Onion Coconut Milk Gravy :சப்பாத்திக்கு புதுவித சைட்டிஷ் ரெசிபி.. வெங்காய தேங்காய் பால் கிரேவி செய்முறை இதோ!
வெங்காய தேங்காய்ப்பால் கிரேவி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
ஒரு பெரிய தேங்காயின் அரை மூடி தேங்காயை அரைத்து பால் எடுத்துக்கொள்ள வேண்டும். சிறிய தேங்காயாக இருந்தால் ஒரு தேங்காயின் பாலை அரைத்து எடுத்துக் கொள்ளலாம். முதலில் எடுக்கும் ஒரு கப் திக்கான தேங்காய் பாலை தனியே வைத்து கொள்ளவும். இரண்டாவதாக எடுக்கும் தேங்காய் பால் சற்று தண்ணீராக இருக்கும் இதை தனியே வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு மேஜைக் கரண்டி எண்ணெய் சேர்த்து, காய்ந்ததும் ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் கடலை பருப்பு சேர்க்கவும்.
கடலை பருப்பு சிவந்ததும் அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் சோம்பு, 10 பல் நறுக்கிய பூண்டு, பொடியாக நறுக்கிய 4 பச்சை மிளகாய், சிறிது கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்க்கவும். பச்சை வாசம் போகும்வரை வதக்கி விட்டு, நறுக்கிய கால் கிலோ வெங்காயத்தை இதில் சேர்த்து இதனுடன் கால் ஸ்பூன் உப்பு சேர்த்து கண்ணாடிப்பதம் வரும் வரை வதக்கவும். இன் சிறிது பெருங்காயத்தூள், கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விட்டு, இதனுடன் இரண்டாவதாக அரைத்த தேங்காய் பாலை ஒரு கப் சேர்க்கவும். இது ஒரு கொதி வந்ததும் நறுக்கிய மீடியம் சைஸ் தக்காளியை இதனுடன் சேர்க்கவும். இதை மூடி போட்டு இரண்டு நிமிடம் வேக விடவும்.
இரண்டு டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்து, அதில் அரை கப் தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து, இதை ரெசிபியில் சேர்த்து கலந்து விட்டு ஒரு நிமிடம் மூடி போட்டு வேக விடவும். முதலில் அரைத்து பிழிந்து எடுத்து ஒரு கப் திக்கான தேங்காய் பாலை சேர்த்து கலந்து விடவும்.
பின் அரை ஸ்பூன் கரம் மசாலா பொடி சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து, நறுக்கிய சிறிது கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும்.