Rajma Masala : சாதம்.. தோசை.. இட்லிக்கு ஏற்றது.. புரதச்சத்து நிறைந்த ராஜ்மா மசாலா.. ரெசிப்பி இதோ..
Rajma Masala Recipe : சுவையான ராஜ்மா மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ராஜ்மா- 1 கப்
பிரியாணி இலை - 1
ஏலக்காய் - 1
நெய் - 1 தேக்கரண்டி
சீரகம் - ½ தேக்கரண்டி
இலவங்கப்பட்டை - 1
கிராம்பு - 4
வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு விழுது - ½ தேக்கரண்டி
தக்காளி விழுது - 2 கப்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய் - 1 ஸ்பூன்
கொத்தமல்லி தூள் - ½ தேக்கரண்டி
சீரகப் பொடி - ½ தேக்கரண்டி
ஆம்சூர் தூள் - ½ தேக்கரண்டி
கரம் மசாலா - ½ தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கசூரி மேத்தி - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிது
செய்முறை
ராஜ்மாவை நன்கு கழுவி, தண்ணீரில் 12 மணிநேரம் ஊற வைக்கவேண்டும்.
ராஜ்மாவை குக்கரில் சேர்த்து, 4 கப் தண்ணீர், ஒரு பிரியாணி இலை, உப்பு மற்றும் கருப்பு ஏலக்காய் சேர்த்து 6 விசில் வரும்வரை வேக வைத்து இதை தனியே எடுத்து வைத்துவிட வேண்டும்.
ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் நெய்யை ஊற்றி சூடாக்கி, அதில் சீரகம், இலவங்கப்பட்டை, கிராம்பு சேர்த்து வேக விட வேண்டும்.
இதில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி, பின் தக்காளி விழுது சேர்த்து வதக்கி இதனை மூடி சிறிது நேரம் வேக விட வேண்டும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மாங்காய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
வேகவைத்த ராஜ்மாவை இதில் சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும். இதனை மூடி போட்டு கிரேவி கெட்டி ஆகும் வரை வேகவிட வேண்டும்.
கடைசியாக கசூரி மேத்தி மற்றும் கொத்தமல்லி சேர்த்து கலக்கவும். அவ்வளவுதான் சுவையான ராஜ்மா மசாலா தயார். இதை சூடான சாதத்துடன் வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
ராஜ்மா நன்மைகள்
கிட்னி பீன்ஸில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் இது ஸ்டார்ச் தடுப்பான்களாகவும், புரதங்களாகவும் செயல்படுகிறது.
ராஜ்மாவில் காணப்படும் மாங்கனீசு சிறந்த ஆக்ஸிஜனேற்ற எதிர் பண்புகளை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் விளைவாக, இது உடல் செல்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை திறம்பட அழிக்கிறது என்று சொல்லப்படுகிறது.
ராஜ்மா என்னும் கிட்னி பீன்ஸில் கணிசமான அளவு சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நார்ச் சத்துக்கள் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும் என சொல்லப்படுகிறது.
மேலும் படிக்க
Paneer Peas: நாண், சப்பாத்திக்கு பெஸ்ட் காம்போ! பனீர் பட்டாணி கிரேவி செய்முறை இதோ!
Makhana Payasam: பொங்கல் ஸ்பெஷல் ரெசிபி! சுவையான தாமரை விதை பாயாசம் செய்முறை இதோ!