மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
Peri Peri Paneer Sandwich: சுவையான பெரி பெரி பனீர் சாண்ட்விச்! எப்படி செய்வதென்று பார்க்கலாமா?
சுவையான பெரி பெரி சாண்ட்விச் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
காலை உணவுக்கு ஆரோக்கியமான சுவையான பெரி பெரி பனீர் ரெசிபியை செய்வது மிகவும் எளிமையானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த சாண்ட்விட்சை விரும்பி சாப்பிடுவர். வழக்கமான சாண்ட்விச்களை காட்டிலும் இது சுவை மிகுந்ததாக இருக்கும். மசாலாக்கள், குடை மிளகாய், பனீர் உள்ளிட்டவை சேர்ந்து சாண்ட்விச்சை மேலும் சுவையாக மாற்றும். இதை நீங்கள் காலை உணவாகவும், மாலை நேர ஸ்நாக்ஸ் ஆகவும் சாப்பிடலாம். வாங்க பெரி பெரி பனீர் சாண்ட்விட்ச் எப்படி செய்வதென்று பார்க்கலாம்
தேவையான பொருட்கள்
பெரி பெரி மசாலாவுக்கு
- 2 டீஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள்
- 1/2 தேக்கரண்டி கருப்பு உப்பு
- 1/4 தேக்கரண்டி இலவங்கப்பட்டை தூள்
- 1 தேக்கரண்டி பூண்டு தூள்
- 1 தேக்கரண்டி இஞ்சி தூள்
- 1 தேக்கரண்டி ஆர்கனோ
- 1 தேக்கரண்டி தூள் சர்க்கரை
- 1/2 தேக்கரண்டி உப்பு
சாண்ட்விச் ஸ்டஃபிங்கிற்கு
- 200 கிராம் பனீர்
- 1/4 கப் குடைமிளகாய், பொடியாக நறுக்கியது
- 1/2 கப் வெங்காயம், நறுக்கியது
- 1/4 கப் தக்காளி, நறுக்கியது
- 2 டீஸ்பூன் மயோனைஸ்
- 1/2 டீஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ்(பொடியாக நறுக்கிய காய்ந்த மிளகாய்)
- 1/2 தேக்கரண்டி கருப்பு மிளகு
- உப்பு சுவைக்கேற்ப
- 4 ரொட்டி துண்டு
செய்முறை
1.ஒரு பாத்திரத்தில் குடமிளகாய், வெங்காயம், தக்காளி மற்றும் மயோனைஸ் ஆகியவற்றை சேர்க்கவும்.
2. சில்லி ஃப்ளேக்ஸ், சுவைக்கேற்ற உப்பு சேர்த்து, பெரி மசாலாவிற்கு கொடுக்கப்பட்டுள்ள சிவப்பு மிளகாய் தூள், கருப்பு உப்பு, இலவங்கப்பட்டை உள்ளிட்டவற்றை சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கலந்து விட வேண்டும். இதனுடன் குடைமிளகாய் தக்காளி வெங்காயம் சுவைக்கேற்ப உப்பு உள்ளிட்டவற்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
3.பனீரை சிறு துண்டுகளாக நறுக்கி இந்த கலவையில் சேர்க்க வேண்டும். நீங்கள் விரும்பினால், நீங்கள் இதில் சிறிது சீஸ் அல்லது சில்லி பூண்டு சாஸ் சேர்த்துக் கொள்ளலாம்.
4.ஒரு ப்ரெட் ஸ்லைஸில் வெண்ணெய் தடவி அதன் மீது தயாரித்து வைத்துள்ள ஸ்டஃபிங்கை பரப்பி, மற்றொரு பிரட் ஸ்லைஸால் மூடி வைக்க வேண்டும்.
5. இப்போது சாண்ட்விச்சை கிரில் செய்து சூடாக பரிமாறலாம். அவ்வளவுதான் சுவையான பெரி பெரி பனீர் சாண்ட்விட்ச் தயார். இதை மயோனஸ் அல்லது கெட்செப் உடன் வைத்து சாப்பிடலாம்.
மேலும் படிக்க
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
ஐபிஎல்
ஐபிஎல்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion