News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

Pongal Sweets: பூசணிக்காய், பாகற்காய், பிஸ்தாவில் பர்ஃபி செய்வது எப்படி? பொங்கலுக்கு செஞ்சு அசத்துங்க!

பூசணிக்காய், பாகற்காய், முந்திரி போன்றவற்றால் செய்யப்படும் இனிப்புகள் குறைந்த கலோரி கொண்ட, கொழுப்பற்ற உணவாக இருக்கிறது.

FOLLOW US: 
Share:

பொங்கல் பண்டிகை நமது வீடுகளில் பாரம்பரியமாக இனிப்பு பலகாரங்கள் செய்யப்படுகின்றன. அதுவும் கடலை மாவு, கோதுமை மாவு, உளுந்து மாவு ,ராகி மாவு, மைதா மாவு என பல்வேறு வகை மாவுகளை கொண்டு நாம் வழக்கமாக இனிப்பு பலகாரங்களை செய்கிறோம்.

காய்கறிகள் மூலம் செய்யப்படும் இனிப்புகள்:

அதிலிருந்து சற்று வேறுபட்டு  இம்முறை காய்கறிகளைக் கொண்டு சில இனிப்பு வகைகளை செய்து வீட்டிற்கு வரும்  விருந்தினர்களை நாம் அசத்தலாம். பூசணிக்காய் பர்பி ,பாகற்காய் பர்பி என இயற்கையாக கிடைக்கும் பொருட்களைக் கொண்டு சில இனிப்பு வகைகளை செய்து தீபாவளியை கொண்டாடலாம்.

இவ்வாறு பூசணிக்காய் ,பாகற்காய், பிஸ்தா, முந்திரி என இயற்கையாக கிடைக்கும் ஆரோக்கியமான பொருட்களால் கலோரிகள் குறைந்த உணவுகளை நாம் வீட்டிலேயே தயார் செய்யலாம்.

பூசணிக்காய், பாகற்காய், முந்திரி போன்றவற்றால் செய்யப்படும் இனிப்புகள் குறைந்த கலோரிகளையும், கொழுப்பற்ற உணவாகவும் இருக்கிறது. இது அதிகளவாக நீரழிவு நோய் உள்ளவர்கள் உண்ணக்கூடியதாகவும் இருக்கும். தீபாவளி காலத்தில் செய்யப்படும் இனிப்பு வகைகள் பெரும்பாலும் சர்க்கரை நோய் உள்ளவர்களால் சாப்பிட முடிவதில்லை. ஆகவே இவ்வகையான காய்கறிகளால் செய்யும் குறைந்த இனிப்புள்ள ஆரோக்கியமான உணவு அவர்களுக்கு உடலுக்கு ஏற்ற வகையில் அமையும்.

ஆகவே இந்த பொங்கலுக்கு பூசணிக்காய் பர்ஃபி, பாகற்காய் பர்ஃபி போன்றவற்றை நாம் செய்து உடலின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம். பொங்கலன்று வீட்டில் இனிப்பு பலகாரங்களை செய்து
உறவினர்களுடன் பகிர்ந்து கொள்வது மங்களகரமானதாக கருதப்படுகிறது.  ரஸ்குல்லா, குலாப் ஜாமூன், காஜு கட்லி, கலகண்ட், ரஸ்மலாய், சாம் சாம், மைசூர் பாக் சந்தேஷ், பெசன் கே லட்டு, பலுஷாஹி, பாடாஷே, கிலோன் போன்ற அனைத்து வகையான இனிப்பு வகைகளும், தீபாவளி ஒட்டி  இப்போது நாடு முழுவதும் உள்ள கடைகளில் அளவில் கிடைக்கின்றன .

குறிப்பாக இந்த பண்டிகை காலத்தில் நாம் சுவையான உணவுகளை செய்து திருவிழாவை மகிழ்ச்சிகரமாக கொண்டாட வேண்டும் விரும்புவோம். 

ஆகவே இந்த நாட்களில் அதிகளவான மாவு மற்றும் இனிப்பு பொருட்களை  சாப்பிட நேரிடுகிறது. இது நமது உடலில் கலோரிகளில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது .அதேபோல் செரிமான  அமைப்பிலும் பல பிரச்சனைகளை தூண்டுகிறது.

இது ஆரோக்கியமான உணவு கட்டமைப்பிலிருந்து விலகி சற்று உடலுக்கு தீங்கை விளைவிக்க கூடிய அளவில் இனிப்பும், அதிகளவான கலோரியும் உடலில் சேர்கிறது .ஆகவே இந்த முறையில் இருந்து சற்று மாறுபட்ட விதமாக, ஆரோக்கியமான உணவு வகைகளால் செய்யப்பட்ட ,கலோரி குறைந்த தீபாவளி இனிப்பு வகைகளை நாம் இம்முறை சற்றும் முயற்சித்து பார்க்கலாம்.

1. பூசணிக்காய் பர்ஃபி:

தேவையான பொருட்கள்

பூசணிகாய் - 500 கிராம்

சர்க்கரை - 250 கிராம்

கெட்டியான பாலாடை - 150 கிராம்

ஏலக்காய் தூள் - 5 கிராம்

தண்ணீர் - 250 மிலி

நெய் - 100 கிராம்

சில்வர் லீவ் - 05 

செய்முறை:

• முதலில் பூசணிக்காயை நன்கு அவித்து, தோல் நீக்கி மசித்து கொள்ளவும். பின்னர் கனமான ஒரு பாத்திரத்தில் நெய்யை மிதமான தீயில் சூடாக்கவும்.

• மசித்து வைத்துள்ள பூசணிக்காயைச் சேர்த்து, நெய்யுடன் நன்கு கலந்து கொள்ளவும். மிதமான தீயில் பூசணிக்காயை ஈரப்பதம் காய்ந்து போகும் வரை தொடர்ந்து கிளறவும்.

* பின்னர் சர்க்கரை சேர்த்து பூசணி கெட்டியாகும் வரை தொடர்ந்து வதக்கவும். கெட்டியான பாலாடை, ஏலக்காய் தூள் மற்றும்  நெய் சேர்த்து நன்கு கலக்கவும். தொடர்ந்து கலவையை நெய் தடவிய தட்டிற்கு மாற்றவும்.

• தட்டில் மாற்றியவுடன் நன்கு அதனை சமன் செய்து கொண்டு சில்வர் இலைகளை அதன் மீது அழுத்த வேண்டும். பின்னர் 30 நிமிடங்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்து சிறிய சிறிய சதுர துண்டுகளாக வெட்டி பரிமாறலாம்.

2. பிஸ்தா பர்ஃபி:

தேவையான பொருட்கள்

பச்சை பிஸ்தா - 500 கிராம்

சர்க்கரை - 250 கிராம்

கெட்டியான பாலாடை- 150 கிராம்

ஏலக்காய் தூள் - 5 கிராம்

தண்ணீர் - 250 மிலி

 நெய் - 100 கிராம்

சில்வர் இலை - 5

செய்முறை:

• முதலில் பிஸ்தாவை வெதுவெதுப்பான நீரில் சுமார் 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின்னர் பிஸ்தா தோலை அகற்றி ,மிக்சி கிரைண்டரில் போட்டு மென்மையான பேஸ்ட் செய்யவும்.

அத்துடன் இப்போது சர்க்கரை பாகை தயார் செய்ய வேண்டும்., தண்ணீரில் சர்க்கரை சேர்த்து, குறைந்த தீயில் கெட்டியான பாகு தயார் செய்ய வேண்டும்.

• பின்னர் கெட்டியான சர்க்கரை பாகில் பிஸ்தா பேஸ்ட்டை சேர்த்து தொடர்ந்து கிளறவும். கெட்டியான பாலாடை, ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கடினமான பேஸ்ட் உருவாகும் வரை குறைந்த தீயில் சமைக்கவும்.

 * பிஸ்தா கலவை நன்கு கெட்டியானதும் , அதனுடன் நெய் சேர்த்து நன்கு கலக்கவும். கலவையை நெய் தடவிய தட்டில் மாற்றி சமப்படுத்தவும்.

