Sulaimani Tea: புத்துணர்ச்சி தரும் கேரள ஸ்பெஷல் சுலைமானி தேநீர்..! எப்படி செய்வது?
Sulaimani Tea Recipe in Tamil: தேநீர் பிரியர்கள் யாரேனும் இதை வாசித்தீர்கள் என்றால் நிச்சயமாக வீட்டிற்குச் சென்றவுடன் இந்த ரெஸிபியை ட்ரை பண்ணிப் பார்ப்பீங்க. அது என்ன சுலைமானி டீ..?
Sulaimani Tea: தேநீர் பிரியர்கள் யாரேனும் இதை வாசித்தீர்கள் என்றால் நிச்சயமாக வீட்டிற்குச் சென்றவுடன் இந்த ரெஸிபியை ட்ரை பண்ணிப் பார்ப்பீங்க. அது என்ன சுலைமானி டீ.. டீக்கடையின் பெயரா என்று கேட்பவர்களுக்கு இல்லை இல்லை இது ஒருவகை தேநீர் என்பதை சொல்லிக் கொள்கிறோம்.
கேரளாவில் இந்த வகை தேநீர் கொஞ்சம் அதிகம். கட்டஞ்சாயா என்ற கடும் டீ தான் பரவலாக அருந்துகிறார்கள் என்றாலும் கூட மசாலாப் பொருட்களை சேர்த்து இனிப்பு புளிப்பு என்று தரப்படும் சுலைமானி டீ கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல். இனிப்பு, புளிப்பு என்றவுடன் வாய் ஊறுகிறதா வாங்க அப்படியே ரெஸிபியையும் சொல்லிக் கொடுத்துவிடுகிறோம். அப்புறம் இதன் தாயகம் அரபு உலகம்.
தேவையான பொருட்கள்:
1.5 கப் தண்ணீர்
1 டீஸ்பூன் தேநீர்
1 டீஸ்பூன் தேயிலை
2 கிராம்பு
2 பச்சை ஏலக்காய்
அரை இன்ச் பட்டை1 டீஸ்பூன் லெமன் ஜூஸ்
4 புதினா இலைகள்
இதில் இஞ்சி ஆப்ஷனல். சிலர் இஞ்சி விரும்பினால் சேர்த்துக் கொள்ளலாம்.
செய்முறை:
ஒரு வாய அகலமான பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். அதில் கிராம்பு, லவங்கப்பட்ட, புதினா இலைகள் மற்றும் ஏலக்காயை போடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்கவிடவும் சில நிமிடங்களில் எலும்பிச்சை சாற்றை ஊற்றவும். பின்னர் கடைசியாக தேயிலைகளைப் போடவும். அடுப்பை அனைத்துவிடவும். 3 முதல் 4 நிமிடங்களுக்கு பாத்திரத்தில் மூடி போட்டு வைத்துவிடவும். பின்னர் வடிகட்டி அதில் கொஞ்சம் தேன் சேர்த்து மேலே புதினா இலைகள் போட்டு பருகவும்.
வரலாற்றில் இதை அரபு உலகில் அந்தக் காலத்தில் பருகிவந்தனர். இதற்கு இணையான காவா எனும் பானத்தை இறைத்தூதரே பருகினார் என்றும் கூறப்படுகிறது. காவாவில் பேரீச்சம்பழமும், மிளகுத்தூளும் சேர்ப்பார்கள். அரேபியர்கள் முதலில் கவா என்ற பானத்தைத் தான் பருகிவந்தனர் என்றும் அதன் பின்னரே அதில் பல்வேறு புதுமைகளையும் புகுத்தி சுலைமானி தேநீரைப் பருகினர் என்றும் கூறப்படுகிறது. அரபு மொழியில் சுலைமானி தேநீர் என்றால் அமைதியின் மனிதர் என்று அர்த்தம்.
திருமணம் மற்றும் நிறைய கொண்டாட்டங்களில் ஒரு கனமான உணவுகளுக்கு பிறகு மக்கள் இந்த தேநீரை எடுத்துக் கொள்கின்றனர். இந்த தேநீர் பார்ப்பதற்கு பழுப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் காணப்படும்.
ஜீரண சக்தியை அதிகரிப்பதோடு புத்துணர்ச்சியைத் தரக்கூடியது இந்த தேநீர். அதேபோல் இந்தத் தேநீர் மழை, குளிர் காலங்களில் பருக இதமானதாக இருக்கும்.