மேலும் அறிய
Advertisement
Oats Moong Dal Tikki : ஓட்ஸ், பாசிப்பருப்பு.. குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் கொடுக்க சத்தான, சுவையான சில்லா ரெடி..
ஓட்ஸ் மற்றும் பாசிப்பருப்பைக் கொண்டு எப்படி சுவையான சில்லா செய்வதென்று பார்க்கலாம்.
சில்லாக்கள் மிகவும் சுவையானவை. இவற்றை ஸ்நாக்ஸஸாக சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும். ஓட்ஸ் மற்றும் பாசிப்பருப்பு கொண்டு தயாரிக்கப்படும் இந்த சில்லாக்கள் மிகவும் சுவையானதாக இருக்கும். மேலும் குறைந்த நேரத்தில் இந்த சில்லாக்களை செய்து விட முடியும். வாங்க இந்த ரெசிபியை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- 3/4 கப் பாசி பருப்பு
- 3/4 கப் ஓட்ஸ்
- 1 வெங்காயம், பொடியாக நறுக்கியது
- 1 கேரட், துருவியது
- 1 டீஸ்பூன் தயிர்
- 1 தேக்கரண்டி கரம் மசாலா
- 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்
- ருசிக்கேற்ப உப்பு
- 1 டீஸ்பூன் எண்ணெய்
- ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை
- தண்ணீர், தேவைக்கேற்ப
செய்முறை
1.முதலில், பருப்பை நன்றாகக் கழுவி, தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இப்போது, சிறிது தண்ணீர் சேர்த்து பிரஷர் குக்கரில் சேர்த்து நன்றாக மசியும் அளவிற்கு வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
2.ஒரு பாத்திரத்தில் ஓட்ஸைச் சேர்த்து, பொன்னிறமாக மாறும் வரை வறுக்க வேண்டும். ஆறியதும், மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைக்க வேண்டும். (சில்லா பூசுவதற்கு சிறிதளவு அரைத்த ஓட்ஸை எடுத்து வைத்து விட வேண்டும்)
3.ஒரு பாத்திரத்தில், மசித்த பருப்பு, துருவிய கேரட், வெங்காயம் மற்றும் அரைத்து வைத்துள்ள ஓட்ஸ் ஆகியவற்றை சேர்க்கவும்.
4.அடுத்து, சிவப்பு மிளகாய் தூள், கரம் மசாலா, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இதில் தயிர் சேர்த்து அனைத்தும் ஒன்றாக கலக்கும் வகையில் நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.
5.மாவை சப்பாத்தி செய்ய உருண்டைகள் பிடிப்பது போன்று பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அவற்றை கைகளாலேயே வட்ட வடிவில் சில்லாக்களாக தயாரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
6.ஒரு கடாயில் சிறிது எண்ணெயை சூடாக்கி அதில் தயாரித்து வைத்துள்ள சில்லாக்களை சேர்த்து இருபுறமும் பொன்னிரமாக வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். ( அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக வைத்தால்தான் சில்லாவின் உட்புறம் நன்றாக வெந்து மேற்புறம் பொன்னிறமாக இருக்கும். )
7. அவ்வளவுதான் சுவையான ஓட்ஸ் பாசி பருப்பு சில்லாக்கள் தயார். இதை புதினா அல்லது கொத்தமல்லி சட்னியுடன் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
மேலும் படிக்க
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
சென்னை
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion