணீரில் சிறிது சிட்டிகை சேர்த்து அதனுடன் தேன் கலந்து சாப்பிடலாம்.
5. வாய் ஆரோக்கியத்திற்கு - அஜ்வைன்:
பல் வலிக்கு அஜ்வைன் ஒரு அற்புத மருந்து. இதில் தைமால் என்ற கலவை உள்ளது, இது வாய்வழி சுகாதாரத்திற்கு முக்கியமானது மற்றும் பல்வலி, வீங்கிய ஈறுகள் மற்றும் வாய் புண்களுக்கு எதிராக நிவாரணம் அளிக்கிறது. வாய் துர்நாற்றம் உள்ளவர்களுக்கும் அஜ்வைன் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.
6. நல்ல தூக்கத்திற்கு - கிராம்பு : கிராம்பு யூஜெனால் எனப்படும் ஒரு கலவையைக் கொண்டுள்ளது, இது உங்கள் உடலையும் மனதையும் ஓய்வெடுக்க உதவுகிறது, அதே நேரத்தில் இரவில் மன அழுத்தத்தையும் குறைக்கிறது. இது தவிர பல் ஈறுகளுக்கு கிராம்பு எண்ணெய் தடவுவது அது தொடர்பான வீக்கம் வலி ஆகியவற்றுக்கு சிறந்த தீர்வு
7. தொண்டை வலியை நீக்குகிறது - கருப்பு மிளகு:
கருப்பு மிளகு ஆண்டிபயாடிக் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. அதிக வைட்டமின் சி உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது. மேலும் இது இருமல் மற்றும் சளியைக் குணப்படுத்தவும், தொண்டை வலிக்கு எதிராக நிவாரணம் அளிக்கவும் உதவும். கருப்பு மிளகு, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து பருகி வர தொண்டைக்கு சிறந்த ஓய்வு கிடைக்கும்.