News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

Prawn Koliwada : சண்டே லஞ்ச் சாப்பிட ரெடி ஆகிட்டீங்களா? : இறால் கோலிவாடா ரெசிபி எப்படின்னு பார்க்கலாம்..

சுவையான இறால் கோலிவாடா ரெசிபி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

FOLLOW US: 
Share:

கடல் உணவுகள் பொதுவாகவே சுவை மிகுந்ததாக இருக்கும். அதிலும் இறால் நல்ல சுவையாக இருக்கும். இறாலைக் கொண்டு, தொக்கு, கோலா உருண்டை, பிரியாணி உள்ளிட்ட பல்வேறு ரெசிபிகளை செய்யலாம். இறாலக் கொண்டு செய்யப்படும் இறால் கோலிவாடா ரெசிபி நல்ல சுவையாக இருக்கும். இதை சாதத்திற்கு சைட் - டிஷ் ஆக வைத்து சாப்பிட நன்றாக இருக்கும்.  மசாலாக்களுடன் சேர்த்து வறுத்து எடுக்கப்பட்ட இறால்கள் நல்ல சுவையாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த ரெசிபியை விரும்பி சாப்பிடுவர். வாங்க இறால் கோலிவாடா ரெசிபி எப்படி செய்வதென்று பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்

300 கிராம் இறால், 1 டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்,3 தேக்கரண்டி கடலை மாவு, 2 டீஸ்பூன் மைதா, 4 டீஸ்பூன் தயிர், 1 தேக்கரண்டி எண்ணெய், 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டீஸ்பூன் கொத்தமல்லி தூள், உப்பு - சுவைக்கேற்ப, எண்ணெய் வறுக்க தேவையான அளவு, சாட் மசாலா -தேவைக்கேற்ப.

செய்முறை

1.இறால் கோலிவாடா செய்ய, முதலில் நாம் இறால்களைக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். அவற்றை உலர்த்தி, பின்னர் இஞ்சி-பூண்டு விழுது, 1/2 டீஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து ஊறவைக்க வேண்டும்.  அதை 20-25 நிமிடங்கள் அப்படியே வைத்து விட வேஎண்டும்.

2.இப்போது, ​​இறாலில் இருந்து அதிகப்படியான தண்ணீரை பிழிந்து எடுத்து விட வேண்டும். மைதா,கடலை மாவு, தயிர், எண்ணெய், மீதமுள்ள எலுமிச்சை சாறு மற்றும் சிவப்பு மிளகாய் தூள் சேர்க்கவும்.

3.நன்றாக கலந்து அனைத்து மசாலாக்களும் இறால் மீது ஒட்டும்படி நன்கு கலந்து விட வேண்டும்.

4. அடுப்பில் கடாயை வைத்து இறாலை வறுக்க தேவையான அளவு எண்ணெய் சேர்க்க வேண்டும். அதில்  மசாலா பூசப்பட்ட  இறாலை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து எண்ணெயில் சேர்க்க வேண்டும். அவை பொன்னிறமாக மாறும் வரை நன்றாக வறுக்க வேண்டும்.

5.வறுத்தெடுத்த இறாலில் இருந்து அதிகப்படியான எண்ணெயை அகற்ற, ஒடு தட்டில் டிஷ்யூ பேப்பர்களை பரப்பி, அதன் மீது வறுத்த இறால்களை எடுத்து வைக்க வேண்டும். இதன் மீது சிறிது சாட் மசாலாவை தூவி இறால் கோலிவாடவை பரிமாறினால் சுவையாக இருக்கும். 

மேலும் படிக்க

Organ Donation: பிறந்த 100 மணிநேரத்தில் குழந்தை மூளைச்சாவு : உடல் உறுப்பு தானத்தால் 4 பேருக்கு புதிய வாழ்க்கை

TN Medical Camp: இருமல், காய்ச்சல் இருக்கா? தமிழ்நாட்டில் இன்று 1000 இடங்களில் மருத்துவ முகாம் - உடனே செக் பண்ணுங்க

Published at : 29 Oct 2023 12:09 PM (IST) Tags: prawn recipe white rice side dish Prawn Koliwada Recipe

தொடர்புடைய செய்திகள்

125 கிடாய், 2600 கிலோ அரிசி:  ஆண்கள் மட்டும் கலந்து கொண்ட அசைவ விருந்து!

125 கிடாய், 2600 கிலோ அரிசி: ஆண்கள் மட்டும் கலந்து கொண்ட அசைவ விருந்து!

Corn and Curry Leaves Rice: ஊட்டச்சத்து மிகுந்த ஸ்வீட்கார்ன் - கருவேப்பிலை சாதம் -ரெசிபி இதோ!

Corn and Curry Leaves Rice: ஊட்டச்சத்து மிகுந்த ஸ்வீட்கார்ன் - கருவேப்பிலை சாதம் -ரெசிபி இதோ!

Spicy Paneer Curry: சுவையான பனீர் கிரேவி செய்வது எப்படி? ரெசிபி இதோ!

Spicy Paneer Curry: சுவையான பனீர் கிரேவி செய்வது எப்படி? ரெசிபி இதோ!

Paneer Broccoli Rice:ஆரோக்கியமான பனீர் ப்ரோக்கோலி ரைஸ் பவுல் - ரெசிபி இதோ!

Paneer Broccoli Rice:ஆரோக்கியமான பனீர் ப்ரோக்கோலி ரைஸ் பவுல் - ரெசிபி இதோ!

Sago Sarbath : ஜில்லுனு ஜவ்வரிசி சர்பத்.. கொளுத்தும் வெயிலுக்கு இதமான ரெசிப்பி இதோ..

Sago Sarbath : ஜில்லுனு ஜவ்வரிசி சர்பத்.. கொளுத்தும் வெயிலுக்கு இதமான ரெசிப்பி இதோ..

டாப் நியூஸ்

Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க

Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க

Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு

Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு

Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?

Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?