Pumpkin Seed Benefits : பூசணிக்காய் விதையின் நன்மைகளும், பயன்களும் என்ன தெரியுமா?
பூசணி விதைகளில் நோய் எதிர்ப்பு பண்புகள் ,சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மிகுதியாக உள்ளது.
நமது வீட்டில் அன்றாட பயன்படுத்தும் காய்கறிகளில் அதிக அளவில் சத்துக்களானது நிறைந்துள்ளது. அதில் ஒரு காய்கறிதான் பூசணிக்காய்.பூசணிக்காய் ஆனது அதன் உருவத்திற்கே ஏற்ப அதிகளவு நன்மைகளை தருகிறது. பூசணிக்காயின் விதைகள் அதிகளவு சத்துக்களை கொண்டுள்ளது.இந்தியாவைப் பொறுத்தவரை, மருந்துத் தயாரிப்புகளில்தான் பூசணி விதை அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது.
பூசணிக்காயின் விதைகள் மற்றும் அதிலிருந்து கிடைக்கும் எண்ணை ஆகிய இரண்டில் இருந்தும் மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. பூசணிக்காயில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதால் அதனை நாம் சாப்பிடும் பொழுது நமது உடம்பில் உள்ள கழிவுகளை சிறுநீர் வழியாக அதிக அளவு வெளியேற்றுகிறது. இது சிறுநீரகப்பையில் ஆண்களின் இனப்பெருக்க மண்டலத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. மருத்துவ உலகில் பூசணி விதைகளானது எந்த விதத்திலும் தீங்கு இல்லாத ஒரு புரோஸ்டேடிக் ஹேபர் பிளாசியாவிற்க்கு(Bph) அதாவது ஆண்களின் சிறுநீர் பை மற்றும் இனப்பெருக்க சுரப்பிகளுக்கு நன்மைகளை பயக்குவதாக இருக்கிறது.
பூசணிவிதைகளின் சுகாதார பண்புகள் என்னவென்று பார்ப்போம். பூசணி விதைகள் நமது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.இது நமது ஆற்றலுக்கு முக்கியமானதாக மருதுவர்களால் கருதப்படுகிறது. பூசணி விதைகளில் அதிக அளவு மெக்னீசியம் ஆனது நிறைந்துள்ளது. இது இதயத்தின் இயக்கம் மற்றும் இரத்த நாளங்களின் தளர்வு மற்றும் தடையற்ற குடல் செயல்பாடு போன்ற முக்கியமான உடலியல் செயல்பாடுகளுக்கு பெரிதும் உதவுகிறது. பூசணி விதைகளில் நோய் எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளது.பூசணி விதைகளில் சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மிகுதியாக உள்ளது. எனவே இதை சாப்பாடும் நபருக்கு பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களை பூசணி விதைகளால் வழங்க முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பூசணி விதைகளால் நமக்கு ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளை காண்போம். நமது உடம்பில் உள்ள எலும்பானது, ஆரோக்கியமாக இருப்பதற்கு மெக்னீசியமானது அதிக அளவு தேவைப்படுகிறது. பூசணி விதைகளில் அதிக அளவு மெக்னீசியமானது உள்ளது. இது எலும்பானது அதிக வலிமை பெற உதவுகிறது. இந்த பூசணி விதையில் உள்ள மெக்னீசியம் ஆனது மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு எளிதில் உடைபடும் நோயிலிருந்து தடுக்கிறது. ஏனெனில் 35 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் மற்றும் மாதவிடாய் நின்ற பெண்களுக்கு எலும்பு உடைந்தால் சரி செய்வது மிகவும் கடினம்.
நீரிழிவு நோயிலிருந்து பாதுகாக்கிறது.பூசணி விதையில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துக்களும் டைப்-2 வகையான நீரழிவு நோயிலிருந்து பாதுகாக்கிறது. நாம் 100மில்லி கிராம் மெக்னீசியம் உட்கொள்ளும் பொழுது 15 சதவீதம் நீரிழிவு நோயானது குறைகிறது. பூசணி விதையானது இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இந்த விதையை உட்கொள்வதால் இதயத்தின் இயக்கம் சரியான முறையில் இருக்கு உதவுகிறது.
பூசணி விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஆனது ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் சிறுநீர் கோளாறுகளுக்கு ஆகச்சிறந்த மருந்தாக இருக்கிறது.இது சிறுநீர்ப்பையில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்கிறது. இந்த பூசணி விதை ஆனது உடலில் அதிக அளவு நார்ச்சத்தை கொடுக்கிறது. இதனால் நமது உடலில் உள்ள நச்சுக்கள் நீங்க பெற்று சிறந்த செரிமான தன்மையை கொடுக்கிறது.
பூசணி விதைகளை சாப்பிடும்பொழுது எடை குறைவதோடு,உடலில் ஆற்றல் சக்தியும் அதிகரிக்கிறது.எடை குறைப்பிற்கு பயன்படுகிறது. இதனை நாம் சாப்பிடும் பொழுது நமது உடலானது அதிக ஆற்றலுடன் இருக்கிறது. மேலும் பூசணி விதைகளில் நிறைந்துள்ள ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் ஆனது, நமது சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.இதில் ஸ்குவாலீன் உள்ளதால் புதிய திசுக்களை உருவாக்க உறுதுணையாக உள்ளது.அதிக வெப்பம் மற்றும் புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது.
பூசணி விதைகளில் நமக்கு தேவையான நிறைய ஊட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த விதையினை நமது உணவில் எப்படி சேர்ப்பது என்பதை பார்ப்போம். நாம் சாப்பிடும் பழங்களுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லது.டீ மற்றும் காபி சாப்பிடும் பொழுது பூசணி விதைகளை வறுத்து சாப்பிடுவது நல்லது.பூசணி விதையில் இருந்து வெண்ணெய் தயாரித்தும் பயன்படுத்தலாம்.
பூசணி விதைகளால் ஏற்படும் பக்க விளைவுகளை பார்ப்போம்: பூசணி விதையில் அதிக அளவு ஊட்டச்சத்து உள்ளது என்றாலும் அதனை அதிக அளவு எடுத்துக் கொண்டால் ஒரு சில பக்கவிளைவானது ஏற்படும். வயிற்றுப்போக்கு,குமட்டல்,தோல் அரிப்பு,தடிப்புகள், உடல் ஒவ்வாமை மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. ஆகையால் வாரம் ஒரு முறையோ அல்லது இருமுறையோ மட்டும் பூசணிக்காய் சமைத்து சாப்பிட்டு அல்லது பூசணி விதைகளை அளவோடு எடுத்துக்கொண்டு பூசணி விதை தரும் நன்மைகளை நாமும் பெறுவோம்.