• தேவையான அளவு உயரத்தில் சமப்படுத்தி கொண்டு அதன் மேலே சில்வர் இலையை வைத்து  30 நிமிடங்கள்  அப்படியே விடவும், பின்னர் துண்டுகளாக வெட்டி, அலங்கரித்து பறிமாறலாம்

3. பாகற்காய் பர்ஃபி :

தேவையான பொருட்கள்

பாகற்காய் - 500 கிராம்

சர்க்கரை - 200 கிராம்

கெட்டியான பாலாடை- 300 கிராம்

ஏலக்காய் தூள் - 5 கிராம்

தண்ணீர் - 200 மிலி

பாதாம் - 50 கிராம்

திராட்சை - 50 கிராம்

முந்திரி பருப்பு - 50 கிராம்

செய்முறை:

• முதலில் பாகற்காயை நன்கு கழுவி அதனை இரண்டாக பிளந்து உள்ளிருக்கும் விதைகளை வெளியில் தனியாக எடுத்து விட வேண்டும். பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும், பின்னர் வெட்டி வைத்திருக்கும் பாகற்காயை அதில் போட்டு நன்கு வேக வைக்க வேண்டும்.

• பாகற்காய் நன்கு வெந்து மென்மையாக மாறியதும், தண்ணீரில் இருந்து எடுத்து , கசப்புச் சுவை நீங்குவதற்காக அரை மணி நேரம் குளிர்ந்த நீரில் போட்டு ஊற வைக்கவும்.

• பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் சர்க்கரையை போட்டு மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். சர்க்கரை பாகு கெட்டியான உடன் வேகவைத்த பாகற்காயை சேர்த்து 15 நிமிடம்  சூடான சர்க்கரை பாகில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும், அதனால் பாகற்காய் இனிப்பாக மாறும்.

• இதற்கிடையில் ஒரு பாத்திரத்தில், கெட்டியான பாலாடை, நறுக்கிய பருப்புகள், ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். 

• பின்னர் சர்க்கரை பாகில் இருந்து பாகற்காயை ஒரு வடிகட்டியில் எடுக்கவும், இந்த பாகற்காயில் தற்போது அதிகளவான சர்க்கரை பாகு சேர்ந்திருக்கும். பின்னர் கெட்டியான பாலாடை, பருப்புகள் மற்றும் ஏலக்காய் கலவையை பாகற்காய்யுடன் நன்கு பிசைந்து கலந்து கொள்ளவும். பின்னர் அதனை சமப்படுத்தி துண்டுகளாக வெட்டி  அலங்கரித்து பரிமாறலாம்.

Published at : 01 Jan 2024 03:59 PM (IST) Tags: Sweets Pumpkin barfi karela pak Pongal Festival Recipes

தொடர்புடைய செய்திகள்

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

டாப் நியூஸ்

Breaking News LIVE: நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் சற்று நேரத்தில் குடியரசுத் தலைவர் முர்மு உரை

Breaking News LIVE:  நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் சற்று நேரத்தில் குடியரசுத் தலைவர் முர்மு உரை

Latest Gold Silver Rate: சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!

Latest Gold Silver Rate: சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!

AIADMK Protest: கள்ளச்சாராய விவகாரம்.. சட்டப்பேரவை சஸ்பெண்ட்.. அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் இபிஎஸ் உண்ணாவிரதம்!

AIADMK Protest: கள்ளச்சாராய விவகாரம்.. சட்டப்பேரவை சஸ்பெண்ட்.. அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் இபிஎஸ் உண்ணாவிரதம்!

Vijay students meet : நாளை விஜய் பேசப்போகும் அரசியல் என்ன ? கட்சித் துவங்கிய பின் முதல் நிகழ்ச்சி ..! ஏற்பாடுகள் தீவிரம்

Vijay students meet : நாளை விஜய் பேசப்போகும் அரசியல் என்ன ? கட்சித் துவங்கிய பின் முதல் நிகழ்ச்சி ..! ஏற்பாடுகள் தீவிரம்